Sunday, June 23, 2013

இறைவன் பாரபட்சமற்றவன்

இறைவன் 
பாரபட்சமற்றவன் 

இறைவன் பெயரால்
மோசடி செய்யாதீர்

இறைவன் பெயரை வைத்து
விளம்பரம் தேடாதீர்

இறைவன் வியாபார
பொருளல்ல

இறைவனிடம்
பேரம் பேசாதீர்

அவன் நாம் கேட்டதையெல்லாம்
கேட்டவுடன் கேட்டபடி
வாரி வழங்கும் வள்ளலுமல்லன்

நாம்  பிறருக்கு கொடுத்தால்தான்
அது நமக்கு திரும்பிவரும்.

அது நன்மையோ தீமையோ
தப்பாமல் வரும்

அந்த செயல்பாட்டை
சரியாக செயல்பட செய்பவர்கள்தான்
கோள்களின் நாயகர்கள்

இறைவன் தவறு செய்பவர்களை
தடுப்பதில்லை.

ஏன்.தெரியுமா?

எது தவறு, எது அதர்மம் என்று அவனும்
அவன் அடியார்கள் மூலமும் நமக்கு தெளிவாக
காட்டியிருக்கிறான் அவதாரங்கள் மூலமும்
சாத்திர,இதிஹாச, நீதி  நூல்கள் மூலமும்

அதை உணர்ந்து அதன்படி
வாழ நமக்கு அறிவும்
சக்தியும் அளித்திருக்கிறான்

அதனால்தான் அவன்
தவறு செய்பவர்களை தடுப்பதுகிடையாது .

அதன் விளைவுகளை மனித குலம்
அனுபவித்துதிருந்த விட்டு விடுகிறான்

யாராயிருந்தாலும்
அவரவர் செய்த வினைகளின்
விளைவுகளிலிருந்து தப்ப முடியாது.

தண்டனைகளை ஏற்றுக்கொண்டு
அனுபவித்துதான் ஆகவேண்டும்.

இறைவன் பார பட்சம்
பார்ப்பதில்லை.

தவற்றை உணர்ந்து அவன் பாதம்
சரணடைந்தால் உரிய நேரத்தில்
காப்பாற்றுவான்.

இறைவனை மறவாதீர்
அவன் இல்லைஎன்று பிதற்றாதீர்.





4 comments:

  1. சரியாக... மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. //யாராயிருந்தாலும் அவரவர் செய்த வினைகளின் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. தண்டனைகளை ஏற்றுக்கொண்டு அனுபவித்துதான் ஆகவேண்டும்.

    இறைவன் பார பட்சம் பார்ப்பதில்லை. தவற்றை உணர்ந்து அவன் பாதம் சரணடைந்தால் உரிய நேரத்தில் காப்பாற்றுவான். //

    OK OK அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete