Saturday, April 30, 2016

ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?




ஹனுமானைப் போல் உனக்கு சேவை செய்ய வில்லை
மாறாக வாழ்நாள் முழுவதும் மற்றவரின் தேவையை
பூர்த்தி  செய்வதிலேயே காலத்தை கழித்த இவனுக்கு
ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

சதாசிவ ப்ரம்மேந்திரரைப்  போல்
புலனை அடக்கி பல்லாண்டுகள் தவம்
ஏதும் செய்ததில்லை மாறாக புலன் வழி
சென்று துன்பமும் இன்பமும் மாறி மாறி
அடைந்து உன்னை மறந்து திரிந்த இவனுக்கு
 ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

புரந்தர தாசரைப் போல் கோடிக்கணக்கான
மதிப்புள்ள செல்வங்களை கண  நேரத்தில்
துறந்து உன் பாதமே கதி என்று வைராக்கியத்துடன்
புறப்படாது அற்ப பொருட்களின் மீது
மோகம் கொண்டு அனுதினமும் அல்லல்படும்
இந்த அற்பனுக்கு ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

கூரேசர் போல் குருநாதன் அழைத்தவுடன்
பட்டம் பதவி செல்வமனைத்தையும் அப்படியே
விட்டுவிட்டு அவர் பின் சென்ற அந்த பக்த சிரோன்மணி
போன்ற சஞ்சல மனமில்லாத குணமற்ற இவனுக்கு
ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

உன்னை அறிந்துகொள்ளும் ஞானமும் இல்லேன்
உன்னைக் குறித்து தவம் செய்யும் சக்தியும் இல்லேன்
உன் நாமம் ஒன்றே கதியென்று நம்பி இவ்வுலகில்
வாழும் இவன் மீது  இரங்கி  உன் அருளை தா !


Wednesday, April 27, 2016

ஒரு கண நேரமும் உன்னை மறவேன்

ஒரு கண  நேரமும் உன்னை மறவேன் 

ஒரு கண  நேரமும் உன்னை மறவேன்
நான்மறைகள் போற்றும் நாரணனே
என் உள்ளத்தில் வாசம் செய்யும்
வாசுதேவ பெருமானே

நொடிக்கு ஆயிரம் எண்ணங்கள் என்
மனதில் தோன்றிடினும் துடிக்கும்
என் இதயம் என்றும் மறவாது உன்
இனிய திருநாமம்தன்னை

கண்ணை மூடினால் காணமல்
போய்விடும் மண்ணும் விண்ணும்
கருத்தில் உன்னை வைத்தால்
மண்ணிலும் விண்ணிலும் உன்
திரு காட்சிதான் தோன்றும்

உறக்கத்தில் உன்னை நான் மறந்தாலும்
உறங்காது நீ உன் பக்தர்களைக் காக்கும்
குணம் கொண்டவனே

மணம் வீசும் மலர் மாலைகள்  சூடியவனே
அலர்மேல் மங்கை உறையும் மார்பனே
அன்பின்  பிறப்பிடமே ஆனந்தத்தின் உறைவிடமே
என்றும் உன் திருநாமம் என் நாவில் நடமிட
வரமருள்வாய்



Saturday, April 23, 2016

சிந்தியுங்கள் அன்பர்களே !


சிந்தியுங்கள் அன்பர்களே !


பரியாய் உருவெடுத்து  அதன்மேல்
பரிமேலழகனாய் பாரிலுள்லோரை
காக்க பவனி வந்தவனும் அவனே

Image result for kallazhagar

உறியில் வைத்திருந்த வெண்ணையை
உள்ளங்கைகளால் எடுத்து  ஆயர்குல
சிறுவர்களோடு திருடி உண்டு மகிழ்ந்த
கோகுலக் கண்ணனும் அவனே



கரிய யானையை காலன் வடிவில்
வந்த முதலையின் பிடியிலிருந்து
காத்தருளிய ஹரி பகவானும் அவனே

Image result for gajendra moksham

பக்தனைக் காக்க நரிகளையெல்லாம்
பரிகளாக மாற்றிஅருள் செய்த
பரமசிவனும் அவனே

Image result for manickavasagar in tamil

கல்லையே கடவுளாக கண்டு தன்
கண்ணை கொடுக்க வந்த கண்ணப்பனுக்கு
தன்னையே கொடுத்தருளிய
காளத்திநாதனும் அவனே

Image result for srikalahasti temple images

விண்ணும் மண்ணும் படைத்தவன்
நம்  கண்ணுக்கு கண்ணாய்  இருப்பவன்
மண்ணிலும் விண்ணிலும் நம்மை விட்டு
என்றும் பிரியாமல் இருப்பவன்
என்று எல்லாமாய் அவன் இருக்கையில்
எல்லாம் நான்தான் என்ற எண்ணம்
ஏன் வந்தது ?

சிந்தியுங்கள் அன்பர்களே !

Image result for manickavasagar in tamil

நம் இதயம் என்னும் அரங்கத்தில்
நடனமாடுபவனும் சிதாகாசத்தில்


மெடல் ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

வீற்றிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும்
நம் சிந்தையில் எப்போதும் இருந்தால் போதும்
சித்தம் தெளிந்துவிடும்.

images-coustesy-google images




Thursday, April 21, 2016

கூடு விட்டு கூடு பாயும் வித்தை

கூடு விட்டு கூடு பாயும் வித்தை 

சித்தர்களும் யோகிகளும் கூடு விட்டு

கூடு பாயும் வித்தை நிகழ்த்தி காட்டியதாக

கேள்விபட்டிருக்கிறோம்.



அருணகிரிநாதர். கிளி உடலில் புகுந்து

தேவ லோகம் சென்று வந்ததாகவும்

அவர் மீண்டும் மனித உடலில் புகுவதற்க்குள்

அந்த உடலை அவர் எதிரிகள் அழித்துவிட்டதாகவும்.அதனால்

அவர் கிளி உடலிலேயே தங்கி பிறகு இறைவனுடன்

கலந்துவிட்டதாக அறிகிறோம்.


ஆதி சங்கரர்  சரிதத்திலும் இதுபோன்ற நிகழ்வு

நடந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.


சுய நினைவுடன் தான் குடியிருந்த உடலிருந்து வேறு

உடலுக்குள் புகுந்து மீண்டும் வருவது அனைவருக்கும்

சாத்தியமில்லை


ஆனால் சுயநினைவின்றி மரணம் என்ற நிகழ்வின் மூலம்

ஒரு உடலிலிருந்து மற்ற உடலுக்கு  தொடர்ந்து முடிவில்லாது

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும்

பயணம்  செய்துகொண்டிருக்கிறது  என்பதை நாம் அறியாமல்

இருந்துகொண்டிருக்கிறோம்.


புல்லிலிருந்து நம் பயணம் தொடர்துகொண்டிருக்கிறது.


அந்த பயணத்தை நாம் முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென்றால்

மனித உடலில் இருக்கும்போதுதான் அதற்க்கான முயற்சியை

நாம் செய்ய முடியும்


நமக்கு அந்த அரிய  நல் வாய்ப்பை இறைவன் அளித்துள்ளான்.

அந்த அரிய  வாய்ப்பை  பயன்படுத்திக்கொண்டு அதற்க்கான

முயற்சிகளை மேற்கொண்டு  நாம் அனைவரும்

இந்த முடிவில்லா பயணத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

நமக்கு பிறவியைத் தந்த இறைவனே
அதற்குமுற்றுபுள்ளி வைப்பவனாகவும்  திகழ்கின்றான்

அவன் திருவடிவை நினைந்து அவன் திருவடியை நாடி

பக்தி செய்து பலமும் பலனும்  அடைவோமாக 

Friday, April 15, 2016

இறைவனிடம் எதையும் கேட்காதீர்

இறைவனிடம் எதையும் கேட்காதீர் 

கேளாமலே அனைத்தையும்
கொடுப்பவன் இறைவன்
ஒருவன்தான்

அதை விருப்பமுடன் ஏற்று
இன்புற்று வாழும் வகை
அறிதல் வேண்டும்

கொடுத்தது அனைத்தையும் பயன்படுத்தாது
அகிந்தை கொண்ட மனதின் ஆசைகளுக்கு
வயப்பட்டு வரங்களை கேட்டு பெற்றவர்கள்
யாவரும் கெட்டழிந்து போனவர்களே

மூவுலகையும் ஆளும் வரம் கேட்டு
பெற்றான் பிரம்மனிடம் ஹிரண்யகசிபு
வரம் பெற்றதின் பலனை அனுபவிக்காது
தரம் தாழ்ந்து போனான்

தானே கடவுள் என்று
தன்னை நினைத்துக்கொண்டு
தகாத செயல்களை செய்து தன்
அழிவினை தேடிக்கொண்டான்

பவக்  கடலிலிருந்து மீளத் தவம்
செய்ய வேண்டும்

அதை விடுத்து அகந்தை மேலிட்டு
தகாத செயல்கள் செய்து
பாவக் கடலில்மூழ்கி
மடிவதால்  யாது பயன்?

அன்பு மயமானவன் இறைவன்
அவனை அடையும்
ஒரே வழியும் அதுவே

Thursday, April 14, 2016

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் 

நம் இதயத்தினுள்ளே ஒளிந்து கொண்டு
ஓயாமல் நம்மை இயக்கிகொண்டிருக்கும்
இறைவனை உள்ளே சென்று காணாது
உலகம் முழுவதும் சுற்றி திரிந்து
தேடுவதால் பயன் ஏது ?

தன் வடிவாய் மனிதனை படைத்தவனுக்கு
வடிவங்கள் சமைத்து வாழ்நாள் முழுவதும்
வழிபாடு செய்வதால் மட்டும் அவனைக்
காணுதல் எளிதாமோ ?

வடிவமற்ற பரம்பொருளுக்கு வடிவம்
கொடுத்தோம் தவறில்லை .

தான் கொடுத்த வடிவம்தான்
உயர்ந்த தெய்வம் என்றும் மற்ற
வடிவங்கள் தாழ்ச்சி  என்று
ஏற்ற தாழ்வுகள் கற்பித்து அறியாமையில்
உழலும் மூடர்களை என்னவென்று சொல்லுவது?

வெட்ட வெளியிலிருந்து தான்  அனைத்தும்
உருவாகி மிதக்கின்றது சில காலம்
நாம் வாழும் உலகம் உட்பட

பிறகு மறைந்து வேறொரு உருவெடுக்கிறது
முடிவில்லா இந்த செயற்பாட்டில் பின்
உள்ளவனின் நினைவொன்றே போதும்
நிலையான இன்பம் அடைய

நிலையில்லா உலகில்
நாம் உருவாக்கும் சிலைகளும்
தப்புமோ அழிவிலிருந்து  ?
அவைகளை வழிபடும் நாமும்தான் ?

இந்த உலகில் அனைத்தும் நாம் இன்பமாக
வாழ இறைவனால் அளிக்கப்பட்டவையே

அதை அனைவரும் தனக்குமட்டும்தான்
சொந்தம் என்று உரிமை கொண்டாடுவது
அறிவீனம் .

அதனால்தான் நாம் அனைவரும்
அடைகின்றோம் ஒவ்வொரு கணமும்
சொல்லொணா துன்பங்கள்.

இருப்பதை கொண்டு இன்புறுவதில்லை
அனைத்தையும் தரும் தில்லை நாதனையோ
நம்முள் இருக்கும் திருவரங்கத்தானையோ
நினைப்பதில்லை.

நம்மோடு சேர்ந்து அழியும் பொருட்கள் மீது
நாட்டம் கொண்டு வாழ்நாள் முழுவதும்
வாட்டம் கொண்டு அழிகின்றோம்.

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்று
நினைப்போம் .

யாருக்கும் மனதாலும் தீங்கு நினையோம்.
பிறர் தரும் தொல்லை பொறுப்போம்

எல்லையில்லாத பரம்பொருளை சரணடைந்து
அன்பால் அனைவரும் இணைந்து ஆனந்தமான
வாழ்வு வாழ்வோம் 





Wednesday, April 13, 2016

துர்முகி ஆண்டே வருக! வருக !

துர்முகி ஆண்டே வருக! வருக !




பரிமேலழகர் பவனி வரும் ஆண்டு
பாரிலுள்லோரின் பவங்களை
தீர்க்கும் ஆண்டு

பல்லாண்டு பாடி பரவிய பரமனின்
புகழ் கூறும் நல்லோர்கள்
போற்றும் ஆண்டு

உள்ளத்தில் நல்லதோர் எண்ணங்களை
விதைத்து நன்மைகளை நானிலத்தோருக்கும்
நன்மைகளை நல்கிடும் ஆண்டு

தீய எண்ணம் கொண்டோர் மனங்களில்
நல்லதோர் மாற்றத்தை விளைவித்து
நற்செயல்கள் ஆற்றிட தூண்டும்
துர்முகி ஆண்டே வருக! வருக !

அன்பில்லா மனிதர் உள்ளங்களில்
அன்பு பயிர் தழைத்து தழைத்து
செழித்து வளர்ந்து அகிலமெல்லாம்
இன்பம் நிறைந்திட செய்யும்
துர்முகி ஆண்டே வருக! வருக!

பகையெல்லாம் உறவாக மாறிட
ஏற்ற தாழ்வுகள் நீங்கிட

பொறாமை சுயநலம் போன்ற
தீய குணங்கள் நீங்கிட

அறியாமை இருள் விலகி
ஞான ஓளி தோன்றிட

ஞான கடவுளாம் பரிமேலழகரை
போற்றி பணிந்திடுவோம் 

பாரில் ஆனந்த வாழ்வு
அடைந்து மகிழ்ந்திடுவோம்






Wednesday, April 6, 2016

சிக்கலை தீர்க்கும் வழி

சிக்கலை தீர்க்கும் வழி

ஜோதி வடிவானவன் நீ
ஆதி சிவனின் அம்சம் நீ
அவன் பாதி வடிவான ஆதி சக்தியின்
அருள் வாசம் செய்யும் ஆலயமும் நீ

மனம் என்னும் கடலில்
வந்து போகும் ஆசைகள்
ஆயிரமாயிரம்

ஆயிரம் நாமம் கொண்டவனின் வடிவை
அனுதினம் துதித்து வந்தால் அமைதியாய்
அடங்கி விடும்நம்மை ஆட்டுவிக்கும்
எண்ண   ஓசைகள்

வாழ்வின் பொருள் ஓடியோடி
உழைத்து பொருள் சேர்க்க அன்று

அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும்
பரம்பொருளை அறிந்து தெளிந்து
ஆனந்தமாய் வாழ்வதே நன்று

அண்டத்தில் சுற்றி வரும் கோள்கள்
நம் மனதிலும் சுற்றி வரும்
எண்ணங்கள் வடிவில்

அவைகளே  நம் வாழ்வில் தோற்றுவிக்கும்
அனுதினமும் எண்ணிலடங்கா சிக்கல்கள்.

சிக்கலை தீர்க்கும் வழி சிந்தனையை
சீராக வைத்துக்கொள்வதே

போதுமென்ற மனமும் பிறர் மீது
பொல்லாங்கு சொல்லாத குணமும்
அனைத்துயிர்களிடம் அன்பு மாறாது
பணி  செய்யும் பாங்குமே பாரினில்
நல்லதோர் வாழ்வை அளிக்குமே 

இசையும் நானும் (121)

இசையும் நானும் (121)

இசையும் நானும் (121)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  121வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ்    பாடல்-

Image result for thangathile oru kurai song lyrics in tamil

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்- பாக பிரிவினை 


தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ
சிந்தையும் செயலும்  ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ

கால்கள் இல்லாமல் வெண்மதி தவழ்ந்து வரவில்லையா
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா

காலம் பகைத்தாலும் கணவன் பணி  செய்து காதல் உறவாடுவேன்
உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் வாழ்வின் சுவை கூறுவேன்.
https://www.youtube.com/watch?v=jB3Wp_OFwSQ&feature=youtu.be

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/jB3Wp_OFwSQ" frameborder="0" allowfullscreen></iframe>

Tuesday, April 5, 2016

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு 




அனுதினமும் காலையில் எழுந்திடு
கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு
கவலைகள் உன்னை அணுகாது மனமே

மணம்  வீசும் மலர்களின் வாசம்
நுகரட்டும் உந்தன் சுவாசம்
அது உன் உள்ளத்தில் உருவாக்கும்
இன்பம் தரும்  இனிய பிரகாசம்

அனைத்தையும் அளிக்கும் காமதேனு
அவளை "அம்மா" என்றழைக்கும்
அகிலத்தை வாழ வைக்கும் பசுவை
அன்போடு வணங்குவோம்

அம்மையப்பனை அரவு மீது  பள்ளி கொண்டானை
அல்லும் பகலும் நம்மை  அரவணைத்துக் காப்பானை
அவனியெங்கும் பவனி வந்து அருள் செய்யும்
ஆதவனை பணிந்து அருள் பெறுவோம்.

அன்பின் வடிவாய் இறைவன் நம்
அனைவரின் அகத்தினில் வீற்றிருக்கையில்
அதை உணராது அல்லல் தரும் வழியை நாடி
ஆயுள் முழுதும்  அலைகின்றோம்

நல்லதோர் வாழ்வை தரும்
நற்குணமதை நாளும் கைகொள்வோம்
தன்னலம்  விடுத்து நானிலத்து மக்களும்
நலமாக வாழ நான்மறை தந்த
நாயகனை வேண்டிடுவோம்



இசையும் நானும் (120)

இசையும் நானும் (120)

இசையும் நானும் (120)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  120வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ்    பாடல்-





Image result for enthan ullam thulli lyrics

படம் -கணவனே கண்கண்ட தெய்வம் 
பாடல் பாடியவர்- பி. சுசீலா 
பாடல் வரிகள்/இசை-ஆதி நாராயணராவ் 
நடிப்பு- லலிதா 

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ 
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தைதானோ 

ஆசைதான் மீறுதே யாரிடம் சொல்வேன் 
எவ்விதம் அவன் உள்ளம் நான்தான் அறிவேன் 

எண்ணாத  எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் 
எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ 


பாரினிலே எனக்கே நிகர் யாரோ 
கண்ணாலே உள்ளந்தன்னை கொள்ளை கொண்ட கள்வனே 
எண்ணாத  எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் 
எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ 

http://www.youtube.com/attribution_link?a=OTNAEbgpqZg&u=/watch%3Fv%3DcAr8qksLYYs%26feature%3Dem-upload_owner

https://youtu.be/cAr8qksLYYs


<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/cAr8qksLYYs" frameborder="0" allowfullscreen></iframe>

Saturday, April 2, 2016

இசையும் நானும் (119)

இசையும் நானும் (119)

இசையும் நானும் (119)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  119வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ்    பாடல்-

மலருக்கு தென்றல் பகையானால் ....

என்னும்  இனிமையான  பாடல்.





மலருக்கு தென்றல் பகையானால் 

அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு 

நிலவுக்கு வானம் பகையானால் 
அது நடந்திட வேறு வழியேது (மலருக்கு) 

பறவைக்கு சிறகு பகையானால் 
அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு 
உறவுக்கு நெஞ்சே பகையானால் 
மண்ணில் உயிரினம் பெருகிட வழியேது (நிலவுக்கு)(மலருக்கு) 

படகுக்கு துடுப்பு பகையானால் 
அங்கு பாய் மரத்தாலே உதவியுண்டு 
கடலுக்கு நீரே பகையானால் 
அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது (மலருக்கு )

கண்ணுக்கு பார்வை பகையானால் 
அங்கு கருத்தால் உணர்ந்திட வழியுண்டு 
பெண்ணுக்கு துணைவன் பகையானால் 
அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது (மலருக்கு)
நிலவுக்கு வானம் பகையானால் 
அது நடந்திட வழியேது (மலருக்கு)

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/rD8L8AAstjY" frameborder="0" allowfullscreen></iframe>