உண்மையான அன்பு
இதயத்தில் இருக்கிறது
இதயத்தில் இருக்கும் அன்பை
விளக்கி சொல்ல முடியாது
அதை வார்த்தைகளாக
வெளிப்படுத்த முடியாது
.இதயம் வார்த்தைகளுக்கான இடம் அல்ல.
வார்த்தைகள் அறிவிற்கு உரியவை .
அறிவு பேசமுடியும்.
ஆனால் அது ஒரு ஒலிப்பதிவு
கருவியைப் போன்றதே
அது வார்த்தைகளை பதிவு செய்து
அதே வார்த்தைகளை வெளியே
தள்ளிக் கொண்டே இருக்கிறது.
அந்த வார்த்தைகள் உணர்வற்ற
வெறும் வார்த்தைகள்.
அறிவினால் கருணையை
உணர முடியாது
அன்பையும் கனிவையும்
அறிய முடியாது
ஏனெனில் அறிவு காரணத்தை
கண்டுபிடிக்க முயலுகிறது
அன்பையும் கருணையும் கூட
அது ஆராய்ந்து பார்க்கிறது
மகனே எங்கு அளவுக்கு மீறிய
பேச்சு இருக்கிறதோ
அங்கு அன்பு இருக்காது.
அன்பு பெருகும்போது
எண்ணங்கள் மறைகின்றன.
உண்மையான அன்பு நிறைந்தவர்
ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிவிடுகிறார். .
வரைந்துள்ள படமும் அறிவுரைகளும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு ந்ன்றிகள்.
ReplyDeleteநன்றி VGK
Delete(நன்றி)கள் வேண்டாம்
அது போதை தரும்.
நல்ல அறிவுரைகள் ஐயா... நன்றி...
ReplyDelete