Friday, September 14, 2012

அஞ்சனை மைந்தனும் ஆத்மராமனும்














அஞ்சனை மைந்தனும் ஆத்மராமனும்
வடிவத்தில் வேறுபடினும்
இருவரும் ஒன்றே

அண்டியவர்களைக் காக்கும் துணிவும்
அடி பணிந்தவர்களிடம் காட்டும்   பரிவும்
ஒருங்கே அமைந்த தெய்வங்கள் இருவரும்

அக்னி தீண்ட இயலா அன்னை சீதையின்
கற்பு கனலின் சக்தியை ராவணன் தன் வாலில்
மூட்டிய தீயை கொண்டு தான் அழிபடாது
இலங்கையை மட்டும் அழித்து உலகுக்கு
உணர்த்தினான் அஞ்சனை மைந்தன்.

தீயில் புகுந்தாலும் தீது நேராது வெளிவருவாள்
என சீதையின் கற்பின்  மாண்பினை  உலகிற்கு
காட்டினான் ஆத்மராமன்.

தன்னை சரணடைந்தவனைக் காக்க தன்
இதய தெய்வத்தையே எதிர்க்க புகுந்தான்
அஞ்சனை மைந்தன்

தன் அன்பு பக்தனுக்காக தன் வில்லிலிருந்து
விட்ட அம்பினை அன்பு மாலையாக
அணிவித்து மகிழ்ந்தவன் ஆத்மராமன்.

அழகின் வடிவம் ,ஆற்றலின் உருவம்,
பணிவின் சிகரம் இருவரும்
பக்தியுடன் பணிந்தோருக்கு பக்கபலமாய்
இருப்பார்கள் எப்போதும்

2 comments:

  1. சிரஞ்சீவியின் சிறப்பை பகிர்ந்த சிறப்பு பகிர்வு... நன்றி சார்...

    ReplyDelete
  2. குழந்தையும் தெய்வமும்
    கொண்டாடும் இடத்திலே
    குடிகொண்டிருக்கும்
    கொண்டாடுபவர்களின்
    குடியை காக்கும்

    ReplyDelete