ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள்.
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மகானை பற்றி
நினைப்பதும் பேசுவதுமே நம்முடைய பாக்கியம்.
கடுமையான தவம் மேற்கொண்டு மிக சமீப காலத்தில்
நம் கண் முன்னேயே பிரம்ம நிலையை அடைந்து
இன்றும் நமக்கு அருள் செய்து கொண்டிருக்கும் மகான்.

அவர் நமக்கு அளித்த கொடை அவருடைய கீர்த்தனங்கள்.
அதில் ஒன்றுதான் மானச சஞ்சரே.
மனம்தான் அனைத்திற்கும் காரணம்.
அதுவேதான் நமக்கு நண்பனும்
அதுவேதான் நமக்கு எதிரியும் கூட.
ஒரு கட்டிடம் கட்ட சாரம் எப்படி தேவையோ
அதுபோல் இந்த மனமும் நமக்கு தேவை.
அதை பண்படுத்த வேண்டும் .இறைவனை உணர
அதை நமக்கு சாதகமாக விளங்கும் சாதனமாக
நெறிப்படுத்தவேண்டும்.
மனதிற்கு உபதேசம் செய்யும் சுவாமிகளின் பாங்கின் உண்மைப்பொருளை உணராது ஒவ்வொருவரும் தன் மனம் போன போக்கில் பொருள் கொள்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக இந்த பாடலின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் என்று சிந்தித்தபோது இவன் மனதில் தோன்றிய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
பிடித்தால் ஏற்றுக்கொள்ளவும் இல்லையேல் தள்ளிவிடவும்.
மானச சஞ்சரரே ..
பிரம்மணி மானச சஞ்சரரே..
மனமே நீ எப்போதும் சத் சித் ஆனந்தம் என்னும்
பிரம்ம பாவத்தில் உலவுவாயாக

மதசிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே .
மத நீர் சொரியும் தந்தங்களை அலங்காரமாக
கொண்ட சிரசை உடைய விநாயக பெருமானைப் போல
மனமே நீ எப்போதும் ஆனந்த நிலையில் உலவுவாயாக
மஹனீய கபோல விஜித முகுரே.
இதைப்போன்ற உயர்ந்த நிலையை அடைந்த
மகான்களை போல நீயும் மனதில் கொண்டு உலவுவாயாக
ஸ்ரீ ரமணி குச துர்க விஹாரே
சேவக ஜன மந்திர மந்தாரே
ஐஸ்வர்யங்களை அளிக்கும் லக்ஷ்மியும், துர்க்கையும்
இதயத்தில் வாசம் செய்ய இறைவனின் அடியார்களுடன் கூடி
அவன் புகழ் பாடி ஆனந்தம் அடைவாயாக
பரமஹம்ச முக சந்திர சகோரே
சகோர பட்சியானது வானிலிருந்து பூமிக்கு வருவதேயில்லை.
அது வானிலேயே பிறந்து அங்கேயே வாழ்ந்து சந்திரனிடமிருந்து வரும் மழை துளிகளைப் பருகி இன்பமாய் இருப்பதைப் போல நீயும் அந்த உயர்ந்த பிரம்ம பாவனையிலேயே எப்போதும் சஞ்சரிப்பாயாக
ஹம்சம் என்னும் அன்ன பறவையானது பாலில் கலந்துள்ள தண்ணீரை நீக்கிவிட்டு பாலை மட்டும் குடிப்பதுபோல் மிக உயர்ந்த நிலையை அடைந்த
பரமஹம்சர்கள் போன்ற மகான்கள் உலகிலே இருந்தாலும் உலக விகாரங்கள் தங்களை ஒட்டவிடாமல் அனைத்தையும் பிரம்மமாக பாவித்து பரவச நிலையில் இருப்பதைப்போல் மனமே நீயும் நீ உயர்ந்த நிலையில் உன்னை வைத்திருப்பாயாக
பரிபூரித முரளி ரவதாரே
முழும் நிலவைப்போல் வெண்மையாக அழகாக ஒளி வீசும் முகத்தையுடைய பரிபூரணனான
பரப்ரம்மம் கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிவை தியானித்துக்கொண்டு எப்போதும் ஆனந்த பரவச நிலையில் ,மனமே நீ எப்போதும்உலவுவாயாக.

அருமை ஸார். எனக்கு மிகவும் பிடித்த பாடல். வரிகளைப் பாடிப் பார்த்தேன்!
ReplyDeleteஅருமையான விளக்கத்திற்கு நன்றி ஐயா...
ReplyDelete