Monday, October 21, 2013

ஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (3)

ஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (3)

ஜாபாலி மகரிஷியும் 
ராமாயணமும் (3)

ஜாபாலி மகரிஷி இராமனிடம்
நீ பரதனின் பிரார்த்தனைக்கு இணங்கு.
ராஜ்யத்தை ஒப்புக்கொள் என்றார்.

ஆனால் இராமன் தர்மத்தை 
பரிபாலனம் செய்யவே அவதரித்தவன்.

அவர் கூறியதை ஏற்கவில்லை.
மாறாக தன் கொள்கையில் உறுதியாக 
இருந்து செயல்பட்டான் என்பது 
அனைவரும் அறிந்ததே.


இராமன் தான் கூறுவதை 
ஏற்றுக்கொள்ளமாட்டான் 
என்று மகரிஷிக்கு தெரியாதா 
என்று சிலர் கேட்கலாம். 

பரதனுடைய துக்கத்தை அகற்றவும் 
,அயோத்திமக்களின் ஆவலைப் பூர்த்தி செய்யவும்,
அவர் இராமனுக்கு எடுத்துரைத்த உபதேசங்களை 
உலகாயவாதமெனக் கூறுவார்கள். 

பெரிய பண்டிதரான ஜாபாலி மகரிஷி 
இராமரை சோதிக்கவே தான் அவ்வாறு 
கூறினாரே ஒழிய ,தந்தை வாக்கை மீறவேண்டும்  
என்ற எண்ணமே அவருக்கு இல்லை .

இராமச்சந்திரனையே சோதித்து 
அதனால் புகழடைந்த அம்மகான் 
நர்மதை நதி தீரத்தை அடைந்து
ஒரு ரமணீயமான ஒரு சிறந்த இடத்தை 
தேர்ந்தெடுத்து அங்கேயே 
பிற்காலத்தில் தவமியற்றினாராம் 

அத்தலமே ஜாபாலிப்பட்டினம் 
என்று அழைக்கப்பட்டு பின்னாளில்  
ஜபல்பூர் என்று மருவி விட்டது 
என்று கூறுவர் .

இந்த தகவல் ஸ்ரீமத்  வால்மீகி ராமாயணத்தில் 
அயோத்யா  காண்டத்தில் 108 வது சர்க்கம் 
முழுவதும்  விவரமாகக்  காணலாம். 

(பதிவில் உள்ள தகவல்கள் 1995 ஆம் ஆண்டு  ஓம் சக்தி தீபாவளி மலரில் அரவரசன் என்பவர் எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டுள்ளது)
அவருக்கு நன்றி. )

pic.courtesy-google images. 


  

5 comments:

  1. அருமையான தகவல்... தொடர்கிறேன் ஐயா... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. //அத்தலமே ஜாபாலிப்பட்டினம்
    என்று அழைக்கப்பட்டு பின்னாளில்
    ஜபல்பூர் என்று மருவி விட்டது
    என்று கூறுவர் .//

    ஆஹா! மிகவும் அருமையான தகவல். நான் இந்த ஜபல்பூருக்கு ஒருமுறை சென்று வந்துள்ளேன். நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html

    ReplyDelete