Thursday, June 6, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (59)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (59)







எதுவாயினும் 
ஸ்ரீ ராமா உன் சித்தம்.
உன் திருவடியே எனக்கு கதி 

கீர்த்தனம்-(210)-புவிநி-தா சுடநே  
ராகம்-ஸ்ரீ ரஞ்சனி-(மேள-22)-தாளம்-தேசாதி 

பண்டிதர்களின்
உள்ளம் கவர்பவனே!

இவ்வுலகில் நான் உன் அடியவனென்று
புகழ்பெற வேண்டுமென்ற ஆசையினால்
பொய்கள் கூறி திரிந்தேனா?
அல்லது
விவேகமற்ற மாந்தரை அண்டித்
தீய வழிகளில்  சென்றேனா?

ஆகவே என்னை காப்பாயாக

நான் அனுபவிப்பது கஷ்டமாயினும்
சுகமாயினும் அதற்காக வருந்தினேனா?

பிறர் நடுவில் நீ என்னை
பாலில் அமிழ்த்தினாலும்
நீரில்  அமிழ்த்தினாலும் உன்
திருவடிகளே எனக்கு கதி.

ஒரு ராம பக்தன் தான்
ஒரு ராம பக்தன் என்று
விளம்பரம் தேடக்கூடாது.

ராம பக்தியில்லாதவர்களுடன்
சேர்ந்துகொண்டு தீய வழிகளில்
செல்லக்கூடாது

வினைப் பயனால்
வாழ்வில் ஏற்படும்
இன்ப துன்பங்களுக்காக
வருந்தக்கூடாது.

எத்தனை இன்னல்கள்
வந்திடினும் ஸ்ரீராமனின்
திருவடிகளில் உறுதியான
அசைக்கமுடியாத நம்பிக்கை
வைக்கவேண்டும் என்கிறார் ஸ்வாமிகள்.

4 comments:

  1. வினைப் பயனால்
    வாழ்வில் ஏற்படும்
    இன்ப துன்பங்களுக்காக
    வருந்தக்கூடாது.

    எத்தனை இன்னல்கள்
    வந்திடினும் ஸ்ரீராமனின்
    திருவடிகளில் உறுதியான
    அசைக்கமுடியாத நம்பிக்கை
    வைக்கவேண்டும் என்கிறார் ஸ்வாமிகள்.

    நம்பிக்கை விதைக்கும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. //பிறர் நடுவில் நீ என்னை பாலில் அமிழ்த்தினாலும், நீரில் அமிழ்த்தினாலும் உன் திருவடிகளே எனக்கு கதி.//

    அழகு, அருமை. பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete