Monday, June 24, 2013

தெய்வம் மானுஷ ரூபேண என்கிறது வேதங்கள்


தெய்வம் மானுஷ ரூபேண 
என்கிறது வேதங்கள்

வடிவங்கள் மாறும்,
வடிவங்கள் மறைந்து புதிது புதிதாய்
தோன்றிக் கொண்டுதான் இருக்கும்

இந்த உலகில். நம் வடிவத்திற்குள்
இருந்து ஆட்சி செய்யும், நம்மை
இயக்கிகொண்டிருக்கும்
ஆத்ம ஸ்வரூபத்தைதான்
அறிந்துகொண்டு உபாசிக்க
கற்றுக் கொள்ளவேண்டும்

அப்போதுதான் ராக தேவேஷம்
(விருப்பு-வெறுப்பு)மறைந்து உண்மையான
அன்பை நாம் பெறமுடியும்.
உணரமுடியும், அதை மற்றவர்களிடம்
கண்டு தெய்வீக ஞானத்தை  அடையமுடியும்.
.
தெய்வம் மானுஷ ரூபேண
என்கிறது வேதங்கள்

எல்லோருள்ளும் இருப்பது
ஒரே வஸ்து






எல்லோருள்ளும்
எல்லா உயிர்களுக்குள்ளும் இருப்பது
அந்த பரமாத்மாவான ஸ்ரீ வாசுதேவன் தான்
என்றும்  அவனுக்கு நமஸ்காரம்
என்று விஷ்ணு சஹஸ்ரநாமம் கூறுகிறது.






ஆதி சங்கரரும் பரமேஸ்வரனே அவருக்கு
கள் கலயத்தை கையில் ஏந்தி நாலு வேதங்களின்
வடிவமான நாய்களுடன் அவர் எதிரில் தோன்றி
காட்சி தந்து அவருக்கு அருளிய உபதேசத்தை
தனது  மனீஷா பஞ்சகம் என்ற நூலில்
இந்த உடல் என்னும் கூட்டிற்குள் இருக்கும்
ஆத்மா வஸ்துவை நான் வணங்குகிறேன்
என்று கூறுகிறார்(விளக்கம் வேண்டுவோர் https://groups.google.com/forum/#!msg/mintamil/fsz16eyJOh4/shveOeNsdnQJ
இந்த இணைப்பில் சென்று
அதன் பொருள் அறியலாம்


ஆனால் அந்த உண்மையை
உணர்ந்தவர்கள் உலகில் பலர் உண்டு.

அப்படிப்பட்டவர்கள் எத்தனையோபேர்
இந்த உலகையும், உலகமக்களையும் கரையேற்ற
அவரவர்களுக்கு உரித்தான வழியில் அயராது
ஆன்மீக பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் மாதா அம்ருதானந்தமயீ
அவர்களின் பணி மகத்தானது.

மீனவ குலத்தில் பிறந்த பெண்மணி.
அன்னை சாரதாதேவிபோல் வாழ்வில்
இறைவன் அளித்த பல நினைத்து
பார்க்க முடியாத கடும் சோதனைகளை
எதிர்கொண்டு,இறைவன் அருளால்
தேர்ந்து தெய்வீக தரிசனம் பெற்று
இன்று தவறான வழியில் சென்று விட்ட
இந்த மானிடம் நன்றாக வாழ வழி கட்டும்
கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.

இந்த உலகில் உள்ள அனைவரையும், அது குழந்தைகளாகட்டும்,பெரியவர்களாகட்டும்,
எந்த,நாடு,எந்த மதம் என்று பாராமல்
அரவணைத்து உயிர்களையும் நேசித்து
அன்பு காட்டும் தெய்வீகபெண்மணி.

ஒரு அரசு செய்யமுடியாத தர்ம காரியங்களையும்,
துயர் துடைப்பு பணிகளையும் தனி மனிதராக
அனைத்து நல்ல உள்ளங்களையும் ஒன்றிணைத்து
உலகெங்கிலும்உள்ள  பல நாடுகளுக்கு வருடம்
முழுவதும் சுற்று பயணம் பல
ஆண்டுகளாக  சென்று தனது
தெய்வீக கானங்களினால் மக்களை
அன்பினால் ஒன்றிணைத்து ஆன்மீக
செல்வத்தை வாரி வழங்கும் வள்ளல் அவர்.

அவர் போல் இன்று வருடம் முழுவதும்
சளைக்காமல் ஆன்மீக பணி செய்பவர்கள்
இன்று உலகில் யாரும் இலர்.





அன்பின் வடிவமாக,
வற்றாதஆற்றலின் சக்தியாக
கோடானகோடி மக்களின்
துன்பங்களை துடைக்கும் தாயாக ,
பல்லாயிரக்கணக்கான சாதகர்களின்
ஆன்மீக குருவாக விளங்கும்
அவளை வாழ்வில் ஒரு முறையாவது
தரிசிப்பது அவசியம்.

சிலர் ஏற்கெனவே ஒரு குருவை
தம் வழிகாட்டுதலாக வைத்திருப்பதால்
இவரை ஏன் தரிசிக்க வேண்டும்
என்று நினைக்கலாம்

இவர் ஒன்றும் யாரையும்
மத மாற்றம் செய்யும் போதகரல்ல

இவரை தரிசிப்பதால்
அன்பின் உண்மையான பரிமாணத்தை
நாம் நிச்சயம் உணரமுடியும்.

அது நம் வாழ்வில் அமைதியையும்
ஆனந்தத்தையும் அருளும்
என்பதில் ஐய்யமில்லை.

6 comments:

  1. அந்த வஸ்துவை அறிந்து கொள்வது தான் முக்கியம் (சிரமம்...?)

    இணைப்பிற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. ஆழமான கருத்துடன் கூடிய
    அருமயான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ரமணி சார்
      வெகுநாட்களாகிவிட்டது
      நீங்கள் வருகை தந்து.
      நீங்களும் உங்களை சார்ந்தோரும்
      நலமாக உள்ளனரா?

      Delete
  3. ஆழமான கருத்துடன் கூடிய
    அருமயான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகை
      மனமார்ந்த நன்றி VGK

      Delete