Saturday, April 19, 2014

மோகம்தான் சோகத்தைத் தருகிறது.

மோகம்தான் சோகத்தைத் தருகிறது. 

மோகத்தை விட்டுவிட்டால் சோகம் இல்லை
எப்போதும் சுகம்தான்.

மனதில் தோன்றும் எண்ணங்களே
மோகத்திர்க்குக்  காரணம்

எண்ணங்கள்தான் மனம் தங்கியுள்ள உடலை
எல்லாவற்றிற்கும் பயன்படுத்திக் கொள்ளுகிறது.

அதற்கு பிராணன் துணை செய்கிறது

பிராணனை கட்டுப்படுத்தினால்
மனத்தைக் கட்டுப்படுத்தலாம்

மனத்தைக் கட்டுபடுத்தினால்
பிராணனைக் கட்டுப்படுத்தி
மனதை உயர்ந்த நோக்கமான
பிரம்மனை உணரும் மார்க்கத்திற்கு
கொண்டு செல்லலாம்.

இந்த உடல் வெறும் ஜடம்.
பிராணன்தான் அதை இங்கும்
அங்கும் கொண்டு செல்லுகிறது.
இயங்க வைக்கிறது.

ஆனால் எல்லோரும் நான் காசி போனேன் ,ராமேஸ்வரம்போனேன்
கங்கையில் குளித்தேன்  என்று அவர்கள் போவதாக நினைத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்

ஆன்மாவாகிய நாம் நாம் எங்கும்
போவதுமில்லை வருவதுமில்லை.

புற உலகில்   சூரியன் உதித்தவுடன்
அவரவர் தங்களுடைய கடமைகளைச் செய்யத் துவங்குகிறார்கள்
சூரியன் யாரையும் எதையும் செய்யச் சொல்வதில்லை

அதுபோல்தான் நமக்குள் இருக்கும் ஆன்ம  சூரியனின் ஒளியால் நாம் இயங்குகிறோம். 


இந்த உடல்  பயனற்றுப்போனால் மனத்தால்
அந்த உடலை ஒன்றும் செய்ய இயலாது.
அது அப்படியே மண்ணில் விழுந்துவிடும்.

மனம் வேறு உடலை தேடி சென்று அடைந்து
அதன் வேலைகளை தொடரும்.

இப்படியே இதற்கு முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கும்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் மனதில் உள்ள எண்ணங்களை விசாரித்து அறிந்து அவைகள் யாருக்கு உண்டாயின ?உடலுக்கா அல்லது உடலின் உள்ளே உள்ள நம்மை இயங்க வைக்கும் ஆன்ம ஸ்வரூபத்திர்க்கா  என்று ஒவ்வொரு எண்ணம் தோன்றும்போது விசாரித்து வந்தால் ஒவ்வொரு எண்ணமும்  மறைந்துவிடும்.


எண்ணமில்லா நிலையை அடைந்துவிட்டால்.
இன்ப துன்பங்கள்  இல்லை

விளைவுகளை உண்டாக்கும்
வினைகளும் இல்லை.

உடல் மட்டும் கருவிபோல் செயல்படும்.
உள்ளிருக்கும் ஆன்ம ஸ்வரூபத்தின்
வழிகாட்டலோடு.

ஆனந்தம் மட்டும் நிலையாய்  நிலைத்திருக்கும்.
எந்த பாதிப்பும் இல்லாமல்.

இந்த நிலையை அடையமுடியும்
என்னால் முடியாது என்று நமக்கு நாமே
முட்டுக்கட்டை போட்டுக்கொள்ளுவது முட்டாள்தனமே  

4 comments:

  1. /// எண்ணமில்லா நிலையை அடைந்துவிட்டால்.... /// எல்லோருக்கும் ஒருமுறை இந்த நிலை வரும்... (வரலாம்)

    ReplyDelete
    Replies
    1. முயன்றால் முடியாது ஒன்றும் இல்லை.
      மற்ற எல்லா இலக்குகளையும் புறம்தள்ளி
      முயன்றால்தான் வெற்றி கிட்டும். யாரும் அதற்க்கு தயாரில்லை.

      நன்றி

      Delete
  2. உயர்ந்த தத்துவ விசாரணை.. நல்ல விஷயங்கள்..
    மனம் அடங்க வேண்டும்.. வாழ்க வளமுடன்..

    ReplyDelete