பகவான் ரமணரின் சிந்தனைகள் (3)
தொலைபேசி மணி ஒலிக்கிறது.
தொலைபேசியை கையில் எடுத்தவர்"ஹலோ
.நான்தான் பேசுகிறேன் என்கிறார்.
அவருக்கு அடுத்தமுனையில்
பேசுபவரின் குரலை அடையாளம்
கண்டுகொண்டதால்
அதேபோல் அடுத்த முனையில் இருப்பவரும்
இவர் குரலை அடையாளம் கண்டுகொண்டுவிட்டதால்
அவரும் "நான்தான் பேசுகிறேன் ,
சொல்லுங்கோ என்கிறார்.
இந்த நிகழ்வில் இருவரும்
பொதுவான "நான்" என்ற சொல்லை
பயன்படுத்தியுள்ளார்கள்.
இருவருக்கும் பெயர் வேறு இருக்கும்,
உடலமைப்பு வேறு வேறு இருக்கும்.
எண்ணங்கள் வேறு வேறு இருக்கும்.
வாழ்வின் நிலைகள், கல்வி தகுதிகள், ,
திறமைகள் வேறு வேறாக இருக்கும்.
இருந்தும் நான் என்ற
சொல்தான் இருவருக்கும் ஒன்றாக
இருப்பதுபோல் இந்த உலகில் உள்ள
அனைத்து மனிதர்களும் "நான்" என்ற
சொல் பொதுவானது.
அது எல்லோருக்கும் ஒன்றுதான்.
ஒவ்வொருவரும்
தனி தனியாக நான் என்று உச்சரித்தாலும்
அது ஒன்றுதான்.
ஒன்றுதான்பலவாக இருக்கிறது.
அதே நேரத்தில் பலவாக இருக்கும்
அந்த "நான்" ஒன்றுதான்.
இந்த உலகில் ஒவ்வொரு மனிதர்களும்
முதலில் எண்ணும் எண்ணம்
"நான்' என்ற எண்ணமாகும்.
அதிலிருந்துதான் மற்ற கோடிக்கணக்கான
எண்ணங்கள் உண்டாகின்றன.
ஆனால் நாம் "நான்" என்ற எண்ணம்
எழும் ஊற்றுக்கண்ணை மறந்துவிட்டோம்.
ஊனக்கண் காணும்,
அனைத்தையும் நம்முடையது
என்று எண்ண தொடங்கிவிட்டோம்.
அழியும்தன்மையுடைய, பழுதடையும்
தன்மையுடைய,நிலையற்ற
பல கருவிகளை உடைய
இந்த உடலைதான்
" நான் "என்று எண்ணுகிறோம்.
அவைகள் நம்மிடமிருந்து
பிரிக்கப்பட்டால்,
அழுது அலற்றுகிறோம்
.
(இன்னும் வரும்)
சொன்னது அனைத்தும் உண்மை ஐயா... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி DD
Delete//அழியும்தன்மையுடைய, பழுதடையும் தன்மையுடைய,நிலையற்ற பல கருவிகளை உடைய இந்த உடலைதான் " நான் "என்று எண்ணுகிறோம்.//
ReplyDeleteஅருமை. பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி VGK
Delete