Tuesday, April 5, 2016

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு 




அனுதினமும் காலையில் எழுந்திடு
கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு
கவலைகள் உன்னை அணுகாது மனமே

மணம்  வீசும் மலர்களின் வாசம்
நுகரட்டும் உந்தன் சுவாசம்
அது உன் உள்ளத்தில் உருவாக்கும்
இன்பம் தரும்  இனிய பிரகாசம்

அனைத்தையும் அளிக்கும் காமதேனு
அவளை "அம்மா" என்றழைக்கும்
அகிலத்தை வாழ வைக்கும் பசுவை
அன்போடு வணங்குவோம்

அம்மையப்பனை அரவு மீது  பள்ளி கொண்டானை
அல்லும் பகலும் நம்மை  அரவணைத்துக் காப்பானை
அவனியெங்கும் பவனி வந்து அருள் செய்யும்
ஆதவனை பணிந்து அருள் பெறுவோம்.

அன்பின் வடிவாய் இறைவன் நம்
அனைவரின் அகத்தினில் வீற்றிருக்கையில்
அதை உணராது அல்லல் தரும் வழியை நாடி
ஆயுள் முழுதும்  அலைகின்றோம்

நல்லதோர் வாழ்வை தரும்
நற்குணமதை நாளும் கைகொள்வோம்
தன்னலம்  விடுத்து நானிலத்து மக்களும்
நலமாக வாழ நான்மறை தந்த
நாயகனை வேண்டிடுவோம்



2 comments:


  1. podhuvan sengai
    1:30 AM (3 hours ago)

    to me
    அன்பின் வடிவாய் இறைவன்
    தங்களின் இந்த அடிகள் நன்று

    துன்புறுத்துபவனை இறைவன் என்று போற்ற யாரும் விரும்புவதில்லை

    ReplyDelete
  2. இறைவன் விருப்பு வெறுப்பற்றவன்
    எப்போதும் அவன் படைப்புகளுக்கு
    நன்மையே விளைவிப்பவன்

    நம் குறுகிய மனம்தான் அவன்
    செயல்களை நன்மை என்றும்
    தீமை என்றும் வகைப் படுத்தி நம்மை
    இன்பத்திலும் துன்பத்திலும்
    ஆழ்த்தி குழப்புகிறது

    ReplyDelete