Tuesday, June 18, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(85)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(85)






இராமா!
மெச்சுதலுக்காகச் செல்வர்களைப் பார்த்து 
வியந்தா நான் பஜனை செய்தேன்?

கீர்த்தனை (207)-தப்பக நே வச்சுநா-
ராகம் சுத்த பங்காள (மேள-22)-தாளம்-ரூபகம்

இராமா !
மெச்சுதலுக்காகச் செல்வர்களைப் பார்த்து  
வியந்து (உன் பஜனையை மறந்தால் )
உனது கிருபை கிடைக்காமற் போய்விடும்.

இவ்வுடலுக்கு ஆபத்தே உண்டாகும்

பணத்திற்காகவும் ,வெளிப் பகட்டிற்க்காகச்
சிறந்த ஆடைகளுக்காகவும் உணவிற்காகவும்
நோய்க்காக மட்டும்  நான் உன்னை
தியானம் செய்திருந்தால்
உனது கருணை கிடைக்காமலேயே
போய்விடும்

ஸ்வாமிகள் இந்த கீர்த்தனையில் ஒரு ராம பக்தன் 
பிறர் மெச்சவேண்டும் என்பதற்காகவும், 
வெளி பகட்டிர்க்காகவும், பிறரிடம் ஆடைகள், 
உணவுகள் போன்றவற்றை எதிர் பார்த்தும் 
தியானம் செய்யக்கூடாது என்பதை சுட்டிக் காட்டுகிறார் 

அவ்வாறு செய்தால்  மனம் கெட்டு,அதனால் 
உடலும் கெட்டு செய்த  பக்தி எல்லாம் 
விழலுக்கு இரைத்த நீர்போல் வீணாகிவிடும்.


எனவே இது குறித்து ராம பக்தன் 
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் 

4 comments:

  1. //எதிர் பார்த்து தியானம் செய்யக்கூடாது என்பதை சுட்டிக் காட்டுகிறார் //

    எதையும் எதிர்பார்க்காமல் என்ன ஒரு பகவத் தியானம் வேண்டிக்கிடக்குது என, ஞானமில்லாத, என்னைப்போன்ற சிலர் கேட்கக்கூடும்.

    //எனவே இது குறித்து ராம பக்தன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் //

    நல்லதொரு நியாயமான எச்சரிககை தான்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஸ்வாமீ.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன்
      உண்மையான தியானம் என்றால் என்ன தெரியுமா?

      எந்த சிந்தனைகளுமே இல்லாது இருத்தல் தான்

      உண்மையான தியானம். மனதிலிருந்து எழும் எண்ண
      அலைகளை வெறுமனே சாட்சியாக கவனிப்பது.

      ஒரு கால கட்டத்தில் மனதில் உள்ள அனைத்து எண்ணங்களும் வெளியேறிவிடும்.

      அப்போது மனம் என்று ஒன்று இருக்காது.

      அப்போது ஆன்மா மட்டும் இருக்கும்.

      அந்த நிலையை அடைய பல பிறவிகள் எடுக்கவேண்டும்
      தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்தால்.மட்டுமே.

      Delete
  2. உள்ளார்த்தமாக தியானம் இருக்க வேண்டும் என்று அருமையாக சொல்லி விட்டீர்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete