Monday, April 28, 2014

கருணையே வடிவெடுத்து வந்த காஞ்சி மாமுனிவரே !

கருணையே வடிவெடுத்து வந்த 
காஞ்சி மாமுனிவரே !



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

மூவடியால் உலகை அளந்த
வாமனன் போல் தன் காலடியால்
பாரதத்தை  சுற்றிவந்து சனாதன நெறிக்கு
புத்துயிர் அளித்த மகா பெரியவா !

எந்நேரமும் அம்பிகையை நினைந்து
அவள் அருள் மழையில் மழையில்
நனைந்து அடியவர்களின்
அல்லல்களை அகற்றிய
தூயவா !

பரம்பொருள் ஒன்றென்றாய்
அதுவே பல வடிவங்களில்
பாராய்விரிந்ததென்றாய்

மதங்களிடையே ஒற்றுமை கண்டாய்
மனங்களில் வேற்றுமை நீக்கினாய்.

வேத பாடசாலைகளை நிறுவினாய்
அறிஞர்களின் மனத்தே மண்டிக்
கிடந்த பேதங்களை நீக்கினாய்
அனைவரையும் ஆனந்தத்தில்
திளைக்கச் செய்தாய்

இறைவனை அடைய உதவும்
உண்மை நெறியான உண்ணா நோன்பும்,
பேசா நோன்பும் உன் வருகையால்
உயிர் பெற்றது.


அறிவுக் கடலாய் விளங்கினாய்
அகிலம் முழுவதும் இருந்து
அறிஞர்கள் நாடி வந்தார்கள்
உன்னிடம் தெளிவு பெற
கடலைத் தேடி வரும் நதிகள் போல்.

புறத்தே உன் வடிவம் மறைந்தாலும்
அகத்தே என்றும் மறையாது
உன் ஒளி   வடிவம். சுவைக்க
சுவைக்க இனிக்கும் அமுதம் போல்
உள்ளத்தில் நிலையாய்  நின்று
இன்பம் தரும்.



3 comments:

  1. முதலில் ஓவியத்துக்குப் பாராட்டுகள். தத்ரூபமாய் வந்திருக்கிறார் மகாப்பெரியவர். உங்கள் கைகளில் அவரின் கருணை இறங்கியிருக்கிறது. ஜீவனுடன் அருமையான ஓவியம் ஸார்.

    என்னுடைய மிகப்பெரிய குறை எத்தனையோ வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் காலம் இருந்தும் நான் ஒருமுறை கூட பெரியவரை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவனல்ல என்பதுதான்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அவர் கருணை.

      இந்த படம் 37 ஆண்டுகளுக்கு முன் வரைந்தது.
      எனக்கு பிடித்த படம்.

      அவரை தரிசிக்க வில்லையே என்ற கவலை வேண்டாம்.நானும் அவர் அருகில் இருந்தும் அவரை அருகில் சென்று வணங்கியது கிடையாது. ஏனென்றால் அவரைப் பற்றி எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. தூரத்தில் இருந்துதான் அவரைத் தரிசித்துள்ளேன்.

      தினமும் அவர் வடிவம் முன்பு நின்று
      மன உருகி பிரார்த்தனை செய்தால் போதும்
      உங்கள் மனதில் உலா வரத் தொடங்கிவிடுவார். இது சத்தியம்.

      Delete
  2. //37 ஆண்டுகளுக்கு முன்...// வியப்பு தவிர எதுவுமில்லை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete