திரு ஆடி பூரம்

ஆடி பூரம் தன்னில்
அவதரித்த கோதை
கண்ணனையே நினைந்து
நினைத்து அவனுடன்
கலந்துவிட்ட பேதை
இனிமையான முப்பது பாக்களில்
முப்பது முக்கோடி தேவர்களும்
வணங்கும் முகுந்தனின் அருளைப்
பெற பாதை வகுத்து தந்த மேதை
வேதத்தின் உட் பொருளை
விளையாட்டாய் பாடி அறிந்து இன்புற
பாக்களாய் தந்தாள் பாவை ஆண்டாள்
திருப்பாவை என்னும் நூலாக
அரங்கனுடன்
கலந்துவிட்ட பக்தை அவள்
அடியவர்களின் துயர் துடைக்கும்
அன்னையும் அவளே. அவளை
நினைத்து வணங்குவோம் இந்நாளில்.
ஆடி பூரம் தன்னில்
அவதரித்த கோதை
கண்ணனையே நினைந்து
நினைத்து அவனுடன்
கலந்துவிட்ட பேதை
இனிமையான முப்பது பாக்களில்
முப்பது முக்கோடி தேவர்களும்
வணங்கும் முகுந்தனின் அருளைப்
பெற பாதை வகுத்து தந்த மேதை
வேதத்தின் உட் பொருளை
விளையாட்டாய் பாடி அறிந்து இன்புற
பாக்களாய் தந்தாள் பாவை ஆண்டாள்
திருப்பாவை என்னும் நூலாக
அரங்கனுடன்
கலந்துவிட்ட பக்தை அவள்
அடியவர்களின் துயர் துடைக்கும்
அன்னையும் அவளே. அவளை
நினைத்து வணங்குவோம் இந்நாளில்.
அருமை ஐயா...
ReplyDelete