Monday, June 17, 2013
தாயே திரிபுர சுந்தரி
தாயே திரிபுர சுந்தரி
திரிபுர சுந்தரி வடிவத்தை நெடுநாளாக
வரைய வேண்டும் என்ற ஆவல்.
வலை நண்பர் ஒருவர் என்னை
அன்னையின் வடிவத்தை வரையுமாறு
சில மாதங்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டார்.
வரைய தொடங்கினேன். மூன்று மாதங்களாகியும்
படம் முடிவுறவில்லை. இன்று முழு மூச்சுடன்
உட்கார்ந்து படத்தை நிறைவு செய்தேன்.
அனைவருக்கும் அன்னையின்
அருளால் பிணிகள் நீங்கி
நோயற்ற வாழ்வு கிட்டட்டும்.
தாயே திரிபுர சுந்தரி
என்ற இந்த பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.
கேட்க மிகவும் இனிமையானது.
இயற்றியவர்
பெரியசாமி தூரன்
ராகம் சுத்த சாவேரி
தாளம் கண்ட சாபு
பல்லவி
தாயே திரிபுர சுந்தரி , உமா மகேஸ்வரி ,
சியாமளே ,சௌந்தரி , தாள் இணை மலரே சரணம் .
அனுபல்லவி
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர் ,
தேனார் மொழி வள்ளி , ஜகமெல்லாம் படைத்த .
சரணம்
காமதேனு வணங்கும் கருணா ரூபிணி ,
கண் ஒளியால் கருணை காட்டும் தயாபரி ,
சாம கான மகிழ் சதா சிவா பரம் ,
எனும் தனி மருந்து உடையாய்
பிணி எல்லாம் களைவாய் .
Subscribe to:
Post Comments (Atom)
பாடல் அருமை. படம் அழகாக வந்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி VGK
DeleteThank you so much for the drawing. as well the song. The drawing is so nice. Once again i would like to invite you to visit the temple (Thirusoolam) to have the dharshan and get the blessings of the divine mother Sri Thirupurasundari amman and Lord Thirusoolanathar.
ReplyDeleteI will be available on Fridays between 5 p.m to 8.30 pm.
with warm regards
K. Panchanathan.
09962458562
Thank you very much.
DeleteSure I will visit the temple on a friday after informing you
அன்னையின் அழகிய திருவுருவத்தினை மிகச் சிறப்பாக வரைந்தமைக்கு பாராட்டுதல்கள். அன்னையின் திவ்யமான அருளின் காரணமாக மிகச் சிறப்பாக அமைந்துள்ளது! அன்னையின் பரிபூரண அருளிற்கு பாத்திரமான தங்களின் பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி
Deleteஅவள்தான் அனைத்தையும் ஆற்றுபவள்
அன்பால் யாவினையும் கூட்டுபவள். .
காமதேனு வணங்கும் கருணா ரூபிணி ,
ReplyDeleteகண் ஒளியால் கருணை காட்டும் தயாபரி ,
சாம கான மகிழ் சதா சிவா பரம் ,
எனும் தனி மருந்து உடையாய்
பிணி எல்லாம் களைவாய் .
எழில் ஓவியத்திற்குப் பாராட்டுக்கள்..
பாராட்டிற்கு நன்றி
Deleteஅழகோ அழகு... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteசின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி .........அவள் பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது ....சின்னஞ்சிறு பெண் போலே
Delete