Friday, June 7, 2013

பாராட்டு வாழ்த்து மரியாதை நன்றி

பாராட்டு
வாழ்த்து
மரியாதை 
நன்றி 

இதற்காகத்தான்
ஒவ்வொரு
மனமும் ஏங்குகிறது

சிலருக்கு அது
தானாக கிடைக்கிறது

சிலர் அதை
கேட்டு பெறுகிறார்கள்

சிலர் அதையெல்லாம் பற்றி
கவலைப்படுவதேயில்லை

முற்றும் துறந்த
முனிவர்களையும்
இந்த நான்கும் விட்டு
வைப்பதில்லை

ஏன் மும்மூர்த்திகளும் கூட
இதற்கு விதி விலக்கில்லை

எல்லாவற்றையும்
துறக்கலாம்

அகந்தையை
துறக்க முடியாது

அதனால்தான் பல ரிஷிகளும்
தவசிகளும் மீண்டும்
மாயையில் சிக்கிக்கொண்டு
பல தொல்லைகளை
அனுபவித்தார்கள்

இன்னும் கோடான
கோடி பேர்கள் தொல்லைகளை
அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்

கடவுளின் காட்சி பெற்ற பின்பும்
மாயை விலகாமல் உள்ளவர்கள்
இன்னும் ஏராளம்

இந்த தொல்லையிலிருந்து தப்பியவர்கள்
ஞானிகளும்,ஜீவன் முக்தர்களும்.

மாயை விலக ஒரே வழி
மாலவனின் பாதங்களை
முழுமையாக மனதளவில்
சரணடைவதுதான்.

அதற்கு ஒரே வழி
அவன் நாமத்தை
உச்சரித்து கொண்டே இருப்பதுதான்
அப்போதுதான்
மனதின் நச்சரிப்பு ஒழியும்.


12 comments:

  1. நச்சரிப்பு ஒழிய நல்ல வழிகள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. //பாராட்டு, வாழ்த்து, மரியாதை , நன்றி
    இதற்காகத்தான் ஒவ்வொரு மனமும் ஏங்குகிறது//

    ஆம், உண்மை. இதில் தவறேதும் இல்லை என்பேன்.

    //சிலருக்கு அது தானாக கிடைக்கிறது//

    ஆஹா, தானே கனிந்து கிடைக்கும் கனியே மிகச்சிறந்தது. ;)

    //சிலர் அதை கேட்டு பெறுகிறார்கள்//

    இது தடி கொண்டு அடிக்கச்சொல்வது போல, அசிங்கம். ;(

    //சிலர் அதையெல்லாம் பற்றி கவலைப்படுவதேயில்லை//

    இது ஞானியின் உயர்ந்த நிலை. [ஒருசில மொக்கைகளின் நிலையும் கூட] இவர்கள் எதைப்பற்றியுமே கவலைப்படாதவர்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பற்கள் மொத்தமும் விழுந்து
      வாய் பொக்கையாய் போனகிழங்கள்
      தன்னை யாரும் மதிப்பதில்லை
      என்று வீட்டுக்கு வீடு புலம்புவது
      உங்களுக்கு தெரியவில்லையா?
      அகந்தை அழியாது.
      எதுவும் ஒழியாது.
      அது ஒழியாமல்
      எந்த வயதிலும்
      துன்பங்கள் தீராது.

      Delete
    2. //பற்கள் மொத்தமும் விழுந்து வாய் பொக்கையாய் போனகிழங்கள்
      தன்னை யாரும் மதிப்பதில்லை என்று வீட்டுக்கு வீடு புலம்புவது
      உங்களுக்கு தெரியவில்லையா? //

      தெரியும். அவர்களுக்காகவே ஓர் பதிவுகூட எழுதியுள்ளேன். படிச்சுட்டு கருத்துச்சொல்லுங்கோ ;))))))


      http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html
      ”பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?” பகுதி-1 of 2

      http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html பகுதி 2 of 2

      Delete
    3. நகைச்சுவை திலகம்
      Vgk அவர்களே பாராட்டுக்கள்

      சொந்த அனுபவம்
      போலிருக்கிறது
      சுவைபட நகைசுவையாக
      போகிறது பல்லு புராணம்

      இன்று பல் ஆஸ்பத்திரிக்குள்
      நுழைய வேண்டுமென்றால்
      கையில் கிரெடிட் கார்டுடந்தான்
      நுழையவேண்டும்
      அல்லது ஒரு ஆயிரம் ரூபாய் கட்டு
      ஒன்றை பையில்
      வைத்திருக்கவேண்டும்.

      இல்லாவிடில் கன்சல்டிங் பீஸ்
      250 வாங்கிகொண்டு ரூபாய் 500 க்கு
      எக்ஸ்ரே எடுத்துவிட்டு
      1000 ரூபாய்க்கு பேஸ்ட்,மௌத் வாஷ் ஜெல்
      கொடுத்து சில நாட்கள் கழித்து
      வருமாறு அனுப்பிவிடுவார்கள்

      Delete
  3. //மாயை விலக ஒரே வழி மாலவனின் பாதங்களை முழுமையாக மனதளவில் சரணடைவதுதான்.//

    ஆஹா, கேட்கவே நல்லாத்தான் இருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கேட்க நல்லாத்தான் இருக்கு

      அதை கடைபிடித்தால்
      அதைவிட நல்லா இருக்கும்

      Delete
  4. ஆஆஆஆஆஆ மறந்துட்டேன்.

    மிக நல்ல பதிவு.

    பாராட்டுக்கள்,

    வாழ்த்துகள்,

    மரியாதைகள்,

    நன்றிகள்.

    யார் மனமும் ஏங்கக்கூடாது என்பதே என் எண்ணம். ;)

    ReplyDelete
    Replies
    1. எல்லோரையும்
      திருப்திபடுத்த யாராலும் முடியாது.

      எல்லோருக்கும்
      சம பங்காக கொடுத்தாலும்
      தன்னை எப்படி எல்லோருக்கும்
      சமமாக கருதலாம்
      என்று அப்போதும்
      குறை சொல்லுபவர்கள்.
      இந்த உலகத்தில்
      எல்லா காலங்களிலும் உண்டு.

      இப்போதும் உண்டு.

      எதிர்காலத்திலும் உண்டு.

      Delete
  5. அகந்தையை
    துறக்க முடியாது

    அது கந்தையாக்கும் வாழ்க்கையை...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கை கந்தையானால்
      எப்படி இருக்கும்?

      கந்தை துணி எல்லா அழுக்கையும்
      துடைக்கபோய் அது அழுக்காகி
      கடைசியில் அது குப்பையில்
      வீசி எறியப்படும்

      அதுபோல் தான் அகந்தை
      கொண்ட மனிதர்களின்
      வாழ்க்கையும்.

      Delete