Saturday, October 26, 2013

தலைஎழுத்தை மாற்றும் எழுத்து எது?

தலைஎழுத்தை மாற்றும் 
எழுத்து  எது?





எல்லாம் எழுதி வைத்தபடிதான் நடக்கும்
நடக்கிறது. நடக்கும்.

சட்ட புத்தகத்தில் எழுதி வைத்தபடிதான்
நிர்வாகம் நடக்கும்.

சட்டத்தை மீறினால்
தண்டனைதான் கிடைக்கும்.

சட்டம் படித்தவனுக்கு
மட்டும் தெரியும்
எந்த விதிகளை மீறினால்
என்னென்ன தண்டனை
கிடைக்கும்.என்று.

சட்டம் தெரியாதவனுக்கு
அந்த விவரம் தெரியாது.

ஒருவேளை தண்டனை அனுபவித்தபின்
அந்த விவரத்தை அவன் அனுபவத்தில்
அறிந்து கொள்வான்.

ஆனால் சிலர் எல்லாம் தெரிந்துகொண்டே
சட்டத்தை மீறுகிறார்கள்.

பலமுறை சட்டத்தின் கண்களுக்கு
அகப்பாடாமல் தப்பித்துக்கொண்டே
இருக்கிறார்கள்.

ஆனால் சட்டம்  ஒருநாள் தன்
கடமையை செய்துவிடுகிறது.
அவர்களை பிடித்து சிறையில் தள்ளி
அவர்களின் செயல்பாட்டை
முடக்கிவிடுகிறது.





ஒரு சிலரை தலையெடுக்கவிடாமல்
அழித்துவிடுகிறது.

சட்டத்தை மதித்து வாழ்பவன்.
பிறரால் மதிக்கப்படுகிறான்.
மீறுபவன் தண்டிக்கப்படுகிறான்.

அதே சட்டம் சட்டத்தின்
சில விதிகளை மீறுவதற்கு
அனுமதித்துள்ளது.

அடக்குமுறையை,
சுரண்டலை எதிர்த்து
போராட அனுமதிக்கிறது.

ஆனால் அதற்கும் தண்டனை ஆளும்
வர்க்கத்தினரால் அளிக்கப்படதான் செய்யும்.

ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.

அதுபோல் இந்த உலகையும் நம்மையும்
படைத்த இறைவன் ஒரு விதிக்குட்பட்டுத்தான்
செயல்பட அனுமதித்துள்ளான்

அதை மீறும் போது  நாம் துன்பங்களை
அனுபவிக்கிறோம். அதை மீறாதபோது
எல்லாம்  இன்பமாக இருக்கிறது.

அறியாமையால் பல தீய செயல்களை
சுயநலத்தினால் செய்து அதனால்
ஏற்படும் விளைவுகளே
நம் தலை எழுத்தாக மாறுகிறது.

நல்ல செயல்கள்
புண்ணியமாக மாறுகிறது.
அது நமக்கு இன்பமான வாழ்வு தருகிறது.

நம் தீய  தலைஎழுத்தை
மாற்ற வழி வகை உண்டு.

அதற்கு இரண்டெழுத்து மந்திரம் உள்ளது.





அது பென்சிலால் எழுதப்பட்ட எழுத்தை
அழிக்கும் ரப்பர் போல் அந்த இரண்டு மந்திரத்தை
சொல்ல சொல்ல நம் தலையில் நாம் செய்த
தீய வினைகளினால் உண்டான
தலைஎழுத்து அழிந்து அது மீண்டும்
வெள்ளை காகிதம்
போல் பரிசுத்தமாகிவிடும்.





ராம,சிவா ,குகா ,உமா,காளி என்று
ஏதாவது ஒரு இரண்டெழுத்தை சொல்லிக்கொண்டே
நம் தவறுகளுக்கு வருந்துவோமானால்
நம் தலைஎழுத்து நம்மை அறியாமல் மாறி
வாழ்வில் அமைதியும் இன்பமும் தானே வரும்

24 comments:

  1. ////நம் தவறுகளுக்கு வருந்துவோமானால்
    நம் தலைஎழுத்து நம்மை அறியாமல் மாறி
    வாழ்வில் அமைதியும் இன்பமும் தானே வாரும்.////
    நன்றாக சொன்னீர்கள் ஐயா. தவற்றை உணர்ந்து விட்டால்,
    வாழ்வில் இன்பம்தானே. நன்றி ஐயா

    ReplyDelete
  2. // அறியாமையால் பல தீய செயல்களை சுயநலத்தினால் செய்து அதனால் ஏற்படும் விளைவுகளே நம் தலை எழுத்தாக மாறுகிறது... //

    மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா... முடிவிலும் தீர்வும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பென்சிலால் எழுதப்பட்ட எழுத்தை
    அழிக்கும் ரப்பர் போல் அந்த இரண்டு மந்திரத்தை
    சொல்ல சொல்ல நாம் தீய எழுத்துக்கள்
    அழிந்து அது மீண்டும் வெள்ளை காகிதம்
    போல் பரிசுத்தமாகிவிடும்.

    அழகான வரிகள்..
    படங்கள் மனம் நிறைத்தன..!

    ReplyDelete
  4. //ராம, சிவா, குகா, உமா, காளி என்று
    ஏதாவது ஒரு இரண்டெழுத்தை சொல்லிக்கொண்டே
    நம் தவறுகளுக்கு வருந்துவோமானால்
    நம் தலைஎழுத்து நம்மை அறியாமல் மாறி
    வாழ்வில் அமைதியும் இன்பமும் தானே வா ரு ம்.//

    வாரும், வாரும் ...... கடைசியில் ஓர் சொற்பிழை உள்ளது அண்ணா !

    ’வாரும்’ என்பது ’வரும்’ என்றிருந்தால் நல்லதோ என ஓர் எண்ணம் வருகிறது எனக்கு. யோசித்து மாற்றிடுங்கோ.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நன்றி VGK
      நள்ளிரவில் எழுதப்பட்டது .
      பிழை சரி செய்யப்பட்டுவிட்டது

      Delete
  5. //பென்சிலால் எழுதப்பட்ட எழுத்தை
    அழிக்கும் ரப்பர் போல் அந்த இரண்டு மந்திரத்தை
    சொல்ல சொல்ல ............ //

    சொல்லச்சொல்ல இனிக்குதடா ........ பாடல் நினைவுக்கு வந்தது.

    //தீய எழுத்துக்கள் அழிந்து அது மீண்டும் வெள்ளை காகிதம் போல் பரிசுத்தமாகிவிடும்.//

    பரிசுத்தமாகச் சொல்லியுள்ளீர்கள்.

    /அழகான வரிகள்../

    என அம்பாளே சொல்லிவிட்டார்கள். இனி நான் என்ன சொல்ல ? ;)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் உங்கள் பாராட்டும் எனக்கு ஒரு உத்வேகத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து உண்டோ?

      Delete
  6. கடைசியில் காட்டப்பட்டுள்ள படம் நல்லாயிருக்கு.

    ஆத்மராமனால் வரையப்பட்டுள்ள கோதண்டராமனும் அருமை. ;)

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி

      Delete
    2. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் படமும் இவன் வரைந்ததே

      Delete
    3. //Pattabi Raman October 26, 2013 at 10:46 PM
      பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் படமும் இவன் வரைந்ததே//

      EXCELLENT ! கைகளைக்கொடுங்கோ ... அண்ணா ..... என் கண்களில் ஒத்திக்கொள்ளணும்.

      ஒருவேளை தாங்கள் வரைந்ததாக இருக்குமோ என நான் சந்தேகப்பட்டேன்.

      அந்தப்படத்தில் ஜீவன் உள்ளது. மிக்க மகிழ்ச்சி. ;)

      அன்புடன் கோபு

      Delete
    4. உங்களிடம் கையைக் கொடுத்துவிட்டால் பிறகு நான் என்ன செய்வது? தற்போது அது ஒன்றுதான் இந்த உடம்பில் நன்றாக வேலை செய்துகொண்டிருக்கிறது
      அதைக் கொடுத்துவிட்டால் இவன் பிழைப்பு அம்போதான்.
      பாராட்டிற்கு நன்றி

      Delete
    5. ;)))))

      நான் என்ன, மேலே இரண்டாவது படத்தில் தாங்கள் காட்டியுள்ளது போலவா தங்கள் கைகளை கட்டப்போகிறேன் !

      படம் வரைவதில் எனக்குள்ள ஏதோ ஒரு ஆசையினால் கேட்டுட்டேன். கொடுக்க மறுத்து விட்டீர்கள். பரவாயில்லை.

      இனி யாரையுமே நான் இதுபோலக் கேட்பதாக இல்லை. ;)))))

      Delete
    6. தங்களன்பும் தங்கள் எழுத்துக்களும் என்னை ஏற்கெனவே கட்டிப் போட்டுள்ளன என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?

      Delete
  7. நல்ல கவிதை

    புதிய பாணியில்...
    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வருக வாழ்த்துக்கள் உங்களுக்கு
      கருத்துக்கு நன்றி

      Delete
  8. இந்த உலகையும் நம்மையும்
    படைத்த இறைவன் ஒரு விதிக்குட்பட்டுத்தான்
    செயல்பட அனுமதித்துள்ளான்

    அதை மீறும் போது நாம் துன்பங்களை
    அனுபவிக்கிறோம். அதை மீறாதபோது
    எல்லாம் இன்பமாக இருக்கிறது.// அற்புதம்! நன்றி!

    ReplyDelete
  9. அழகிய உவமை சொல்லி
    அகத்தினை மகிழ வைத்த
    இளகிய மனத்தவரே இங்கும்
    இன்முகம் கொண்டு வரவேற்கின்றேன் !!

    தமிழதை உயிர் மூச்சாய்க் கொண்டு
    தழுவிய என் பாடல்கள் என்றும்
    உமதிரு விழிகளில் பட்டும்
    ஒளிபெற வேண்டும் இங்கே ....

    மகிழ்வுடன் வாழ்த்துச் சொன்ன
    மனமிதுவும் குளிரத் தானே
    பருகிடத் தேனும் பாலும்
    பகிர்ந்தளித்தேன் ஐயா நானும் ...

    தமிழே உன் வருகை கண்டு
    தாளாத இன்பங் கொண்டு
    பல முறை நன்றி சொன்னேன்
    பரிந்துரைத்தவர்க்கும் (VGK ) நன்றி ஐயா ....//

    நன்றி சொல்ல வந்த வேளை
    நன்றியே தவளுதிங்கே!!..........
    என்றும் இந்த மனத்தாலே மீண்டும்
    எனை ஏற்றம் பெற வாழ்த்தி விடுங்கள் .....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துவதும்
      வாழ்த்து பெறுவதும்
      வாழ வைப்பதும்
      தமிழ் மொழியின் சிறப்பு

      அன்பே சிவம் என்று
      அகம் குளிர அழைக்கும்
      தமிழ்மந்திரம்
      திருமந்திரம் அன்றோ!

      அன்பின் வழி அதன் உயிர்நிலை
      என்று அன்றே அழகுபட
      தமிழில் சொல்லி வைத்தான்
      வள்ளுவ பெருந்தகை

      அன்று தமிழுக்காக வாழ்ந்த
      புலவர்கள் வறுமையில்
      பொறுமை காத்தார்கள்

      இன்றோ தமிழ் பலரை
      வாழவைக்கிறது வளமாய்

      நான் ஒன்றும் தமிழறியேன்
      எதோ என் மூளையின் மூலையில்
      தோன்றும் கருத்துக்களை
      வலையில் இடுகிறேன்.

      உங்களின் தமிழைப் படித்து
      என் தமிழறிவை வளர்த்துக் கொள்ள
      முயலுகிறேன்.

      வருகைக்கு நன்றி
      வாழ்த்துக்கு நன்றி

      Delete
  10. நன்றி சொல்ல வந்த வேளை
    நன்னெறியே தவளுதிங்கே!!..........
    என்றும் இந்த மனத்தாலே மீண்டும்
    எனை ஏற்றம் பெற வாழ்த்தி விடுங்கள் .....

    ReplyDelete
    Replies
    1. என் வாழ்த்துகள் என்றென்றும் உண்டு

      Delete