Wednesday, October 9, 2013

நவராத்திரி

நவராத்திரி 
நவம் என்றால்
புதியது என்று பொருள்

நவம் என்றால்
ஒன்பது என்று பொருள்

நவ கிரகங்கள். நவ மணிகள், நவ தான்யங்கள்,
நவ சக்திகள், நவாவர்ணம்,நவபாஷாணம்
நவ துவாரங்களை உடைய நாம் வசிக்கும் உடல்
என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

பொதுவாக ஒவ்வொரு பண்டிகையும்
பழையன கழிதலும் புதியன புகுதலும்.
என்ற அடிப்படையில்தான் அமைகிறது.

விஞ்ஞானத்தை எடுத்துக்கொண்டால்
ஒவ்வொருநாளும் ஒரு புதிய கண்டுபிடிப்புகள்
வந்துகொண்டே இருக்கின்றன.

மெய் ஞானத்தினை கூர்ந்து நோக்கினால்
அஞ்ஞானம் நம்மை விட்டு அகல ஒவ்வொரு
பண்டிகையும் வழி வகுக்கின்றன.

இந்த ஒன்பது நாட்களில் கல்வியை அளிக்கும்
கலைமகளுக்கும், செல்வத்தை அளிக்கும் அலைமகளுக்கும்,
வீரத்தை ,செயல்படும் சக்தியை, மனஉறுதியை,
அளிக்கும் மலைமகளுக்கும் ஞானத்தை அளிக்கும்
அம்பிகைக்கும் வழிபாடுகள் செய்து பலமும்,
பலனும் பெறுகிறோம்.

இந்த உடலில் உள்ள ஒன்பது துவாரங்களின்
வழியாக வெளியேறாமல் உயிர் என்னும் பிராண சக்தி
தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறது
அதன் விதி முடியும் வரை.

விதி முடிவதற்குள் மதியால் அந்த சக்திகளை
அறிந்துகொண்டு அவைகளின் முழு ஆற்றலையும்
பெற்று இந்த உலக வாழ்க்கையை இன்பமாக வாழ
முயற்சி செய்யவேண்டும்.

சத்துள்ள நவ தான்யங்களை சுண்டல் செய்து
இறைவனுக்கு படைத்தது அனைவருக்கும்
அளித்து மகிழும் அற்புத விழா

ஒன்றான பரம்பொருள் பலவாக விரிந்துள்ளதை
விளக்கும்பொருட்டு கொலுவை அமைக்கின்றோம்.

அதன் மூலம் கலாசாரம்.
பண்பாடுகள் தொடர்ந்து
காப்பாற்றப்பட்டு வருகிறது.

இசை, நாட்டியம், பக்தி ஆகியவை
மனிதனை முழுமையாக்கி இறைவனை
உணரும் வகையில் இந்த விழா அமைகின்றது.

ஆயிரக்கணக்கான பொம்மை செய்யும்
கலைஞர்கள் உட்பட சமூகத்தில் உள்ள
அனைத்து பிரிவினரின் வாழ்வும் மேம்பட
இந்த விழா உதவி செய்கிறது.

அனைவரும் இறைவனை
கொண்டாடி மகிழ்கின்றனர்.

இதன் மூலம் கோடிக்கணக்கான
மக்கள் பயன்பெறுகிறார்கள் .

எங்கும் மகிழ்ச்சியும், ஆனந்தமும்
தாண்டவமாடும் இந்த விழாவை ஒன்பது நாட்கள்
மகிழ்ச்சியுடன், எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம்.

12 comments:

 1. தினம் தினம் மகிழ்ச்சி தருகிறது உண்மை தான் ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. //சத்துள்ள நவ தான்யங்களை சுண்டல் செய்து
  இறைவனுக்கு படைத்தது அனைவருக்கும்
  அளித்து மகிழும் அற்புத விழா//

  ஆம். அதிலும் நிலக்கடலை சுண்டல் என்றால் சூப்பரோ சூப்பராக இருக்கும். தினமும் வேறு ஏதாவ்து தான்ய சுண்டல் கொஞ்சமாகச் செய்துவிட்டு, இதை நிறைய செய்யலாம். ;)

  ReplyDelete
  Replies
  1. வேர்கடலை சுண்டல் அருமை. மீதம் இருந்தால் அடுத்தநாள் கத்திரிக்காய் அல்லது வெள்ளை பூசணிக்காய் கூட்டில் சேர்த்தால். சுவையாக இருக்கும்.

   Delete
 3. //எங்கும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் தாண்டவமாடும் இந்த விழாவை ஒன்பது நாட்கள் மகிழ்ச்சியுடன், எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம்.//

  ஆம், மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் .... அதுவும் பேரெழுச்சியுடனும் கொண்டாடத்தான் வேண்டும்.

  நல்ல பகிர்வு. பல விஷயங்களை நிலக்கடலை சுண்டல் போலவே ருசியாகத் தந்து அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிற்கு நன்றிகள்

   Delete
 4. கொலு 2013 ஜோராக வைத்துள்ளீர்கள். பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

  கொலுப்படி அமைத்து, பொம்மைகளை வைத்து அழகூட்டி, பிறகு அவற்றை PACK செய்து வைப்பது தான் சற்றே சிரமமான காரியம். வீட்டில் உள்ள அனைவருக்கும் தெம்பும் சிரத்தையும் ஆசையும் இருக்கணும்..

  ReplyDelete
  Replies
  1. ஈடுபாடு இருந்தால் இடர்ப்பாடுகள் ஏது ?
   படிகளை அமைக்க மிக சுலபமான வழி
   பலகைகள் இருந்தால் போதும். நாற்காலிகள், பிளாஸ்டிக் ஸ்டூல் ,மேஜை, பெஞ்ச் இதை வைத்தே அழகாக படிக்கட்டுகளை அமைத்துவிடலாம்.
   பொம்மைகளை சிறிய பெட்டிகளில் பாக் செய்து வைத்தால் எடுப்பதும் வைப்பதும் மிக சுலபம்.
   ரசனையும், ஈடுபாடும் இருந்தால் போதும்.

   ரசித்து ரசித்து கொலுவை பாராட்டியமைக்கு நன்றி.

   Delete
 5. விதி முடிவதற்குள் மதியால் அந்த சக்திகளை
  அறிந்துகொண்டு அவைகளின் முழு ஆற்றலையும்
  பெற்று இந்த உலக வாழ்க்கையை இன்பமாக வாழ
  முயற்சி செய்யவேண்டும்.

  அருமையான நவராத்திரி தத்துவப்பகிர்வுகள்..

  ReplyDelete
  Replies
  1. அன்பான நவராத்திரி வாழ்த்துக்கள்

   வருகைக்கும் கருத்துகளை பகிர்ந்தமைக்கும் நன்றி.

   Delete
 6. இசை, நாட்டியம், பக்தி ஆகியவை
  மனிதனை முழுமையாக்கி இறைவனை
  உணரும் வகையில் இந்த விழா அமைகின்றது.
  // அருமையாகச் சொன்னீர்கள் ஐயா! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துகளை பகிர்ந்தமைக்கும் நன்றி.

   Delete