தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள் (54)
ரகுநாதனே!
என்றும் என்னை காப்பாயாக!
(கீர்த்தனை-70-மாமவ ஸததம் ரகுநாத -ஆகம்-ஜகன் மோஹினி-தாளம்-ஆதி )
ரகுநாதனே!
என்றும் என்னை காப்பாயாக!
ஒளி வீசும் சூரிய வம்சமென்னும்
கடலில் உதித்த சந்திரனே!
அண்டியவர்களுக்கு
நற்பயன்களை நல்குபவனே!
நற்குண நிதியே !
பக்தியின்றி சாத்திரம்
பயின்றவர்களுக்கு எட்டாதவனே!
தாமரைக் கண்ணனே!
அரசகுமாரனே!
சக்தி முனிவரின் புதல்வனான
வசிஷ்டன் இதயத்தில் அமர்ந்தவனே !
ரகுவீரனே!சாந்த நிர்விகாரனே!
நியாயமான பேச்சையுடையவனே!
மேருவையொத்த தீரனே!
பாம்பனை மேல் துயில்பவனே !
முனிவரால் சூழப்படுபவனே!
காமம், மோகம், மதம்,
ஆகியவற்றை விட்டவனே!
கம்பீரம் நிறைந்தவனே!
தியாகராஜனின் எதிரிகளென்னும்
மேகத்தை கலைக்கும் பெருங்காற்றே !
மிக அருமையான
பொருள் பொதிந்த கீர்த்தனை.
இன்று யார் வேண்டுமானாலும்
சாத்திரங்களை பயில்கிறார்கள்.
தகுதியுள்ள உத்தம அதிகாரிகளிடம்
பயில்வதுகிடையாது .
நாத்திகர்களும் ,இந்து மதத்திற்கு
எதிரானவர்களும்
பயின்று அதன் உண்மை தத்துவங்களை
அறிந்துகொள்ளாது தங்கள்
துர்ப் பிரசாரத்திற்கு
பயன்படுதிக்கொள்கின்றனர்.
அதற்க்கு அப்பாவி மக்களும்,
உண்மை பொருளறியாத
படித்தவர்களும் பலியாகின்றனர்.
அப்படி பக்தியின்றி சாத்திரம் பயின்றவர்களுக்கு
எட்டாத பொருள் ராமன் என்கிறார் ஸ்வாமிகள்.
எனவே ஸ்ரீ ராமனை அடைவதற்கு
பக்தி அவசியம் என்பதை
இந்த கீர்த்தனையில் வலியுறுத்துகிறார்.
பக்தனுக்கு சோதனைகள் என்ற பெயரில்
அவன் பக்தியை குலைக்க மனதிலும்,
புற உலகிலும் ஏராளமான எதிரிகள் உண்டு.
அதனால்தான்அவர்களிடமிருந்து
என்றும் என்னை காப்பாயாக என்று
ரகுநாதனான ஸ்ரீ ராமனிடம் பிரார்த்தனை செய்கிறார்.
நாமும் பிரார்த்தனை செய்வோம்.
மிக அருமையான
ReplyDeleteபொருள் பொதிந்த கீர்த்தனை.
பிரார்த்தனை பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...
பாராட்டிற்கு நன்றி
Deleteபக்தி அவசியம்...
ReplyDeleteஅருமையான கீர்த்தனை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
//பக்தனுக்கு சோதனைகள் என்ற பெயரில் அவன் பக்தியை குலைக்க மனதிலும்,
ReplyDeleteபுற உலகிலும் ஏராளமான எதிரிகள் உண்டு. அதனால்தான்அவர்களிடமிருந்து
என்றும் என்னை காப்பாயாக என்று ரகுநாதனான ஸ்ரீ ராமனிடம் பிரார்த்தனை செய்கிறார்.//
அருமையான பிரார்த்தனை. பாராட்டுக்கள்,. பகிர்வுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கு நன்றிVGK
Delete