Friday, April 15, 2016

இறைவனிடம் எதையும் கேட்காதீர்

இறைவனிடம் எதையும் கேட்காதீர் 

கேளாமலே அனைத்தையும்
கொடுப்பவன் இறைவன்
ஒருவன்தான்

அதை விருப்பமுடன் ஏற்று
இன்புற்று வாழும் வகை
அறிதல் வேண்டும்

கொடுத்தது அனைத்தையும் பயன்படுத்தாது
அகிந்தை கொண்ட மனதின் ஆசைகளுக்கு
வயப்பட்டு வரங்களை கேட்டு பெற்றவர்கள்
யாவரும் கெட்டழிந்து போனவர்களே

மூவுலகையும் ஆளும் வரம் கேட்டு
பெற்றான் பிரம்மனிடம் ஹிரண்யகசிபு
வரம் பெற்றதின் பலனை அனுபவிக்காது
தரம் தாழ்ந்து போனான்

தானே கடவுள் என்று
தன்னை நினைத்துக்கொண்டு
தகாத செயல்களை செய்து தன்
அழிவினை தேடிக்கொண்டான்

பவக்  கடலிலிருந்து மீளத் தவம்
செய்ய வேண்டும்

அதை விடுத்து அகந்தை மேலிட்டு
தகாத செயல்கள் செய்து
பாவக் கடலில்மூழ்கி
மடிவதால்  யாது பயன்?

அன்பு மயமானவன் இறைவன்
அவனை அடையும்
ஒரே வழியும் அதுவே

1 comment:

  1. podhuvan sengai
    5:37 PM (10 hours ago)

    to me
    கேட்டால் தருவானா?

    Pattabi Raman 7:00 PM (9 hours ago)
    உங்கள் நம்பிக்கையை பொறுத்தது
    podhuvan sengai
    1:29 AM (2 hours ago)

    to me
    நம்பிக்கையைப் பொறுத்தது - என்பது அனைவரையும் அரவணைக்கும் பொது விடை

    Pattabi Raman

    ஒருமையுடன் நினைக்கின்ற மனம் இருந்தால்
    இயலாமை, இல்லாமை,ஒவ்வாமை ,கல்லாமை,
    அறியாமை ,பொறாமை போன்ற ஆமைகளின் கூட்டம்
    தங்கள் கூடாரத்தை காலி செய்துவிட்டு ஓடிவிடும்
    அதற்கு அந்நிலை அடைந்த உத்தமர்களின்
    உறவு வேண்டும்.

    ReplyDelete