Wednesday, June 12, 2013

தியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(69)

தியாக ராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(69)






இராம தாசர்களின் நட்பை 
பெறாவிடில் புத்தி வராது 

கீர்த்தனை (314)-புத்தி ராது -புத்தி ராது 
ராகம்-சங்கராபரணம்-தாளம்-சாபு 

சிறந்த கல்வி கற்றாலும்
ஒருவனுக்கு
பெரியோர்களின் உபதேச
மொழிகளின்றி விவேக புத்தி வராது

தானியங்கள்,செல்வம்,
முதலியவற்றினால் ஏராளமாக தர்மங்கள்
செய்தாலும் ஒரே சித்தமுடைய பக்தர்களின்
நற்போதனையாகிய அமுதபானம்
செய்யாதவனுக்கு நல்லறிவு கைகூடாது.

விடாமல் பாகவதம் ராமாயணம்,
முதலிய நூல்களை படித்தாலும் பகவான்
மானிடவதாரமெடுத்த இரகசியத்தை
அறிந்தவர்களுடன் உறவாடாது
போனால் அறிவு பிறக்காது

யோகமார்க்கத்தில் ஈடுபட்டாலும்
போகங்கள் பலவற்றை அடைந்தாலும்
தியாகராஜன் வணங்கும்
இராமதாசர்கள் நட்பைப்
பெறாவிடில் புத்தி வராது.

மிக அருமையான கீர்த்தனை.

இன்று பலர் ராமாயணம், பாகவதம்
போன்ற நூல்களை கரைத்து குடித்து 
விரிவுரை செய்து நல்ல 
காசு சம்பாதிக்கின்றனர். 

ஆனால் பெரியோர்கள் காட்டிய வழியில் 
விவேக புத்தியுடன் நடக்காவிடில் 
ஒரு ஓயாமல் ஒலிக்கும் டேப்பு ரேகார்டருக்கும்
அவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. 

அதுபோல் தர்மங்கள் செய்தாலும் 
யோக மார்க்கத்தில் ஈடுபட்டாலும் 
அகந்தையை விட்டொழித்து
இராமனின் திருவடிகளிலேயே 
தன் சித்தத்தை நிலை நிறுத்திய  
ராமதாசர்களின் நட்பை பெறாவிடில் 
பயன் ஏதும் விளையாது என்று 
ஸ்வாமிகள் வலியுறுத்துகிறார். 

3 comments:

  1. //அகந்தையை விட்டொழித்து இராமனின் திருவடிகளிலேயே தன் சித்தத்தை நிலை நிறுத்திய
    ராமதாசர்களின் நட்பை பெறாவிடில் பயன் ஏதும் விளையாது என்று ஸ்வாமிகள் வலியுறுத்துகிறார். //

    //யோகமார்க்கத்தில் ஈடுபட்டாலும் போகங்கள் பலவற்றை அடைந்தாலும் தியாகராஜன் வணங்கும் இராமதாசர்கள் நட்பைப் பெறாவிடில் புத்தி வராது.//

    சூப்பர் ;))))) பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியும் உண்மை... விளக்கமும் அருமை... சிறப்பான கீர்த்தனை... நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete