Monday, June 17, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(84)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(84)

ஸ்ரீஹரி !

உன்னிடம் தவிர வேறு எங்கும் 
என்னுள்ளம் நிலைபெறாது 


Photo


கீர்த்தனை(261)-நினுவிநா-நாமதெந்து
ராகம்-நவரச கந்நட-ராகம்-ரூபகம் 

உன்னிடம்  தவிர வேறு எங்கும்
என்னுள்ளம்
நிலைபெறாது ஸ்ரீ ஹரி.!

உன்னழகைக் கண்டு
என் கண்கள் நிறைகின்றன

உன் சரிதத்தைக்
கேட்டு என் செவிகள் நிரம்பியுள்ளன

திருவளிப்பவனே!

உன் திருநாமம்
என் நாவில் விளங்குகிறது

நான் எங்கு நோக்கினும்
உன் மயமாகவே
தோற்றமளிக்கிறது

சூரிய குல திலகனே!

நான் உன் பக்தன் என்ற
பெயர் படைத்தவனல்லவா!

உன் கபடமான மொழிகளும்
எனக்கு இனிமையையே
தருகின்றன

நான் செய்த
தவத்தின் பயன் நீயே!

ஆஹா என்ன அற்புதமான கீர்த்தனை!

இந்த கீர்த்தனையை 
இசைக்காத நாதஸ்வர 
கலைஞர்கள் உண்டா?

பாடாத இசைக்கலைஞர்கள் உண்டா?

கேட்டாலே மனம் அனைத்தையும் மறந்து 
அந்த ராகத்தில் லயித்துவிடும் கீர்த்தனை அல்லவா?

நம்மை மாயையில் ஆழ்த்தி இன்பம் காணும் 
ஐம்புலன்களும் மாலவனின் வடிவையே 
காண்கின்றது,நினைக்கின்றது, 
ஆனந்தத்தில் மிதக்கின்றது.
என்னே ! அந்த ராம நாமத்தின் மகிமை

நாமும் அந்த நிலையை எட்ட 
இராம நாமத்தை விடாது சொல்லுவோம் 
அவன் வடிவத்தை மனதில் நிறுத்துவோம். 


4 comments:

  1. சிறப்பான விளக்கம் (ரசனை) எங்களுக்கும் ஆர்வத்தை கூட்டுகிறது... நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இந்த பாட்டை கேளுங்கள்.
      உங்கள் மகிழ்ச்சி இரெட்டிப்பாகும்

      Delete
  2. //ஆஹா என்ன அற்புதமான கீர்த்தனை!

    இந்த கீர்த்தனையை இசைக்காத நாதஸ்வர கலைஞர்கள் உண்டா? பாடாத இசைக்கலைஞர்கள் உண்டா?//

    பதிவிடாத [திரு] பட்டாபிராமன் ஐயா உண்டா?

    ;)))) மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஐயங்களை தீர்ப்பவர்களைதான்
      அய்யா என்றழைக்கவேண்டும்.

      நான் ஐயங்களின் மூட்டை

      Delete