Friday, October 11, 2013

நவராத்திரி(4)

நவராத்திரி(4)

எங்கிருந்தோ வந்தான்
இடைசாதி நானென்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்?

ஆம் இந்த கண்ணன்
எங்கிருந்து வந்தான்?
யாருக்கு தெரியும் ?
அவன் எப்படி இருப்பான்?

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் இப்புவிக்கு வந்தான்

ஆயர்பாடியில் அழகு சிலையாய் ,
அமுத  மொழி  பேசும் குழந்தையாய்,
காண்போர்  கண்களை விட்டு அகலாத
மணி வண்ணனாய்  இருந்த கண்ணனை
நாம் காணலாம் .
இந்த நவராத்திரி கொலுவில்.

அந்த இன்பம் நாம் பெற வழி வகை
செய்த கலைஞர்களை நாம் போற்றுவோம்.



ஆலிலைமேல்சயனித்தவனை,
ஞாலமேழும் உண்டவனை.
கண்டு தரிசித்து மகிழ்வோம்.





பாற்கடலில் பாம்பணை
மேல் பள்ளி கொண்டானை
ஆயர்பாடியில் காளிங்கன்
என்னும் பாம்பின் மீது நடனமிடும்
பாலகனை கண்டு மகிழ்வோம் வாரீர்.



மண்ணை உண்டானை  ,
அதோடு வெண்ணையும் சேர்த்து
உண்டானை கண்டு மகிழ்வோம்.
வாரீர்.  வாரீர். 

7 comments:

  1. அருமையான பாடல்... அழகிய படங்கள்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. //ஆம் இந்த கண்ணன் எங்கிருந்து வந்தான்?
    யாருக்கு தெரியும் ? அவன் எப்படி இருப்பான்?//

    அழகோ அழகாக இருப்பான்.

    கோபியர் கொஞ்சும் ரமணன் கோபாலகிருஷ்ணன் அல்லவா! ;)))))

    //அந்த இன்பம் நாம் பெற வழி வகை செய்த கலைஞர்களை நாம் போற்றுவோம்.//

    அழகாகச் சொன்னீர்கள், அண்ணா, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நவராத்ரியில் நல்லதொரு பகிர்வு! உளமார்ந்த நன்றி ஐயா!

    ReplyDelete
  4. பாராட்டிற்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. அருமையான பாடல். அற்புதமான படங்கள். நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றிகள்

      Delete