Friday, October 25, 2013

திருட்டு போகாத சேமிப்பு

திருட்டு போகாத சேமிப்பு இந்த உலகில் எதையும் நிரந்தரமாக 
சேமிக்கவும் முடியாது. 
சேமித்து பயன்படுத்தவும் முடியாது.

அப்படி சேர்த்தால் அதை உடனே நாம் 
பயன்படுத்தி இன்புறவேண்டும்.

நாம் பயன்படுத்தியது போகே மீதம் 
உள்ளதை இந்த உலகத்திற்கே  
திரும்ப அளித்து விடவேண்டும். 

அவ்வாறு செய்யாவிடில் 
அப்பொருள் அழிந்துவிடும் .

இல்லாவிடில் நம்மிடமிருந்து 
கள்வர்களால் களவாடப்படுவிடும்.
 சில நேரங்களில் அந்த பொருட்களே 
உயிருக்கு எமனாகிவிடும். 

அதனால்தான் எதையுமே தேவைக்குமேல் வைத்துகொள்வதும்,பயன்படுத்துவதும் தவறு 
என்று சாத்திரங்கள் சொல்கின்றன .எப்படி?

உள்ளத்தில் பிறர் பொருள் மீது ஆசை எழுந்தாலே
அது திருட்டு என்கிறது நீதி சாஸ்திரம் 

அளவுக்கு மேலே பொருள் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் (ஒரு திரைப்பட பாடல்)
ஒருவன் தன் தேவைக்கு மேல் பொருட்களை சேமித்து அதை தானும் பயன்படுத்தாமலும்பிறர் பயன்படுத்த அனுமதிக்காமலும் வைத்திருந்தால் அந்த பொருள் நிச்சயம்கொள்ளையர்களால் கொள்ளையிடப்படும்என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்

ஒருவருக்கு மிக குறைந்தளவு நகைகள் இருந்தாலே போதுமானது. ஆனால் கணக்கிட முடியாத அளவிற்கு நகைகளை சேமித்து வைக்கும் செல்வந்தர்களின் வீடுகளில்அவைகள் கொள்ளையிடப்படுகின்றன .
 பல நேரங்களில் அது அவர்களின் வாழ்விற்கு எமனாகவே முடிந்துவிடுவதை தினமும் நாம் காண்கின்றோம்

நம் நாட்டில் பயன்படுத்தப்படாமல் சேமித்து வைக்கப்பட்ட கணக்கிடமுடியாத செல்வங்களை கொள்ளை அடிப்பதையே தங்கள் பரம்பரை தொழிலாகக் கொண்டு பல நாடுகளிலிருந்து நம் நாட்டின் மீது பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கணக்கற்ற கொள்ளையர்கள் படையெடுத்து நம் நாட்டு வளங்களை அபகரித்தும், நம் நாட்டு மக்களை அடிமைப்படுத்தியும் வந்திருப்பதே இதற்க்கு சான்று. 

இன்றும் அதே ஈனச்செயலை பல்வேறு விஞ்ஞான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த தொழிலை அவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். 
இருந்தும் நாம் நாட்டில் வளங்கள் அழியாமல் இருப்பதற்கு காரணம் இங்கு அழியா செல்வமான இறைவனை மக்கள் நாடுவதுதான். 
எனவே தன்னிடம் அளவுக்கதிகமான உள்ளவற்றைஇல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் உயர்ந்த எண்ணம் உலகில் அதிகரித்தால் மக்களிடையே ஏற்ற தாழ்வுகள் நிச்சயம் குறையும்
அதே சமயத்தில் நாம் அழிகின்ற பொருளைக்கொண்டு அழியாப் பொருட்களை உண்டுபண்ணி அதை சேமித்து பயன்படுத்தலாம். அதை யாராலும் கொள்ளை அடிக்கமுடியாது  அது என்ன  பொருள்?
அதுதான் புண்ணியம். 
புண்ணியத்தை எப்படி சேமிப்பது.?
அது எல்லோருக்கும் சாத்தியமா?
செல்வம் இருப்பவன்,அதை ஈட்ட முடியாத நிலையிலிருப்பவர்களுக்கு தானமாக 
,உதவியாக வழங்கலாம். 
நோயுற்றவர்களுக்கும், நலிவுற்றவர்களுக்கும், பலமாக நலமாக வாழ வழி வகை செய்யலாம்.
 பசித்தோர்க்கு அன்னம் பாலிக்கலாம்.
இவைகளெல்லாம் நம் புண்ணியக்கணக்கில்  சேரும். இதை யாரும் கொண்டுபோகமுடியாது நம்முடனேயே வரும்..நமக்கு நன்மைகளை செய்துகொண்டிருக்கும்.
பொருட்களை சேமிக்க சேமிக்க அதன் மீது பற்று மிகுந்து நாம் நம்மையே மறந்து, நம்மை படைத்த இறைவனை மறந்து போவோம்.
 அந்நிலையில் அப்பொருட்களை இழக்க நமக்கு மனம் வராது .இழந்தால் பெருந்துன்பம் உண்டாகும். 
அதனால்தான் விலைமிகுந்த பொக்கிஷங்களை கோயிலில் இறைவனுக்கு  சாற்றி கண்டு மகிழும் முறை வந்தது. 
அதனால் பந்தமும் அழியும் பொருட்கள்மீது பற்றுக்கள் ஒழிந்து  இறைவன் மீது நம்மையறியாமல்  அன்பு உண்டாகி பிறவிப்பிணி தீர வழி ஏற்படும் . 
அதுபோல் மற்றொரு அழியா செல்வம் 
ராம நாமம் சொல்வது. 
அதை சொல்ல ஏதும் செலவு செய்ய வேண்டியதில்லை. செலவில்லாமலே நம் கணக்கில் சேரும் செல்வம்.
 நம்மையும் காக்கும், நம் சென்ற மற்றும் ,, வரும் தலைமுறைகளையும் காக்கும். 
அழியும் பொருள் வேண்டுமா அல்லது அழியா பதம் தரும் இறைவனின் அருள் வேண்டுமா   என்பதை நீங்களே முடிவு செய்வீர்.

8 comments:

 1. புண்ணியம் சேமிக்க சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அருமை... விளக்கத்திற்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அழியா செல்வம்
  ராம நாமம் சொல்வது.
  அதை சொல்ல ஏதும் செலவு செய்ய வேண்டியதில்லை. செலவில்லாமலே நம் கணக்கில் சேரும் செல்வம்.

  அருமையான பகிர்வுகள்...!

  ReplyDelete
 3. //அதே சமயத்தில் நாம் அழிகின்ற பொருளைக்கொண்டு அழியாப் பொருட்களை உண்டுபண்ணி அதை சேமித்து பயன்படுத்தலாம். அதை யாராலும் கொள்ளை அடிக்கமுடியாது அது என்ன பொருள்?
  அதுதான் புண்ணியம். //

  சூப்பர் !

  //அதுபோல் மற்றொரு அழியா செல்வம் ராம நாமம் சொல்வது.
  அதை சொல்ல ஏதும் செலவு செய்ய வேண்டியதில்லை. செலவில்லாமலே நம் கணக்கில் சேரும் செல்வம்.
  நம்மையும் காக்கும், நம் சென்ற மற்றும் ,, வரும் தலைமுறைகளையும் காக்கும். //

  ஆஹா,

  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

  ஸ்ரீராம் ஜயராம் பட்டாபிராம் ! ;)))))

  ReplyDelete
 4. கோதண்ட ராமன் படம் நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

  ReplyDelete