Saturday, April 26, 2014

என்னே உன் கருணை!

என்னே உன் கருணை!

நிலமகளும்   திருமகளும் ஒருங்கே
அருகில் நிற்க அழகாய் காட்சி தரும் நெடுமாலே
உனக்கு அனந்தகோடி நமஸ்காரம்.


ஓவியம்.தி.ரா.பட்டாபிராமன் 


நிலமகளே நின் தயவின்றி
இவ்வுலகில் உயிர்கள்
கால் பதிக்க இடமேது?

நாள் முழுதும் வானிலே
பறந்தாலும் பறவையினங்கள்
உன் மீது தான் உறங்கவேண்டும்

உயிர்களுக்கெல்லாம் அருள் செய்ய
தெய்வங்களும் கோயில் கொள்ள
இடமளிப்பவள் நீதான் அன்றோ !

நிலமகளே நீ இல்லையேல்
உயிர்கள் வாழ காற்றேது,
உணவேது?உறைவிடமேது

உன்னை இகழ்வாரையும்
அகழ்வாரையும் 
பொறுத்தருளும்
உன் கருணைக்கு நிகரேது?

திருமகளே உன் பரிவான
நோக்கின்றி இவ்வுலகில்
இன்பம் ஏது
இனிய வாழ்வேது?

அலைகடல்மேல்
அரிதுயில்  கொண்டவா
அடியவர்களைக் காக்கவே அர்ச்சா
மூர்த்தியாய்க்  ஆலயத்தில் நின்ற
திருக்கோலம் கொண்டவா !

ஆயிரமாயிரம் கவலைகள்
அகத்தே தோன்றிடினும்
ஆலயம் சென்று
நிலமகளும்  திருமகளும்
அருகே நிற்க உன் திவ்விய தரிசனம்
கண்டால் போதும். அனைத்தும்
அடுத்த கணமே
காணாமல் போகும். 

6 comments:

  1. படமும் அருமை. பதிவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அதிகாலையில் உங்கள் வருகை
      இவனுக்கு பெருமை

      படத்தை .இரெண்டே நாளில் வரைந்தேன்

      Delete
    2. நானும் படம் வரைய முயற்சி செய்துள்ளேன். சிலைக்கு கண் திறப்பது என்பார்களே... அது போல படங்களில் ஜீவனைக் கொண்டு வருவது (என் போன்றவர்களுக்குக்) கடினம். ஒரு படம் வரைவதே எனக்கெல்லாம் வர மாட்டேன் என்கிறது. ஸ்ரீதேவி பூதேவி யுடன் பெருமாளை வரைவதும் அலங்காரங்கள் சேர்ப்பதும் திறமைதான் ஸார்.

      Delete
    3. நன்றி sriram

      எனக்கு வேறு எதிலும் நாட்டம் இல்லை.

      என் மன திருப்திக்காக 20தாவது வயதில் இருந்து கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்.

      அவற்றில் பல படங்கள் என்னுடைய மற்றொரு வலைப்பதிவு "சிந்தனை சிதறலில்" போட்டிருக்கிறேன்.

      சில பாராட்டுவார்கள்.
      பலர் எப்போதும் குறைகளைதான் சொல்லுவார்கள்.

      அதையெல்லாம் தூக்கிப் குப்பையில் போடவேண்டும்

      .நான் வரையும் எல்லாப் படங்களும் எனக்கு பிடிக்கும்.

      என் ஆத்ம திருப்திக்காகத்தான் வரைகிறேன்.
      அதுவே எனக்கு தியானம். பக்தி.

      யார் என்ன சொன்னாலும், எவ்வளவு குறைகண்டாலும்
      படத்தில் ஒரு ஜீவன் இருக்கும்.
      அதைதான் நான் பார்க்கிறேன்.

      ஓவிய மேதைகளின் படங்களோடு இவன் படங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

      இவன் இன்னும் கற்றுக்குட்டிதான்.

      தொலைகாட்சி பார்ப்பது, வம்பளப்பது, போன்றவற்றை நிறுத்திவிட்டால் படங்கள் வரையே நேரம் நிறையக் கிடைக்கும்.

      தஞ்சை பெரிய கோயில் ஒரே நாளில் கட்டப்பட்டதல்ல என்பதை நினைவு கொள்ளுங்கள்.

      நேரம் கிடைக்கும்போதெல்லாம் வரைந்து தள்ளிக்கொண்டே இருங்கள். நான் பென்சில், பால்பாயிண்ட், மெடல் பாயில், நீர் வண்ணம்,என எல்லாவற்றிலும் வரைவேன்.
      எனக்கு வேறு எதிலும் நாட்டம் இல்லை.


      ஓவிய மேதைகளின் படங்களோடு இவன் படங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். இவன் இன்னும் கற்றுக்குட்டிதான்.


      சில படங்களை வரைய பல மாதங்கள் பிடித்தது.நுணுக்கமாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வரைந்தேன். அதை ரசிக்கக் கூட யாரும் இல்லை. சில படங்களுக்கு ஒன்றுமே இருக்காது

      எல்லாவற்றிற்கும், சிபாரிசு வேண்டும். இந்த உலகத்தில்
      .
      படங்கள் நன்றாக வந்தும் அதை பாராட்டக்கூட மனம் இல்லாத மனிதர்கள் நம் வலையில் உண்டு.

      பாராட்டியவர்கள் ஒற்றைப்படை எண்ணிக்கைதான்.

      அதற்கெல்லாம் கவலைப்படாமல் வரைந்து கொண்டே போக வேண்டும்.

      Delete
  2. அருமை ஐயா...

    ஓவியம் உங்களால் மட்டுமே முடியும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD

      சகல கலா வல்லவரான உங்களாலும் முடியாதது என்று ஒன்று உண்டோ இவ்வுலகில்.

      நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் படம் வரைவதையும் ஆன்மீக கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் மட்டும்தான் என் கவனத்தை செலுத்துகிறேன்.

      எனக்கு வேறு எதிலும் நாட்டம் இல்லை.

      சில ஆண்டுகளாக தொடர்ந்து எனக்கு நீங்கள் அளிக்கும் உற்சாகம் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. அதற்க்கு நன்றி. DD

      Delete