Friday, August 1, 2014

வாழ்க்கை என்னும் நாடகம்

வாழ்க்கை என்னும் நாடகம் 

அனைவரின் வாழ்க்கையும்
ஒரு மெகா முடிவில்லாத தொடர்.

அந்த தொடரின் துவக்கம் மற்றும்
முடிவு யாருக்கும் தெரியாது.

அதை  எழுதிய எழுத்தாளருக்கும்
அதை இயக்கும்  இயக்குனருக்கு மட்டுமே தெரியும்.

அதில் நடிக்கும் பாத்திரங்களுக்கும் தெரியாது.
இயக்குனர் எந்த பாத்திரத்தை
நடிக்க சொல்லுகிறாரோ அதை ஒழுங்காக
தத்ரூபமாக செய்வது மட்டும்தான்
நம் கடமை.

அதை விடுத்து அவரின் உத்திரவுக்கு
மாறாக நாம் செயல்பட்டால் அந்த தொடரிலிருந்து உடனடியாக நீக்கப்படுவோம். அதுதான் விபத்து போன்றவற்றால்
ஏற்படும் மரணம் போன்றவை.

பாத்திரத்தை நிறைவாக செய்தால் அந்த தொடர் முடிந்ததும்
அடுத்த தொடரில்  வேறு நல்ல பாத்திரம் நமக்கு கிடைக்கும்.

இந்த வாழ்க்கை தொடரில் நாம்
சில நேரங்களில் நடிகர்களாக இருக்கிறோம்.
பல நேரங்களில் பார்வையாளர்களாக் இருக்கிறோம்.

வாழ்க்கை என்னும் மெகா தொடரில்
நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் யாரும் அறியாமலேயே ஒரு குறிப்பிட்ட சம்பவங்களை மட்டும் பார்த்துவிட்டு இயக்குனரை குறை சொல்வதிலேயே பலர் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர் இவ்வுலகில்.

மேலும் நாம் நமக்கு கொடுத்துள்ள பாத்திரத்தை சரியாக செய்யாதது மட்டுமல்லாமல் பிறரையும் அவர்கள் பாத்திரத்தை செய்ய விடாமல் தலையிட்டு நாடகத்தின் போக்கில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் அதுபோல் செய்பவர்களின் வாழ்க்கையில் இறைவன் குறுக்கிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலைக்கும் நாம்தான் காரணமேயன்றி இறைவன் பொறுப்பல்ல என்பதை பொறுப்பற்று பேசும் மக்கள்உணரவேண்டும்.



இந்த உலகத்தில் ஒவ்வொரு செயலின் பின்னால் அந்த செயல் நிகழ்வதர்க்குரிய காரணம் ஒளிந்துகொண்டிருக்கிறது
என்பதை ஞானிகளைத் தவிர மற்றவர்கள் உணர்வதில்லை.

அதனால்தான் இந்த உலகில் இத்தனை குழப்பங்கள். இந்த உண்மையை உணர்ந்துகொண்ட காரணத்தினால்தான் ஞானிகள் அமைதியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் கொதிக்கிறார்கள் மற்றும் குதிக்கிறார்கள். பிறகு அடங்கி போகிறார்கள்.

எனவே நடிகர்களாகிய நாம் நமக்கு இயக்குனராகிய இறைவன் நமக்களித்துள்ள பாத்திரத்தை ஒழுங்காக செய்தால் அது போதும். நமக்கு அடுத்த தொடரில் நல்ல பாத்திரம் கிடைக்கும்.

அதை விடுத்து இயக்குனராகிய இறைவனின். ஆணைக்கு மாறாக செயல்பட்டால். துன்பம்தான் விளையும்.


3 comments:

  1. நல்ல பதிவு. இதைப் படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது ஒரு பழைய பாடல்!

    https://www.youtube.com/watch?v=cBUSfxwjanc

    ReplyDelete
  2. நன்று சொன்னீர் ஐயா நன்றி

    ReplyDelete