Thursday, June 20, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(88)

தியாகராஜ  சுவாமிகளின் 
சிந்தனைகள்(88)



























அன்னை திரிபுரசுந்தரியே!
உன் பக்த கோடிகளுள் என்னையும்
கடாட்சித்து காப்பாற்று.

கீர்த்தனை(477)-சுந்தரி  நந்நிந்த ரிலோ..
ராகம்-பேகட -தளம்-ரூபகம். 

ஸ்வாமிகள் திருவொற்றியூரில் திரிபுரசுந்தரியை 
தரிசித்தபோது இயற்றிய கீர்த்தனை 

அன்னை திரிபுரசுந்தரியே!

உன் பக்த கோடிகளுள் என்னையும்
கடாட்சித்து காப்பாற்று.

மதிவதனியே!
இது இரைச்சலென்று
கருதித் தாமதம் செய்யாதே

பால திரிபுரசுந்தரி!
தேவர் குழாம்களைக் காப்பவளே!
பிரபஞ்சத்தை விளையாட்டாக படைத்தவளே!
நெற்றியில் திலகமணிந்தவளே!
உன்னிடம் பக்தி செலுத்துவதே சிறந்தது

உன் கருணை வராததேன் தாயே?
சரஸ்வதியால் வணங்கப் பெறுபவளே!
கரத்தில் கிளியை ஏந்தியவளே!
ஆதி சேடனை யொத்த சடையை உடையவளே!
லலிதே !
மங்களம் பொருந்தியவளே!
பரமசிவன் நாயகியே!
இன்மொழியாளே !

உன்னை நம்பினேன்
மலர்க் கூந்தலுடைய தாயே!
சமுத்திர ராஜன் துதிக்கும் கம்பீரமுடையவளே !
திருவொற்றியூரில் விளங்குபவளே !
எளிய மாந்தரின் ஆதாரமெ!
மலையரசன் மகளே!

கொடிய கர்மங்களை அகற்றுபவளே!
தியாகராஜன் நாடும் அன்னையே !

மிக அருமையான  பிரார்த்தனை பாடல். 
அன்னையை அனுதினமும் 
துதித்து அருள் பெறலாம். 

5 comments:

  1. படமும் பதிவும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பிரார்த்தனை பாடல் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  3. மிக அருமையான பிரார்த்தனை பாடல்.
    அன்னையை அனுதினமும்
    துதித்து அருள் பெறலாம்.

    பயனுள்ள துதி..பாராட்டுகள்..

    ReplyDelete