சிந்தனைகள்(65)
ஸ்ரீராமா .பெரியோர்களுடையதைப்
போன்ற புத்தியை எனக்கு
நீ அருளாததேன்?
கீர்த்தனை(312)-எந்துகு -பெத்த லவலே-
ராகம்-சங்கராபரணம்-தாளம்-தேசாதி.
பெரியோர்களுடையதைப்
போன்ற புத்தியை எனக்கு
நீ அருளாததேன்?
நான் எங்கே போவேன் ?
இராமய்ய !
எல்லோரையும்போல் இறுமாப்படைந்து
இங்குமங்கும் குதித்துப் பிதற்றினேன்
அதனால்தான் என்னவோ உன் அருள் எட்டா கனியாகிவிட்டதோ ?
வேத சாஸ்திரங்களின் உட்பொருளை நான் அறிந்தும் வேறுபாடில்லாத வேதாந்தங்களை அறிந்தும் நாதோபாசனையின்இரகசியங்களை அறிந்தும் உண்மையில் மகான்களைப் போன்ற புத்தியை எனக்கு நீ அளிக்காததேன். ?
எல்லாம் அறிந்தும்
ஏதும் அறியாதவன் போல்
இருத்தல்தான்
ஒரு பக்தனுக்கு அழகு.
அதுதான் அவனுக்கு பலம்.
ஒரு மனிதன் எவ்வளவு
அறிவாளியாய் இருந்தாலும்.
அவன் புலன்களை கட்டுபாட்டில்
வைக்காவிடில் அனைத்தும் வீண்.
அவனால் இறைஅருள் பெறமுடியாது.
அதனால்தான் தொண்டரடி பொடிஆழ்வார்
அரங்கனிடம் இந்த உலகில் பட்ட துன்பங்கள் போதும்
என்று அவர் மீது மனமிரங்கி'போதரே என்று புந்தியில்
புகுந்து ஆதரம் பெருக வைத்தாய்' என்று
அரங்கனின் கருணையை பாடுகிறார்.
இறைவன் நம்முடைய புத்தியில்
புகுந்து நம்மை வழிநடத்தினால் மட்டுமே
மாயையிலிருந்து விடுபடமுடியும்
அல்லாது நம்முடைய முயற்சிகள்
பலனளிக்காது என்பது
இந்த கீர்த்தனையின் மூலம்
ஸ்வாமிகள் வெளிப்படுத்துகிறார்.
Pic-courtesy-google-images.
/// ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அவன் புலன்களை கட்டுபாட்டில் வைக்காவிடில் அனைத்தும் வீண்... ///
ReplyDeleteவிளக்கம் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...
நன்றி.DD
ReplyDelete//எல்லாம் அறிந்தும் ஏதும் அறியாதவன் போல் இருத்தல்தான் ஒரு பக்தனுக்கு அழகு. அதுதான் அவனுக்கு பலம்.//
ReplyDeleteநல்லவேளையாக நான் நிஜமாலுமே ஏதும் அறியாதவனாகவே உள்ளேன். நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.
நன்றிVGK
Delete