Wednesday, August 12, 2015

கண்முன்னே காண்பது கடவுளடா

கண்முன்னே 
காண்பது கடவுளடா 

கண்முன்னே
காண்பது கடவுளடா

நம் முன்னே
உலவிடும் உயிர்களடா

ஊரிலே ஒரு சில பேர் சேர்ந்து
கல்லாலே கோயில் கட்டுறான்
கட்டி வைத்த  கோயிலினுள்
ஒரு கல்லை வைத்து கடவுளாய்
வணங்குறான்.

உடல் என்னும் கோயிலிலே
உறைகின்ற கடவுளை உணர்த்தத்தான்
உலகத்தில் கோயிலை கட்டியது
அந்தக்காலம்.

ஆனால் இன்றோ மனம் கல்லாய்ப் போன
மனிதர்கள் தங்கள் கல்லாப் பெட்டி நிறைக்கக் கோரி
ஆண்டவனிடம் வேண்டுதல்களை வைக்கும்
இடமாய்ப் போனது இந்தக் காலம்

தன்னைச்  சுற்றி துன்புருவோருக்கு
ஆறுதலைத் தர மனமில்லாமல்
ஆலயத்தில் ஆறுமுக சாமியிடம்
ஆறுதலை  தேடி அலையுது ஒரு கூட்டம்.

கை நிறையக் காசிருந்தும்
கஷ்டப்படுவோருக்கு
உதவ மனமில்லாமல்
கால் தூசுக் கூட பெறாத
குப்பைகளை வாங்கி
குவிக்குது ஒரு  கூட்டம்

அன்பே  சிவமாய்
அகத்துள்ள அமர்ந்திருக்க
அதை உணர்ந்து
ஆனந்தம் அடையாது
அகம்பாவம் பிடித்து
அனைத்தையும்
தனதாக்கிக்கொள்ள
துடிக்குது ஒரு கூட்டம்

இறைவனிடம்
கொள்ளும்  அன்புதான்
இன்பம்தரும்  மற்றெல்லாம்
துன்பத்தினைத்தான்
பரிசாய் தந்திடும் என்பதை
உணர்ந்தவரே அறிவுடையோர்.

No comments:

Post a Comment