சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்-
குருவே இறைவன்(பகுதி-2)
ஒரே மாதிரியாக இருப்பதில்லை
எந்த இரண்டு இலைகளும்
ஒரே மாதிரியாக இருப்பதில்லை
கடலில் கரையை நோக்கி வந்து வந்து போகும்
எந்த இரண்டு அலைகளும்
ஒரே மாதிரியாக இருப்பதில்லை
எந்த இரண்டு மனிதர்களும் அமைப்பில்
ஒரே மாதிரி இருப்பதில்லை
இதே போல் அவர்களின் குணங்களும்
ஒரே மாதிரி இருப்பதில்லை
ஆகவே வெவ்வேறு விதமான
மனோ நிலைகளுடைய மக்களுக்கேற்றவாறு
உள்ளத்தை கட்டுப்படுத்த பல்வேறுவிதமான
வழிகள் இருக்கின்றன
ஒவ்வொருவரும் தங்கள்
தங்களுக்கு பொருத்தமான
சாதனையைக் கைக்கொள்ளலாம்
வகுத்துக் கொள்ள இயலாவிட்டால்
அதை ஒரு குருவிடமிருந்து
பெற்றுக்கொள்ளுங்கள்
ஒரு குருவிற்கு கீழ் அமர்ந்து
யோகத்தை கற்றுக்கொள்ளுங்கள்
அப்பொழுதுதான் நீங்கள் யோகத்தின்
இரகசியங்களை புரிந்து கொள்ள முடியும்.
புத்தகங்களில் நீங்கள்
உண்மையை தேடமுடியாது
நீங்கள் சோர்வுற்றிருக்கும்போது
அவர் உங்களை ஊக்குவிப்பார்.
சாதனைகளை கடைப்பிடிக்கும் போது
இடையில் சறுக்கல் ஏற்பட்டால்
உங்களை தாங்கி
உங்கள் சந்தேகங்களை நீக்கி
சரியான பாதையைக் காட்டுவார்
ஏனெனில் அவர் ஏற்கெனவே
தானாக அந்த பாதையைக்
கடந்து வந்திருக்கின்றார்.
நீங்கள் உண்மையாகவும் மனப்பூர்வமாகவும்
மட்டும் இருந்தால் குருவினுடைய கருணையானது
தைல தாரையை போல் தொடச்சியாக
எண்ணை ஊற்றுவதைப்போல்
உங்கள் மீது பாயும்.
உங்களிடம் உண்மையாக கிரகிக்கும் சக்தியும்
அவரிடம் மனப்பூர்வமான நம்பிக்கையும்
பக்தியும் இருக்குமேயானால் அவர்
உங்களிடம் சக்தியையும், அன்பையும்,
ஞானத்தையும்,,ஆன்மீக மின்னோட்டத்தையும்
பொழிந்து தள்ளுவார்.
இப்பொழுது ஒரே வழியையும்
ஒரே குருவையும் இறுகப்
பற்றிக்கொள்ளுங்கள்
சஞ்சலப்படவேண்டாம்
பொறுமையாக இருங்கள்
மனப்பூர்வமாக இருங்கள்
வெற்றி உங்களுக்கு கிடைக்கும்
//இப்பொழுது ஒரே வழியையும் ஒரே குருவையும் இறுகப்
ReplyDeleteபற்றிக்கொள்ளுங்கள்.
சஞ்சலப்படவேண்டாம், பொறுமையாக இருங்கள்
மனப்பூர்வமாக இருங்கள், வெற்றி உங்களுக்கு கிடைக்கும்//
மிகவும் ஆறுதலான அழகான அறிவுரைகள், பகிர்வுக்கு நன்றிகள்.
பொறுமையாக இருங்கள்
Deleteவெற்றி கிடைக்கும்
நன்றி VGK
நல்ல சிந்தனைகள் ஐயா... நன்றி...
ReplyDeleteநன்றி...DD
Delete