Wednesday, April 9, 2014

முதலில் கொடுக்கக் கற்றுக்கொள் !

முதலில் கொடுக்கக் 
கற்றுக்கொள் !

இறைவன் நீ கருவில்
உருவான உடனேயே
உனக்கு அடுத்தடுத்து என்ன தேவையோ
அதைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றான்.

முதலில் நீ இந்த உலகில் பிறவி
எடுத்திட தந்தையைக் கொடுத்தான்
அவன் கொடுத்த கருவை சுமக்க
ஒரு தாயைக் கொடுத்தான்.

அவளோ தான் உண்ணுவது அனைத்தையும்
உனக்காக கொடுத்து உன் உடலை  வளர்த்தாள்

நீ இந்த உலகத்தில் வெளிவந்ததும் உன் பசியாற
அவள் அன்பையும் பாசத்தையும்
கலந்து பாலைக் கொடுத்தாள்

நீ  உலகத்தில் இன்பமாக வாழ கோடிக்கணக்கான
மனிதர்களும் உயிரினங்களும், தாவரங்களும், பஞ்ச பூதங்களும்
உனக்கு தேவையான வற்றை வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன

ஆனால் நீ என்ன செய்தாய் ?

எல்லாம் உனக்கு ,தனக்கு தனக்கு என்று அனைத்தையும் 
சுருட்டப் பார்க்கின்றாய். 

கொடுக்க கொடுக்கத்தான் இன்பம் 
என்பதைமறந்து போனாய்.

எடுக்க எடுக்க எல்லாம் வற்றி காலியாகத்தான்  போகும் 
என்பதை மறந்துவிட்டாய்.

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல்
மனம் புழுங்கிச் சாகின்றாய்
இந்த நிலை உனக்கு தேவையா?

தாவரங்கள் இந்த உலகில் பிறந்ததுமுதல் தன்னிடம் உள்ள அனைத்தையும்  பிறருக்காகவே வழங்கி தங்கள் வாழ்க்கையை 
பயனுற வாழ்கின்றன 



இறைவன் அதற்கு வேண்டிய அனைத்தையும் அவைகள் இருக்கும் இடத்திலேயே வழங்குகிறான். 

மனிதா நீ மட்டும் ஏன் பேய் போல் அங்குமிங்கும் அலைகின்றாய்

உதவுவதற்கு அங்கும் இங்கும் 
சுற்றி திரிய வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே 
மற்றவர்களுக்கு உதவலாம். 



உதவுவதற்கு அன்பு நிறைந்த மனம் இருந்தால் போதும். 

அதற்க்கு அன்பே உருவாய் விளங்கும் இறைவனான ராம நாமத்தை
உச்சரித்து வந்தால் ;போதும் மனதில் உள்ள அத்தனை அழுக்குகளும் விலகிவிடும். 

2 comments:

  1. அனைத்து அன்பையும் சுருட்டினால் அனைத்தும் சரியாக போகும்...

    ReplyDelete
  2. கடைசியில் ஆறடி நிலம்தான் சொந்தம் என்பதை மறந்து விடுகிறோம். கொடுக்கக் கொடுக்கக் குறையாதது அன்பும் அறிவும்தான். அனைவரிடத்தும் அன்பு செய்வோம்.

    ReplyDelete