தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(78)
ஸ்ரீ இராமா ஊருக்காகவா
நான் உன்னை நம்பினேன்?
கீர்த்தனை(275)
தண்டமு பெட்டே நிரா கோதண்டபாணி
ராகம்-பலஹம்ச-தாளம்-ஆதி
கோதண்டத்தை தரித்தவனே !
உன்னை வணங்குகிறேன்
தயையுடன் என்னை நோக்கு
கருட வாகனனே!
சூரிய சந்திரரை கண்களாக உடையவனே!
பாம்பணைத் துயில்வோனே!
பிரமாண்ட நாயக!
நற்பெயருக்காகவா,கீர்திக்காகவா அல்லது
ஊருக்காகவா நான் உன்னை நம்பினேன்?
இவ்வூராரும்தெரு மக்களும்
ஒரே ஜாதியை (இயல்பை)
உடையவர்கள் அல்லர்.
உன்னை வந்தடைந்த
என்னைக் கைதூக்கி காத்தருள்.
உண்மை பக்தர்களை இந்த உலகம் என்றும்
புரிந்துகொள்வதில்லை
அவர்கள் வாழும் காலத்தில்
புரிந்துகொண்டதுமிலை.
அவர்கள் இந்த உலகத்தை விட்டு நீங்கியபின்
கோயில் கட்டி சிலை வைத்து,கொண்டாடும்.
ஆனால் போலிகளை மட்டும்
அவர்கள் வாழும் காலத்திலேயே
தலையில் தூக்கி வைத்து
கொண்டாடும் உலகம் இது
உண்மை பக்தன் இறைவனை தவிர
எதையும் எதிர்பார்ப்பதில்லை.
அவனால் இந்த உலக மாந்தர்களுக்கு
பயனில்லை.
அதனால் அவர்களை இந்த உலகம்
துன்புறுத்தி மகிழும்
திருவண்ணா மலையில் யோகி ராம் சூரத் குமார்
தங்கியுள்ள வீட்டின் பின்புறம்
அவர் நடக்கும் வழியில் கண்ணாடி துண்டுகளை
போட்டுவைத்துஅவரை
துன்புறுத்தியது ஒரு கூட்டம்.
அவர் நடக்கும்போது அவர் மீது கற்களை
வீசியது ஒரு கூட்டம்.
பிறகு அவரை தெய்வமென கொண்டாடியது
பின்னாளில் ஒரு கூட்டம்.
ஆனால் உண்மை பக்தன் அனைத்தும்
இறைவன் செயல் என்றெண்ணி
அமைதியாய் இருப்பான்.
அவன் தன்னை துன்புறுத்துபவர்களையும்
இறைவடிவமாகவே காண்பான்.
pic-courtesy-googleimages
/// உண்மை பக்தன் அனைத்தும் இறைவன் செயல் என்றெண்ணி அமைதியாய் இருப்பான்... ///
ReplyDelete100% உண்மை...
100% உண்மை...DD
Deleteஆஹா, இன்று அடுத்தடுத்து எத்தனை சிந்தனைகள் ........ ராமா!.
ReplyDeleteகொடுத்து வைத்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் படிக்க.
/அவன் தன்னை துன்புறுத்துபவர்களையும் இறைவடிவமாகவே காண்பான்.//
ஹைய்யோ ! ;)))))
நன்றி VGK
Deleteஉலகெங்கிலுமிருந்து
தன்னைதேடி வந்த
பக்தர்களை தன் அன்பினால் ஆட்கொண்ட
யோகி ராம் சூரத் குமாரின் வாழ்க்கை சரிதம்
அற்புதமானது.
பல ஆயிரம் மக்களின்
கண்ணீரை மாற்றிய அந்த மாகானுக்கு
அறியாமையால் இந்த உலக மக்கள்
அளித்த துன்பங்களும் கொடுமைகள்
ஏட்டில் அடங்கா
அதை படிப்பவர் கண்களில்
கண்ணீரை வரவழைக்கும்.
புழுதியில் புரண்ட அந்த மகான்
தன்னை நாடி வந்தவர்களின்
மன அழுத்தத்தை போக்கியவர்
மனதில் ஓடும் அழுக்காற்றை
வற்ற செய்தவர்
அவர் பூத உடலை உகுத்தாலும்
உலகெங்கிலும் அவர் பக்தர்களுக்கு
உள்ளொளியாய் வலம் வந்து
நன்மை அளிப்பவர்
யோகிராம் சூரத் குமார்
யோகிராம் சூரத் குமார்
யோகிராம் சூரத் குமார்
ஜயகுருராயா