தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(77)
ஸ்ரீராமா!
என்னை காக்க இதுவே தருணம்!
கீர்த்தனை(2030-சரசீருஹாநந ராம
ராகம்-முகாரி- தாளம்-தேசாதி
பங்கய வதனனனே !
இராம!
சைதன்ய ரூபத்தால் சிறந்தவனே!
என்னைக் காக்க இதுவே தருணம் !
பிற பெண்டிரைப் போற்றி அன்னமளித்து
அவர்களுடன் இரவு பகலாக
சரசம் புரிபவர்களுடன் நான்
உறவாடமாட்டேன்
பிராமணீயம் மறைந்துபோக
நீசர்களின் பிழைப்பை
மேற்கொண்டனர்
மேலும் இக்கலியில் மாந்தர்
போலி வேதாந்தம் பேசக் கற்று
வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஒரு ராம பக்தன் நீசர்களின் தொடர்பையும்
உலக மோகத்திலும், போகத்திலும் மூழ்கி
மதி மயங்கி கிடக்கும் மாந்தர்களின்
தொடர்பை நட்பை விலக்கவேண்டும்
.இல்லாவிடில் அந்த பக்தனும்
அவர்கள் மாரீசன் போல் விரிக்கும் வலையில்
விழுந்து மோசம் போய்விடுவான். .
அதுபோல். எந்த சாதனையும் செய்யாமல்
போலிவேதாந்தம் பேசி திரியும்
மெத்த படித்த பண்டிதர்களுடனும்,
அரைகுறையாக அங்கொன்றும்
இங்கொன்றுமாக சாத்திரங்களை
படித்துவிட்டு எல்லாம் அறிந்ததுபோல்.
பிதற்றி திரியும் மனிதர்களிடமும் அவன்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
.
எப்போதும் இராமபிரானின் சிந்தனையாகவே
இருந்துகொண்டு ,விளம்பரம் தேடாது
எளிய வாழ்க்கை வாழவேண்டும்.
ஆனால் இந்த கலி காலத்தில்
அவ்வாறு இருப்பது மிக கடினம்
.மற்றவர்கள் அந்த பக்தர்களை
தங்கள் வழிக்கு கொண்டுவர
முயற்சிப்பார்கள்
அதனால்தான் ஸ்வாமிகள்
இராமபிரானை வேண்டுகிறார்.
இராம ! இதுபோன்ற சூழ்நிலையில்
என்னை காக்க இதுவே தருணம் என்று.
நாமும் நம்மை உலக மாயையில்
சிக்காது காக்க அவன்
தாள்களை பணிந்து வேண்டுவோம்
pic-courtesy-google-images
சிந்தனைகள்(77)
ஸ்ரீராமா!
என்னை காக்க இதுவே தருணம்!
கீர்த்தனை(2030-சரசீருஹாநந ராம
ராகம்-முகாரி- தாளம்-தேசாதி
பங்கய வதனனனே !
இராம!
சைதன்ய ரூபத்தால் சிறந்தவனே!
என்னைக் காக்க இதுவே தருணம் !
பிற பெண்டிரைப் போற்றி அன்னமளித்து
அவர்களுடன் இரவு பகலாக
சரசம் புரிபவர்களுடன் நான்
உறவாடமாட்டேன்
பிராமணீயம் மறைந்துபோக
நீசர்களின் பிழைப்பை
மேற்கொண்டனர்
மேலும் இக்கலியில் மாந்தர்
போலி வேதாந்தம் பேசக் கற்று
வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஒரு ராம பக்தன் நீசர்களின் தொடர்பையும்
உலக மோகத்திலும், போகத்திலும் மூழ்கி
மதி மயங்கி கிடக்கும் மாந்தர்களின்
தொடர்பை நட்பை விலக்கவேண்டும்
.இல்லாவிடில் அந்த பக்தனும்
அவர்கள் மாரீசன் போல் விரிக்கும் வலையில்
விழுந்து மோசம் போய்விடுவான். .
அதுபோல். எந்த சாதனையும் செய்யாமல்
போலிவேதாந்தம் பேசி திரியும்
மெத்த படித்த பண்டிதர்களுடனும்,
அரைகுறையாக அங்கொன்றும்
இங்கொன்றுமாக சாத்திரங்களை
படித்துவிட்டு எல்லாம் அறிந்ததுபோல்.
பிதற்றி திரியும் மனிதர்களிடமும் அவன்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
.
எப்போதும் இராமபிரானின் சிந்தனையாகவே
இருந்துகொண்டு ,விளம்பரம் தேடாது
எளிய வாழ்க்கை வாழவேண்டும்.
ஆனால் இந்த கலி காலத்தில்
அவ்வாறு இருப்பது மிக கடினம்
.மற்றவர்கள் அந்த பக்தர்களை
தங்கள் வழிக்கு கொண்டுவர
முயற்சிப்பார்கள்
அதனால்தான் ஸ்வாமிகள்
இராமபிரானை வேண்டுகிறார்.
இராம ! இதுபோன்ற சூழ்நிலையில்
என்னை காக்க இதுவே தருணம் என்று.
நாமும் நம்மை உலக மாயையில்
சிக்காது காக்க அவன்
தாள்களை பணிந்து வேண்டுவோம்
pic-courtesy-google-images
நீங்கள் சொல்லும் மனிதர்கள் தான் நிறைய உள்ளார்கள்... நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் உண்மை... நன்றி ஐயா...
ReplyDeleteஉண்மை.
Deleteஉண்மை.
உண்மை.
நன்றி DD
//எப்போதும் இராமபிரானின் சிந்தனையாகவே இருந்துகொண்டு ,விளம்பரம் தேடாது எளிய வாழ்க்கை வாழவேண்டும்.
ReplyDeleteஆனால் இந்த கலி காலத்தில் அவ்வாறு இருப்பது மிக கடினம்//
இந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது மிகவும் சரியான உண்மையான யதர்த்தமான வாக்கியம். ;)
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.