தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(86)
இராமா !
என் வினை இவ்வாறிருக்க நான் பிறரை
குறை கூறி பயன் இல்லை.
கீர்த்தனை(300)-பிராரப்த மிட்லுண்டகா ..
ராகம்-ஸ்வராவளி(மேள-28)-தாளம் -ஜம்ப
என் பழவினை இவ்வாறிருக்கையில்
(என்னைத் தவிர )வேறு ஒருவரை
குறை கூறிப் பயனில்லை
இளங்குமரனே !
குணசீலனே!
மக்களைக் காக்கும் அரசே!
வரமளிப்பவனே!
கருணையின் இருப்பிடமே !
காலத்தைக் கடந்தவனே!
சூலமேந்திய சிவனால் வணங்கப்படுபவனே !
நான் உபகாரம் செய்ய நினைத்தால்
(மாந்தர்) எனக்குத்
தீங்கு செய்ய நினைப்பார்.
நான் சிறிது இறங்கினால்
என் மீது குற்றம் சாட்டுகின்றனர்
சபல சித்தமும் ,பக்த வேஷமும்
உடையவர்கள் எனக்கு பரம
விரோதிகளாகிவிடுகின்றனர்.
இது என் ஊழ்வினைப் பயன் போலும்!
ஸ்வாமிகள் முதல் பகுதியில்
ஸ்ரீராமனின் குணங்களை
வர்ணிக்கின்றார்.
அடுத்த பகுதியில் இந்த உலகில்
மனிதர்களின் குணங்களை
படம் பிடித்து காட்டுகின்றார்.
இந்த இரண்டிற்கும் இடையில்
ஒரு பக்தன் சிக்கிக்கொண்டு
அல்லலுறுவதை விளக்குகிறார்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற கருத்துப்படி
இந்த உலகில் அவரவர் செய்த வினைக்கான
பயன்களை அனுபவித்து தீர்க்கவே இறைவன்
உயிர்களுக்கு பிறவி அளிக்கின்றான்.
அதை முணுமுணுக்காமல் அனுபவித்து
தீர்க்க வேண்டுமே அல்லாது பிறர் மீது
குற்றம் சுமத்துவது சரியல்ல என்பதை
ஸ்வாமிகள் உணர்த்துகிறார்.
எந்த சூழ்நிலையிலும் அபிராம பட்டர்
கூறியுள்ளதுபோல்
"நன்றே வருகினும், தீதே விளைகினும்
நான் அறிவது ஒன்றே -உனக்கே பரம்"
என்ற உறுதியுடன்
ஒரு ராம பக்தன் ஸ்ரீ ராமனின் திருவடிகளை
உறுதியாக பற்றிக்கொண்டு உய்ய வேண்டும்.
pic-courtesy-google images
ஸ்ரீராமனின் உயர்ந்த குணங்களும், ஜனங்களின் அற்ப குணங்களும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன.
ReplyDelete//"நன்றே வருகினும், தீதே விளைகினும்
நான் அறிவது ஒன்றே -உனக்கே பரம்" //
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
/// பிறர் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல ///
ReplyDeleteஅனைவரும் உணர வேண்டிய வரிகள்...
வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...
நன்றி DD
Deleteதங்களின் கருத்துரைக்காக :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html
நன்றி ஐயா...