Thursday, October 10, 2013

நவராத்திரி-பகுதி(2)

நவராத்திரி-பகுதி(2)

நாமெல்லாம் இறைவனின் கையில்
விளையாட்டு பொம்மைகள்.

சிறு வயதில் பொம்மைகள்
நமக்கு விளையாட்டு பொருட்கள்வளர்ந்த பிறகு அவைகளை
அழகாக பார்த்து பார்த்து.
கொலு வைத்து ரசிப்பது
பேரானந்தம்

அன்பும்,பாசமும் கொண்டவர்களை
அழைத்து உபசரித்து ,அதிலும்
 கலா ரசனை கொண்டவர்களை அழைத்து
அவர்கள் ஒவ்வொரு பொம்மையின்
விவரங்களையும், ஆர்வத்துடன் கேட்டு
அதன் அழகையும் புகழ்ந்து பேசுவதை
கேட்பது ஒரு தனி பேரின்பம்.

விதவிதமான கோலங்களை வண்ண பொடிகளை
பயன்படுத்தி கொலுவின்
முன்பு வைத்து ரசிப்பதே ஆனந்தம்.கொலுவின் முன் தன்
கலைப்படைப்புகளை வைத்து
பார்த்து மகிழ்வதும், தினமும்,
துதிகள் பாடி துதிப்பதும்,
வருவோரை பாட சொல்லி கேட்பதும்,
 மனமுருகி தேவி கீர்த்தனங்களை பாடுவதும்,
வித விதமாக இனிப்புகள், மற்றும்
சுண்டல் வகைகளை படைத்து அனைவர்க்கும்
அளித்து மகிழ்வதும்.
குழந்தைகளுடன் கொண்டாடுவதும்
நம் தமிழ் நாட்டிற்க்கே உரிய சிறப்புகள்.

ஒவ்வொரு பொம்மைகளும்
பேசும் உயிர் சித்திரங்கள்.
மன  இருளை ஓட்டும் ஒளி .

மொத்தத்தில் நவராத்திரி
ஒரு சுப ராத்திரி.


11 comments:

 1. அண்ணா, நீங்க போட்டுள்ள கோலங்கள் அழகோ அழகு ! ;)))))

  ReplyDelete
  Replies
  1. கோலங்களின் வண்ணம் இவனில் பாதியின் கைவண்ணம்

   Delete
 2. //அன்பும்,பாசமும் கொண்டவர்களை அழைத்து உபசரித்து ,அதிலும்
  கலா ரசனை கொண்டவர்களை அழைத்து//

  கலா ரசனை கொண்ட என்னை சிலர் பிரத்யேகமாக அழைப்பது உண்டு அண்ணா. நான் தான் போகாமல் பிகு பண்ணிக்கொள்வேன்.

  என் பெரிய அக்கா ஆத்துக்கு மட்டும் போய்ட்டு வந்தேன். அதிலேயே சுமார் 3-4 மணி நேரம் ஆகிவிட்டது. அவ்வளவு ஒரு பாசப்பிணைப்பு. அங்கு போனால் என்னை லேஸில் விடமாட்டாள்.

  >>>>>

  ReplyDelete
 3. நான் ஆபீஸில் வேலை பார்த்த போதும் ‘கலா’ ரஸிகன் தான்.

  ’கலா’ என்று ஒருத்தி. என் மீது பாசமோ பாசம். ஏதாவது என்னை வம்பு இழுத்துக்கொண்டே இருப்பாள். நம் வலையுலக அதிராவே தேவலாம்.

  சண்டை போடுவாள். சட்டைக்காலரைப் பிடித்து பின் பக்கமாக இழுப்பாள். வீ.........ஜீ............ என்று ராகத்துடன் அழைப்பாள்.

  இருந்தாலும் மிகவும் நல்லவள். அவ்வப்போது ஸ்வாதீனமாக என் ஹேண்ட் பேக்கைத் திறந்து பணம் எடுத்துச்செல்வாள். இவ்வளவு ரூபாய் எடுத்துக்கொண்டேன் என்று ஒரு சீட்டு எழுதி என் சட்டைப் பையில் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பாள்.

  முதல் தேதி சம்பளம் வாங்கியதும் திரும்பி கொண்டுவந்து போடுவாள்.

  ஏதேதோ கணக்குச் சொல்லுவாள். பிரியம் அதிகம். நல்ல குணம். பெருந்தன்மையாகவும் இருப்பாள்.

  அப்போதிலிருந்தே நான் கலா ரஸிகன் தான். ;)))))

  இப்போது அவளை நான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. என் கடைசி பையனின் கல்யாணத்திற்கு நான் அவளை அழைக்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறாள்.

  >>>>>

  ReplyDelete
 4. முதல் படமும் கடைசி படமும் அழகோ அழகு. கிளி கொஞ்சும் அழகு. நல்ல படத்தேர்வு. பாராட்டுக்கள்,

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. முதல் படமும் கடைசி படமும் ஒன்றுதான்.
   அய்யாவின் கணினி வேலை அப்படி

   Delete
 5. //ஒவ்வொரு பொம்மைகளும் பேசும் உயிர் சித்திரங்கள். மன இருளை ஓட்டும் ஒளி .மொத்தத்தில் நவராத்திரி ஒரு சுப ராத்திரி. //

  அருமையாகச்சொல்லியுள்ளீர்கள். பதிவுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. மிகவும் அருமை ஐயா... கோலங்கள் பிரமாதம்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி DD
   வாழ்த்துக்கள் என் துணைவிக்கு .கோலங்கள் அவள் கைவண்ணம்

   Delete