Saturday, June 15, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(80)

தியாகராஜ 
சுவாமிகளின் சிந்தனைகள்(80)





இராமா 
எல்லாம் இருந்தும் மன அமைதி 
இல்லாவிடில் சுகம் ஏது?

கீர்த்தனை(302)-சாந்தமு லேக சௌக்கியமு லேது 
ராகம்- சாம-தாளம்-ஆதி

கமலக்கண்ணனே!
இந்திரியங்களை வென்றவர்க்காயினும்
வேதாந்திகளுக்காயினும் சாந்தம்(அமைதி)  
இல்லாவிடில் சுகம் இல்லை

மனைவி, மக்கள்,செல்வம், முதலியன
இருந்தாலும் சதா ஜபம்,,தவம், முதலியன
செய்யும் பேறு படைத்தாலும் ,யாகம் முதலிய
சடங்குகளனைத்தையும் செய்தாலும்
சகல உள்ளக் கருத்துக்களை அறிந்தாலும் ,
வேத சாஸ்திரங்களனைத்தையும்   அறிந்தாலும்
பாகவதர்களென்று நற்பெயர் எடுத்தாலும்
ஒருவனுக்கு உபசாந்தம் எனப்பெறும்
மன அமைதி இல்லாவிடில் சுகம் கிடைக்காது

ராஜாதிராஜனே!
இராகவனே!
சாதுக்களை காப்பவனே!

மிக அருமையான பொருள் 
பொதிந்த கீர்த்தனை

எல்லாம் இருந்தாலும் அவைகள் மூலம் 
இன்பம் சிறிது காலம்தான். 

ஆனால் இறை அருளினால் கிடைக்கும்
இன்பமும் அமைதியும் நிரந்தரமானவை 
என்பதை ஸ்வாமிகள் உணர்த்துகிறார்.  
மனம் அமைதியடைய ஸ்ரீராமனிடம் 
பக்தி செலுத்தவேண்டும். 

pic-courtesy-google images 

8 comments:

  1. ஹைய்யோ ! இன்றைக்கே ஐந்தாவது பதிவு !!!!!!!

    அளவுக்கு அதிகமாக ஐந்து குடம் ராமரஸம் இன்றைக்கேப் பருகியாச்சு ..... ராமா !.

    இருப்பினும் ஏதாவது எழுதாமல் விடமாட்டோமில்லே

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நான் கணக்கு பார்ப்பதில்லை
      நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்
      இன்று 5 பதிவுகளை போட்டேன் என்று

      Delete
  2. //ஒருவனுக்கு உபசாந்தம் எனப்பெறும் மன அமைதி இல்லாவிடில் சுகம் கிடைக்காது//

    சா ந் தி எப்போதும் நம் கூடவே இருக்கணும் சார்.

    ஐ மீன் மன சா ந் தி

    தெரியாமலா நம் முன்னோர்கள் அனுபவசாலிகள் + புத்திசாலிகள் “சாந்திக்கல்யாணம்” என்றே அதற்கு மிக அழகாகப் பெயர் வைத்துள்ளார்கள். ;))))))

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. சிற்றின்பம்தான் பேரின்பம் பெற முதல் படி
      ஆனால் அதிலேயே மூழ்கிவிடக்கூடாது

      சாந்தி என்றால் மனம் அமைதிடைதல்
      பாமர மனிதன நீங்கள் நினைக்கும்
      விஷயத்தில் அமைதி காண்கிறான்.

      பக்தன் இறைவனிடம் அமைதி காண்கிறான்.

      முன்னது சில நொடி துளிகளே
      பின்னது நிலைத்த,நீடித்த இன்பத்தை அருளும்.

      Delete
  3. //எல்லாம் இருந்தாலும் அவைகள் மூலம் கிடைக்கும் இன்பம் சிறிது காலம்தான். //

    அழகாகச் சொல்லிட்டீங்கோ ! க்ஷண நேரம் இன்பம். ஆயுஷு பூராவும் துன்பம்.

    //ஆனால் இறை அருளினால் கிடைக்கும் இன்பமும் அமைதியும் நிரந்தரமானவை என்பதை ஸ்வாமிகள் உணர்த்துகிறார். மனம் அமைதியடைய ஸ்ரீராமனிடம்
    பக்தி செலுத்தவேண்டும். //

    ஆஹா, இது அருமையோ அருமை. நிரந்தரமான சுகம் கிடைக்கும் வழி தான், ஸ்வாமிகள் சொல்லியிருப்பது.

    ஆனாலும் அண்ணா ......................... ;))))))

    சரி வேண்டாம். விட்டுடுங்கோ. இது போதும் இன்று.

    நாளை முதல் ஒரே ஒரு பதிவு மட்டும் கொடுங்கோ.

    கையெல்லாம் வலிக்குது.

    ராம நாமம் வேறு சொல்ல வேண்டும் என்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் நேரம் வேண்டுமோல்யோ !.

    ReplyDelete
    Replies
    1. ஓரிரு வரிகள் எழுத எவ்வளவு துன்பம் உங்களுக்கு?
      பல்வேறு க்டமைகளுக்கிடையே பதிவுகளுக்காக விஷயங்களை தேடி பிடித்து அதை புரிந்துகொண்டு பதிவை போடும் இவனுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதை நினைத்தீர்களா?
      என்ன செய்வது?

      Delete
    2. நாளை நமது கையில் இல்லை
      எனவே இன்று செய்ய நினைத்ததை இன்றே செய்து முடித்துவிடவேண்டும் என்பது என்னுடைய கொள்கை.

      Delete
  4. கருத்துரைகளும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete