Saturday, April 5, 2014

அமைதி எங்கே?

அமைதி எங்கே?

பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம்?


காலையில் கதிரவன் உதித்தவுடன் 
பறவைகள் கூட்டை விட்டு புறப்படுகின்றன 

எதற்கு?

கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கும் 
தனக்கும் இரை தேடுவதற்கு
தானும் உண்டு தன் குஞ்சுகளுக்கும்  
உணவை ஊட்டுவித்து ஆனந்தமாக சுற்றி திரிந்து 
மீதும் இரவில் கூட்டிற்குள் உறங்கிவிடுகின்றன


அவைகளுக்கு வேறு சிந்தனை இல்லை 
இந்த உலகில் உயிரோடு இருக்கும் வரை 
இந்த செயலைஓயாமல் செய்துகொண்டிருக்கின்றன

மனிதர்களும் இதையேதான் செய்கிறார்கள் 

ஆனால் பறவைகள் தங்கள் குஞ்சுகள் வளர்ந்து தானே 
பறக்க தொடங்கியதும் அதன் பெற்றோர்களுக்கும்அதற்கும்
தொடர்பு அற்றுப்போகிறது 

ஆனால் மனித இனம் மட்டும் பந்தத்தில் சிக்கி 
உடலிலிருந்து உயிர் போகும் வரை பிறர் உயிரை
எடுப்பதும் பிறருக்காக உயிரை விடுவதுமாக 
துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கிறது

குழந்தைகளிடம் நேசத்திற்கு பதிலாக 
பாசம் காட்டினால் மோசம்தான் போக நேரிடும்.
வேஷம் கலைந்துபோகும் 
துவேஷம் உண்டாகும் 

எனவேதான் பற்று வைக்காதீர்கள் என்று
ஞானிகள் சொல்லுகிறார்கள் .
ஏனென்றால் காலபோக்கில் நம்மையறியாமல் 
பலவித பற்றுக்களில் நாம் சிக்கிகொள்கிறோம்
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகள் போல

வெளிவர வழி தெரியாமல் விழி பிதுங்கி 
மரணத்தை தழுவும் பூச்சிகள்போல
மனிதர்களும் ஏக்கத்துடனும் நிம்மதியற்றும் 
உயிரை விடுகிறார்கள்.   



சேற்றில் சிக்கிய யானை போல் வெளியே 
வரமுடியாமல் மேலும் மேலும் சேற்றுக்குள் 
அமிழ்ந்து போய் தவிப்பதுபோல் 
கனவிலும் நனவிலும் நாம் துன்பப்படுகிறோம்.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் நாம்
மகிழ்ச்சியாக வாழ இறைவன் அளித்திருக்கிறான்.

அதை நாம் அனுபவித்தது போக மிகுதியானவற்றை 
மற்றவர்க்கு அளித்துவிட வேண்டும்

அவ்வாறு செய்யாவிடில் நாம் துன்பத்தை
வேண்டி வரவழைத்து  கொள்வது போலாகும்
என்பதை உணர வேண்டும்.

பிறருக்கு கொடுப்பதில்தான் உண்மையான 
மகிழ்ச்சி இருக்கிறது.அதை அனுபவத்தில்தான்
உணரமுடியும்.

கொடுப்பது எதுவாகவானாலும் இருக்கலாம்
ஆனால் அது பிறருக்கு பயனுள்ளதாக 
இருக்கவேண்டும் என்பது முக்கியம்

கொடுப்பதை விளம்பரம் செய்யக்கூடாது .

உதவி பெற்றவன்தான் 
அதை வெளியே சொல்லவேண்டுமே 
தவிர கொடுத்தவன் அதை சொல்வது முறையல்ல. 

அந்த செயல் அவனின் 
நோக்கத்தை கறைபடுத்தி விடும் 


3 comments:

  1. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.

    இந்தக் குறளுக்கு நீங்கள் தான் ஐயா உதாரணம்...

    ReplyDelete
  2. பற்றை நாம் விடா விட்டால் கடவுள் நம் கணக்கில் பற்று வைத்து விடுவார்!

    ReplyDelete
    Replies
    1. புற்றுப்போல் வளர்ந்துவிட்ட பற்றை
      எவ்வாறு நீக்குவது?

      அதனால்தான் புற்றுநோய்க்கு கீமோ தெரபி சிகிச்சை அளித்து நோயை குணப்படுத்துவதுபோல் இறைவன் வேதனைகளையும், வாதனைகளையும் நமக்கு அளிக்கின்றான்

      அப்போதும் நம்முடைய அகப்பற்றான அகந்தை என்னும் கொடிய நோய் எளிதில் நம்மை விட்டு அகலுவதில்லை.

      Delete