சிந்தனைகள் (91)
என் தெய்வமாகிய இராமனுக்கு
சமானமாகக் கூறுவதற்குக்
கடவுள்களுள் ஒருவரும் இலர்.
கீர்த்தனை(370)-சாமிகி சரி செப்ப ஜால ....
ராகம்-பேகட -தாளம்-ரூபகம்.
என் தெய்வமாகிய இராமனுக்கு
சமானமாகக் கூறுவதற்குக்
கடவுள்களுள் ஒருவரும் இலர்.
என் மனம் அவனுடனே
ஒன்றிவிட்டது
வேறு யோசனை எதற்கு?
இதுவே போதும்
அவரவர் விதிப்படி
எல்லாம் நடக்கும்
என் தெய்வம் பேசினால்
அதுவே எனக்கு பெரும் பேறு
அதுவே பதினாயிரம் பாக்கியம்
என் கண்களுக்கு அவன்
தோற்றமே அழகு தருகிறது
கொடுத்த வாக்கை
மீறாதவன் அவன்
என்றும்
அன்பு காட்டுபவன்
குளிர்ந்த பார்வையுடன்
நோக்குபவன்
தேவர்கள் அனைவரிலும்
அவனுக்கு இணை இல்லை
அவன் என்னைக் காக்கும் பெருமான்.
மிக அருமையான கீர்த்தனை.
தன் இஷ்ட தெய்வமான இராமபிரானுக்கு
சமானமாக எவரும் இல்லை
என்பதற்கான காரணங்களை கூறுகிறார். ஸ்வாமிகள்.
அப்படிப்பட்ட மகிமை பொருந்தியவனை
நாமும் நம்பிக்கையுடன் ஆராதித்து
அவன் அருளை பெறுவோம்.
அருமையான விளக்கம்...
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள் ஐயா...
நன்றி.DD
Delete//கொடுத்த வாக்கை
ReplyDeleteமீறாதவன் அவன்
என்றும்
அன்பு காட்டுபவன்
குளிர்ந்த பார்வையுடன்
நோக்குபவன்//
சூப்பர்! ராமா ராமா ராமா ராமா ராமா !
நெஞ்சைக்குளிர வைத்த பட்டாபிராமா !
நின் பாதாம் சரணடைகிறேன் ஸ்வாமீ.
நல்லதொரு பதிவுக்கு நன்றிகள், அண்ணா..
சூப்பர்! ராமா ராமா ராமா ராமா ராமா !
Deleteநெஞ்சைக்குளிர வைத்த பட்டாபிராமா !
நின் பாதாம் சரணடைகிறேன் ஸ்வாமீ.
எப்போதும் பாதாம் ஞாபகம்தானா
சரி பாதாம் அல்வாவா
பாதம் கதலியா
சில்லென்று பாதாம் கீரா
என் பேரை சொல்லி எல்லாவற்றையும்
ஒரு பிடி பிடியுங்கள்
’பாதமே’ தான் தவறுதலாக 'பாதாம்' ஆகியுள்ளது.
Deleteஸதா சர்வகாலமும் இப்போதெல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா நினைவுகளுடன், ஆனந்தமாக அடியேன் இருந்து வருவதால் அவர்களின் ஸ்ரீ பாதம், ’பாதாம்’ என்று அகஸ்மாத்தாக [பாதாம் ஹல்வா போல] விழுந்துள்ளது ;)))))
க்ஷமிக்கணும் ஸ்வாமீ.
நேற்று முந்தினம் அனுஷ பூஜை மிகச்சிறப்பாக நடைபெற்றது. பங்குகொள்ளும் வாய்ப்புப்பெற்றேன். அங்கும் மிக இனிப்பான பாதாம் பால் பிரஸாதமாகக் கிடைத்தது.
அன்புடன் VGK