Thursday, June 20, 2013

மாதா அம்ருதானந்தமயி அருளுரைகள்

மாதா அம்ருதானந்தமயி அருளுரைகள் 





























கேள்வி:விஞ்ஞானிக்கும் ஞானிக்கும் 
என்ன வேறுபாடு ?

பதில்:ஒரு விஞ்ஞானி அக உலகை
விட்டு விட்டு புற உலகையே பார்க்கிறார்.

பூரணத்தை (சமஷ்டியை)விட்டு விட்டுப்
பகுதிகளில் (வ்யஷ்டியில்)
அவரது கவனத்தை செலுத்துகிறார்.

புற உலகத்திலேயே அவர்
கவனம் மூழ்கியிருப்பதால்
அக உலகத்தை பற்றிய
முழு அறிவு அவருக்கு இல்லை

அவரிடம் பல சீரிய கருத்துக்கள்  இருக்கலாம்,
குணங்கள் இருக்கலாம் ,கருத்துக்கள் இருக்கலாம்.
கூறிய மதி நுட்பம் அவருக்கு இருக்கலாம்
ஆனால் அவரது அன்பு விஞ்ஞானத் துறைக்கு
 மட்டும் ஒதுங்கிவிடுகிறது

அனைத்தையும் தழுவி நிற்கும் பேரன்பு அல்ல.அது.
உண்மையான ஒரு விஞ்ஞானி அன்பு உள்ளவராக ,
மனித குலத்தையும் உலகில் உள்ள அத்தனை
உயிரினங்களையும் நேசிப்பவராக இருக்கவேண்டும்.

ஆனால் ஒரு மகான் அல்லது ஒரு ரிஷிதான்
உண்மையான அன்பு படைத்தவர்.
ஏனென்றால் அவர் தன் ஆத்மாவின்
உள்ளே ஆழ்ந்து சென்று உயிர் மற்றும்
அன்பும் அடிப்படையை அறிந்துள்ளார்.

அன்பையும் உயிரையும் அவர் எங்கும்
மேலே ,கீழே,முன்னே, பின்னே, எல்லா
திசைகளிலும் அனுபவிக்கிறார்.
பாதாளத்திலும் ,நரகத்திலும் கூட
அவர் உயிரையும்  அன்பையுமே உணர்கிறார்.

அவரைப் பொறுத்த வரையில் எல்லாத்
திசைகளிலும் அன்பும் உயிருமே எங்கும்
ஒளிபரப்பிக் கொண்டு அற்புதமாக மிளிர்கிறது.

அவர் தனது உள்ளாமாகிய பரிசோதனைக் கூடத்தில்
சோதனைகள் செய்த கொண்டிருக்கிறார்
மக்களின் வேதனைகளை எவ்வாறு மாற்றுவது என்று.

அவர் உயிரை பிரித்து பார்ப்பதில்லை
பூரணமானதாகக் காண்கிறார்.
(இதைதான் அவ்வை மூதாட்டி
ஒன்றாக காண்பதே காட்சி 
என்று சொல்லியிருக்கிறார்) 

அந்த பூரணமான   அன்பிலும்
உயிரிலும் அவர் வாழ்கிறார்.

எனவே அவர்தான் உண்மையான
விஞ்ஞானி என்பது அம்மாவின் கருத்து.

உண்மையான விஞ்ஞானியான
ஒரு ரிஷி வாழ்வை அன்புடன் தழுவி
அத்துடன் ஒன்றாக இணைந்து விடுகிறார்.
அவர் போராடுவதில்லை.

ஆனால் ஒரு உலகியல் விஞ்ஞானி
வாழ்க்கையுடன் போராடி அதை
வெற்றி கொள்ள முயல்கிறார்.
(போராடி தோல்விதான் அடைகிறார். 
அவர் பெறும் வெற்றி நிலைப்பதில்லை. 
மீண்டும் அவரோ அல்லது  மற்றொருவரோ 
ஒரு புதிய பிரச்சினைக்காக ஆராய்ச்சியை 
தொடர வேண்டும். இதற்கு முடிவேயில்லை) 

மகானோ அதைச் சரணடைந்து
அதன் போக்கில் தன்னை அழைத்துச்
செல்ல விட்டுவிடுகிறார்.

நாமும் நம் அகந்தையை 
ஒதுக்கி தள்ளி விட்டு 
குருவின் பாதங்களை 
சரணடைவோம்
உண்மையான, நிலையான ,நீடித்த 
இன்பத்தை அடைவோம். 

(நன்றி-மாத்ருவாணி புரட்டாசி -2005 )

4 comments:

  1. /// மனித குலத்தையும் உலகில் உள்ள அத்தனை
    உயிரினங்களையும் நேசிப்பவராக இருக்கவேண்டும்... ///

    அருமை... மிக்க நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வரைந்துள்ள படமும் பதிவும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete