Sunday, June 16, 2013

தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (83)

தியாகராஜசுவாமிகளின் 
சிந்தனைகள் (83)

இராமா !

யாரால் நீ உறையும் 
அயோத்யா நகரத்தைக் 
காண முடியும்?

கீர்த்தனை(131)-நடசி -நடசி சூசே ரயோத்யா
ராகம்-கரஹரப்ரிய -தாளம்-ஆதி 

சீதா சமேதனாக விளங்கும்
பூர்ணனாகிய
ஆத்மா ராமனைச்
சேரும் பொருட்டு
நடந்து நடந்து
பார்த்தும் அயோத்தியா
நகரத்தைக் கண்டிலர்.

சற்றே கண்களை மூடி திறந்தும் ,
ஜபமாலையைப் பிடித்து
 மணிகளை எண்ணியும் ,
வெளியில் வேஷதாரிகளாக நடித்து
பிறப்பு இறப்பு இல்லாத
இடம் தெரியாமல்
தெய்வத்தை புகழ்பவர்
அயோத்யா நகரத்தை
காணமாட்டார்.

மிக முக்கியமான இரகசியமான 
உண்மையினை ஸ்வாமிகள்
வெளிப்படுத்தியுள்ளார் 
இந்த கீர்த்தனையில். 

எல்லோரும் இந்த புவியில் இருக்கும்
அயோத்யா நகரம்தான் ஸ்ரீ ராமன் இருக்கும்
இடமென்று தவறாக எண்ணுகிறார்கள்
என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.





உண்மையில் நமது இதயத்தில் உள்ள
ஹ்ருதயாகாசத்தில்தான்
அவன் வாசம் செய்கிறான்
என்று தெரிவிக்கிறார்.

இதைதான் சதாசிவ ப்ரம்மேந்திரரும்
தன்னுடைய "கேலதி மம ஹருதையே "என்ற
கீர்த்தனத்தில் " ஸ்ரீராமன் வாசம் செய்யும் இடத்தை
 "தஹராயோத்யா நகர விகாரி" என்று குறிப்பிடுகின்றார்.

இந்த உண்மைகளை அறியாமல்
இராம பக்தன்போல் வேஷமிட்டுகொண்டு
நடிப்பவர்களுக்கு அந்த காட்சியை
காணும் பாக்கியம் கிடைக்காது
என்பது பொருள்.

pic-courtesy-google images

4 comments:

  1. //உண்மையில் நமது இதயத்தில் உள்ள
    ஹ்ருதயாகாசத்தில்தான் அவன் வாசம் செய்கிறான்
    என்று தெரிவிக்கிறார்.

    இதைதான் சதாசிவ ப்ரம்மேந்திரரும் தன்னுடைய "கேலதி மம ஹருதையே "என்ற கீர்த்தனத்தில் " ஸ்ரீராமன் வாசம் செய்யும் இடத்தை "தஹராயோத்யா நகர விகாரி" என்று குறிப்பிடுகின்றார்.//

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. "தஹராயோத்யா நகர விகாரி" என்பது இன்று தான் தெரியும்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் அறிந்துகொள்ளத்தான்
      இது போன்ற விஷயங்களே தேடி
      பதிவில் போடுகிறேன்

      ஆனால் யாருக்கும் இதில் நாட்டமில்லை
      என்ன செய்ய?

      நல்ல விஷயத்தில் நாட்டம் வைத்தால்
      வாட்டம் போகும்

      எதற்கும் புண்ணியம்
      செய்திருக்க வேண்டும்.

      வருகைக்கு நன்றி DD

      Delete