Wednesday, February 27, 2013

மனிதனின் சிறுமைகளும் இறைவனின் பெருமைகளும்.


மனிதனின் சிறுமைகளும் 
இறைவனின் பெருமைகளும். 

தண்ணீரில் உள்ள கிளிஞ்சல்கள் 
சூரிய ஒளியில் வெள்ளிபோல் 
மின்னுகின்றன.

அதுபோல்தான் நம்முடைய 
பெருமையும். 

 நம்மிடமுள்ள சிறுமைகளை  
இறைவன் நீக்கிவிட்டால் 
நாமும் அவன்போல் மின்னலாம். 

அதற்க்கு பொறுமை மிக வேண்டும். 

அதற்காகத்தான்  அவன் திருவடிகளை 
அல்லும் பகலும் நாடவேண்டும்.

அவன் பெருமைகளை அனைவருக்கும் 
எடுத்து சொல்கிறேன்.

கடலில் பெய்யும் மழைபோல் 
இவ்வுலக மோகத்தில் மூழ்கியுள்ள
மனிதர்களின் கண்களில் 
அவை படுவதில்லை .

 இறைவனே இவ்வுலகிற்கு பலமுறை 
வந்து உண்மையினை உணர்த்தி சென்றான்.

இந்த மானிடம் அனைத்தையும்
மறந்துவிட்டு மாயையில் 
மூழ்கி கிடக்கிறது 

மது என்ற அரக்கனை அழித்த 
மதுசூதனை மறந்துவிட்டு மதுவின் 
மயக்கத்தில் மயங்கி கிடக்கிறது இந்த உலகம். 

மாதொரு பாகனை நினையாமல்
மாதரை நினைத்து நினைத்து
மாய்ந்து போகிறது மனித குலம். 

அடியவர்களை காக்க ஆயுதம்.  
ஏந்தினான் இறைவன்.

இன்றோ மனிதர்கள் கையில் 
ஆயுதங்களுடன்  சுற்றி திரிகின்றார் 
அகப்பட்டோரை அடித்து கொல்ல. 

அன்பில்லா உலகம் 
அன்பு மயமான இறைவனை  
பூசிக்கிறது 

யாசிக்கிறது அன்பை அல்ல 
அழியும் பொருட்களை தா என்று?

அழியாத இறைவனுக்கு 
அழியும் பொருட்களை சாற்றி 
அவனை கோயிலுக்குள் 
அடைத்துவைத்து 
அவனை பாதுகாக்க 
ஆயுதம் தாங்கிய காவலாளிகளை 
நியமித்து. அமைதியில்லாமல் 
தவிக்கிறது ஆன்மிகம் பேசும் 
அறியாதோர் கூட்டம்.

நம்மை பாதுகாக்கும் 
இறைவனுக்கு எதற்கு பாதுகாப்பு?

நம்முடைய பாதுகாப்பை நாடுபவன் 
நம்மை எப்படி பாதுகாக்கமுடியும் 
என்ற அடிப்படை தத்துவத்தை கூட 
புரிந்து கொள்ள முடியாத 
இந்த மனித இனம் எப்படி
இறைவனை உணரமுடியும்?

இந்நிலையில் இவன் சொல்லுவதா 
இவர்கள் காதில் ஏறப்போகிறது?

எல்லாம் இறைவன் சித்தம்.

யசோதையும் கண்ணனும் (பகுதி-2)


யசோதையும் 
கண்ணனும் (பகுதி-2)
























யசோதை: கண்ணா !
நம் வீட்டில்தான் ஏராளமான 
வெண்ணை இருக்கிறது
நானும் நீ கேட்ட 
பொழுதெல்லாம்  தருகிறேன், 
போதாக்குறைக்கு நீ வேறு 
எடுத்து உண்கிறாய் 
அப்படி இருந்தும் நீ ஏன் மற்ற 
ஆய்ச்சியர்களின் வீடுகளில் 
வெண்ணையை திருடி உண்கிறாய்? 

கண்ணன்: என் வயிறு மிகவும் பெரியது. 
அதற்குள்தான் அண்ட சராசரங்களும் உள்ளன. 
அவைகளில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் நான் உணவளிக்கவேண்டாமா?

நீ தரும் வெண்ணை எனக்கு போதாது.
மற்றவர்களை வெண்ணை தா 
என்று கேட்டால்.
ஒரு நாள் தருவார்கள்.
மறுநாள் விரட்டுவார்கள். 
அதனால்தான் நானே 
சென்று எடுத்துகொள்கிறேன். 
அதை அவர்கள் திருட்டு. என்கிறார்கள். 
உன்னிடம் புகார் செய்கிறார்கள்.

யசோதை : என்னடா 
ஏதேதோ சொல்கிறாய்.
ஒன்றும் புரியவில்லை 

நீ செய்யும்திருட்டுத்தனத்தை 
நியாயபடுத்த பெரிய 
வியாக்கியானம் வேறு செய்கிறாயே?

கண்ணன்: உனக்கு தெரியுமா.
ஒவ்வொரு ஆய்ச்சியும் 
இந்த கண்ணன் தன் வீட்டிற்கு வரமாட்டானா,
வந்து வெண்ணையை திருடி செல்லமாட்டானா 
அப்போது அவன் திருமுகத்தை பார்க்கமாட்டோமா 
என்று ஏங்குவது உனக்கு எப்படி தெரியும்?

யசோதை: ஏண்டா குறும்பு செய்கிறாய் 
என்று நான் கேட்டால் இப்படித்தான் 
ஏதாவது சொல்லி என்னை குழப்பி விட்டு விடுகிறாய்.

கண்ணன்: அம்மா குழப்பத்தை 
தெளிய வைக்கத்தான் 
நான் இவ்வுலகத்திற்கு வந்திருக்கிறேன். 
அந்த வேலையை 
நான் இன்னும் தொடங்கவே இல்லை.

பின்னாளில் மகாபாரதபோர் 
துவங்குவதற்கு முன்  பெருங்குழப்பத்தில் 
ஆழபோகும் அர்ஜுனனுக்கு
பகவத் கீதையை உபதேசிக்க போகிறேன்.

அதை வைத்துக்கொண்டு 
எதிர்காலத்தில் பலர் அதன் உண்மையை 
புரிந்துகொள்ளாது இன்னும்
மக்களை குழப்பப் போகிரார்கள். 

யசோதை: போதுமடா. 
உன் வியாக்யானங்கள்  
ஏதோ தெரியாமல் கேட்டுவிட்டேன். 
 நீ என்னவேண்டுமானாலும் செய்துகொள். 
உன்னை நான்ஒன்றும். கேட்கமாட்டேன். 

கண்ணன்: இப்போதுதான் நீ நல்ல அம்மா.
 நீ என்னை மட்டும் நினைத்துகொண்டிரு .
அதுவே போதும் நான் உன்னை
என் கண்ணின் மணி போல் 
வைத்து   காப்பாற்றுவேன்.

நான் செய்யும் செயல்களை
தன்னை எல்லாம் அறிந்தவர்கள் என்று 
நினைத்துக்கொண்டு கர்வத்துடன் அலையும் 
பண்டிதர்கள்போல் ஆராய்ச்சி செய்யாதே.
குழப்பம்தான் மிஞ்சும்.

ஆய்ச்சியர்கள்போல் அனைத்தையும் 
என்னிடம் விட்டுவிடு .
அவர்களை காப்பாற்றுவதுபோல் 
உன்னையும் காப்பேன் என்றான் 
அந்த மாயகண்ணன் 

யசோதை: சரிடா என் செல்லமே. 
என். கண்ணே என் உயிரே. என் ஆனந்தமே.
என் தெய்வமே 
நீ சொன்னால் எல்லாம் 
சரியாகத்தான் இருக்கும். . 


அகிலாண்டேஸ்வரி ரஷமாம் ..


அகிலாண்டேஸ்வரி ரஷமாம்  ..







































திருவானைக்காவில் 
தவம் செய்யும் 
அம்பிகையை 
அவள் பாதம் பணிந்தவர்தம் 
வாழ்வில் பவம் போக்குவாள்.
அவம் நீக்குவாள்.

எம் எஸ் அவர்கள் பாடிய 
அகிலாண்டேஸ்வரி ரஷமாம் என்ற 
முத்துச்வாமி தீஷதரின் கிருதியை 
கேட்கும்போதெல்லாம் மனம் உருகும்

ஆனால் நான் இன்னும் 
அம்பிகையை தரிசிக்கவில்லை.
வாய்ப்பிருந்தும் வசதிகள் இருந்தும்

இருந்தாலும் நான் தரிசிக்காத தெய்வங்களை 
எல்லாம் வரைந்துவிடுவேன் 
வரையும்போதே தெய்வங்களை
தரிசித்துவிடுவேன்

அப்படிதான் சென்ற ஆண்டு ஒரு தீபாவளி மலரில்
அம்பிகையின் படத்தை கண்டேன். 
அன்றே நினைத்தேன் எப்படியாவது 
அம்பிகையின் படத்தை
வரைந்து விடுவதென்று. 


வரைந்தேன்,வண்ணம் தீட்டினேன்.
வந்து புகுந்துகொண்டாள் 
என் இதயத்துள்ளே 

நீங்களும்  தரிசியுங்கள் 

Tuesday, February 26, 2013

கண்ணன் துதி


கண்ணன் துதி 




கண்ணன் என்னும்
கருந்தெய்வம்
காசினியில் உள்ளோரை
காக்க வந்த தெய்வம்

விண்ணையும் மண்ணையும்
அளந்த தெய்வம்
பிரகலாதனுக்காக
தூணை பிளந்து வந்து
பாதகன் ஹிரணியனை
மாய்த்த தெய்வம்

மனித குலத்தை வதைத்திட்ட
அரக்கர் கூட்டத்தை
வேரறுக்க கால்  கடுக்க
தரணியில் ராமானாய் அவதரித்து
தன் பாதம் நோக  நடந்து
பக்தர்களை காத்த தெய்வம்

அரவணையில் அசையாது
அரிதுயில் கொண்ட தெய்வம்
அரங்கத்தில் கோயில் கொண்டு
அடியவர்களை காக்கும் தெய்வம்

ஆயர்பாடியில் கண்ணனாய் வந்து
ஆநினம் மேய்த்த தெய்வம்

கள்ளமற்ற வெள்ளை உள்ளம்
கொண்ட ஆய்ச்சியர்களின்
அன்புக்கு அடிமையாகி
அவர்கள் தந்த வெண்ணையை
உண்டு மகிழ்ந்த தெய்வம்

மண்ணை வாயிலிட்டு
 உண்ட தெய்வம்
கண்டித்த யசோதை
அன்னைக்கு அகிலமும்
தான்தான் என காட்டி
அசத்திய தெய்வம்

பக்தி கொண்ட பாண்டவருக்காக
பரிந்து பேச பாதகன் துரியோதனன்
மாடம் சென்ற தெய்வம்

ஏழை குசேலனை எதிர்கொண்டழைத்து
அவன் தந்த பிடி அவலை உண்டு
அவன் குலத்தின் மிடி அகற்றிய தெய்வம்

அறியாமை என்னும் இருளகற்றி
மரணமிலா பெருவாழ்வு வாழ
வழிகாட்டும் நூலாம் கீதையை
மனித குலத்திற்கு அளித்த மாசற்ற தெய்வம்


அனைத்துமாய் ஆன தெய்வம்
ஆயிரம் நாமங்கள் கொண்ட தெய்வம்
ஆபத்திலே அபயம் என்று
அழைப்போருக்கு ஓடிவந்து
அபயக்கரம் நீட்டும் தெய்வம்

தாய் தேவகியை சிறை வைத்த
மாமன் கம்சனை
வதைத்த தெய்வம்.
மீண்டும் தாயின் கற்பத்தில் சிக்கி
துன்புறாமல் காக்கும் தெய்வம்

தன்னை வணங்கா கோகுல மக்களை
மழை வெள்ளத்தில் அமிழ்த்தி
துன்பத்திர்க்காளாக்கிய மக்களை
குன்றை குடையாய் பிடித்து காத்து ரட்சித்து
மதிகெட்ட  இந்திரனின்
அகந்தை கெடுத்த தெய்வம்.

அல்லல் போக்கும் தெய்வம்
ஆனந்தம் தரும் தெய்வம்

துயர் துடைக்கும் தெய்வம்
மாளா பிறவியறுக்கும் தெய்வம்

அன்பு தெய்வம்
அருள் தெய்வம்

கற்றோரின் செருக்கறுக்கும் தெய்வம்
காமத்தை தணிக்கும் தெய்வம்

அன்புடையார்க்கு கட்டுண்ட தெய்வம்
திக்கற்றோர்க்கு தீனபந்துவாய்
விளங்கும் தெய்வம்

கல்மனதை கரைக்கும் தெய்வம்
அலை பாயும் மனதை அடக்கும் தெய்வம்

அஞ்சேல் என்று அபயமளிக்கும் தெய்வம்
அஞ்ஞானத்தை அகற்றும் தெய்வம்

பிணி போக்கும் தெய்வம்
பக்தருள்ளத்தில்
 பீடு நடை போடும் தெய்வம்

வரம்பில்லா
வரமருளும் தெய்வம்

ஓராயிரம் நாமம் கொண்ட  தெய்வம்

ஒருமையுடன் நினைந்து  அழைப்போர்க்கு
ஓடி வந்து அருள் செய்யும் தெய்வம்

ஓங்கார பொருளான தெய்வம்
ஆங்காரம் அகற்றும் தெய்வம்

நினைக்க நினைக்க செவியில்
ரீங்காரம் செய்யும் தெய்வம்

கண்ணா  மாசற்ற மனதுடன்
உன் பெருமை பேச
வகைஅறியா இச்சிறியேன்
நின் மலரடியை
சரணடைந்தேன் கோடி முறை

என் மனத்தில் என்றும் நீங்காது நின்று
மன இருளகற்றி இகபர சுகமருள்வாயே

கண்ணன் திருவடிகளே சரணம்

Pic-google-images

கண்ணனை துதி மனமே
























கண்ணனை துதி மனமே 


எட்டெழுத்தில் 
உறைபவன்

பக்தியில்லார்க்கு
எட்டாதவன்

அன்பில்லாரிடம் 
ஓட்டாதவன் 

அடியார்களை 
விட்டு அகலாதவன் 

தூயவன் 
துயர் துடைப்பவன் 

ஆயன் 
அளவில்லா
இன்பம் தருபவன் 

அவன் 
திருவடிகளே சரணம் 

அவன்தான் 
அந்த கண்ணன் 
நம்மையெல்லாம் காக்க 
அவனியில்
யாதவனாய் வந்துதித்த
வைகுண்டத்தை விட்டு  
வந்த மாதவன் 


அவனை துதிப்போம்
அவனடியார்களை மதிப்போம் 

அல்லல் போக்கும் அவன்
திருநாமங்களை
சொல்லால் 
சுவைத்து பாடுவோம் 

நில்லாது ஓடும் மனதை
நிலை பெற செய்திடுவான்

நிர்மலமான பக்தியுடன் 
நித்தம் நித்தம் பாடுவோம் 
அவன் புகழை 

நிலையான
பதந்தன்னை 
நிச்சயம் 
அளித்திடுவான் 

 தி.ரா.பட்டாபிராமன் 

Monday, February 25, 2013

குருவாயூரப்பனின் பக்தர்களுக்காக


குருவாயூரப்பனின் 
பக்தர்களுக்காக 

கண்ணன் என்னும்
மன்னன் பேரை
சொல்ல சொல்ல ......

ஆம் கண்ணன் என்னும் 
மன்னன் பேரை சொல்ல சொல்ல 

கல்லும் முள்ளும் பூவாய்
மாறும் மெல்ல மெல்ல 

ஆம் சத்தியமான வரிகள்.

அன்பின்றி காய்ந்து கல் போன்று
இறுகிப்போன நம் மனமும் 
அகந்தையினால் சினமுற்று ,
பொறாமையினால் வெறுப்புற்று,
அறியாமையினால் 
அவதியுற்று கிடக்கும் 
நம் மனம் கண்ணனின் பேரை 
சொல்ல சொல்ல 
 பூ போன்று மென்மையாய்
 மாறிவிடும் காலபோக்கில் 
அவன் கருணையினால் 

மகிழ்ச்சியின்றி 
மணமின்றி இருந்த
நம் வாழ்க்கை மணம் வீசும் 
மலராக மலர்ந்துவிடும். 

கண்ணா கருமை நிறக்கண்ணா
உன்னை காணாத கண்ணில்லையே  
என்ற பாடல் மிக பிரசித்தம் அந்நாளில் .

கண்ணனை அந்த மணிவண்ணனை 
அந்த ஆயர் குல திலகத்தை 
எந்த வடிவத்தில் கண்டாலும்
இன்பம் தருபவனல்லவோ அவன்

எப்பெயரிட்டு அழைத்தாலும்
எந்த உறவில் அவனை நினைந்து
பக்தி செய்தாலும் அப்படியே  
ஏற்று அருள் செய்பவனல்லவா அவன்

கண்ணனை ஒருமுறை 
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே 
என்று போற்றி புகழ்ந்தனர் 
அவன் அடியார்கள். 

பார்வையற்ற சூர்தாசர் 
கண்ணனை கண்டபின் 
தன்னை மீண்டும் குருடராகவே 
ஆக்கிவிடும்படிகண்ணனை 
வேண்டிக்கொண்டாராம்.

உன்னை கண்ட பின் 
நான் மீண்டும் இந்த உலக காட்சிகளை 
காண விரும்பவில்லை என்று

என்னே அவர் பக்தி. 
சூர் சாகர் என்னும் அவர் பாடல்கள் 
நெஞ்சை உருக்குபவை.
 நினைவில் வலம் வந்து 
கண்ணனின் வடிவத்தை
 நம் முன் நிறுத்துபவை.

கணக்கற்ற கிருஷ்ண பக்தர்கள்.
பெரியாழ்வார், கனகதாசர் ,
புரந்தரதாசர் மீரா, ஆண்டாள்,
நாராயண தீர்த்தர்,ஜெயதேவர்,  
நாராயண பட்டத்ரி,பூந்தானம்
ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் 
என  பட்டியல் நீண்டுகொண்டே போகும். 

கனகதாசர் பாடிய கிருஷ்ணா  நீ பேகனே பாரோ 
என்ற பாடலை பாடாதவர் உண்டோ!
என்ன  உருக்கம்  மனமுருகி பாடினால் 
அந்த கிருஷ்ணன் வராமல் எங்கு போவான்?

பாரோ கிருஷ்ணையா என்றபுரந்தரதாசர்.
பாடலை எம் எல் வசந்தகுமாரி 
அவர்கள் பாடி கேட்கேவேண்டும்.

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா 
என்று எம் எஸ்.அம்மா அவர்கள்  பாடி கேட்கவேண்டும்

திக்கு தெரியாத காட்டில் என்ற பாடலை 
ஜி. என். பாலசுப்ரமணியம் அவர்கள் பாடி கேட்கவேண்டும். 

பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடினால் 
அன்ன ஆகாரம் இன்றி அந்த மாய கண்ணின்
 பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் 

இப்படி முடிவேயில்லை
முதலும் முடிவும் இல்லாத
நம்மை எல்லாம் ரட்சிக்க 
யாதவனாய்  வந்த மாதவனின்
 புகழை பாட, கேட்க,
 போதாது ஒரு பிறவி. 

எனக்கு சங்கீதம் தெரியாது.
ஆனால் ஈடுபாடு உண்டு 
பாட்டில்மெய் மறந்துபோவேன்.  
அந்த கண்ணன் அந்த பாக்கியத்தையாவது 
எனக்கு கொடுத்திருக்கிறானே 
என்றுநினைத்து கொள்வேன். 

ஜகத் மித்யா என்றார் ஆதி சங்கரர்
அந்த மித்யையை  போக்க வந்த
 ஜகத் குருவன்றோ 
கிருஷ்ண பரமாத்மா

கிருஷ்ண பக்தி செய்வதற்காக பிறவிகள் 
எடுத்துக்கொண்டே போகலாம். 
இப்படி பெருமை வாய்ந்த அந்த மனமோஹனை, 
மாயக்கண்ணனை நானும் அனுபவித்தேன். 

குருவாயுரப்பனை 1964 ஆம் ஆண்டு 
ஒருமுறை தரிசித்தேன்.
இன்றும் அது பசுமையாய் 
என் நெஞ்சில் இருக்கிறது.
அப்போது சாதாரண கிராமம் குருவாயூர்.
கொட்டும் மழையில் 
குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு 
அவன் கோயில் வாசலில் 
அதிகாலை குளிரில் 
நாராயண கோஷத்துடன் 
பக்தர் குழாத்துடன் அவனை 
தரிசனம் செய்தது எத்தனை 
பிறவியானாலும் மறக்காது.

மீண்டும் 2002ஆம் ஆண்டு குருவாயூருக்கு வந்தேன்.
சுற்றுலா தலமாகிவிட்டது. குருவாயூர்.
பழைய சாநித்தியம் அங்கு இல்லை
என்று தோன்றியது எனக்கு. 

ஒரு நிமிடம் கூட நின்று தரிசிக்க 
முடியாமல் துரத்துகிறார்கள் 
பலமணி நேரம் வரிசையில் நின்று
 கண்கள் துவண்டுபோன நிலையில் 
கோயிலின் கருவறையில் நெய் தீப ஒளியில் 
கண்ணனை நம் கண்ணுக்குள் 
கொண்டுவருவதற்குள் நாம்
 வெளிதள்ளப்படுகிறோம். 
அதனால் என்ன? 
அவன்தான் என்றோ 
என் உள்ளத்தில் குடிகொண்டு விட்டானே.
அவனை நான் எப்போது வேண்டுமானாலும் 
தரிசித்து ஆனந்தபட்டுகொள்வேன். 

1977அம் ஆண்டு சென்னை வானொலியில் 
திருச்சூர் ராமச்சந்திரன் அவர்கள் வழங்கிய 
குருவாயூரப்பன் சுப்ரபாதம் கேட்டேன் 
அந்த வெண்கல குரல் என்னை 
மெய்மறக்க செய்துவிட்டது 
அதை அப்படியே காசெட்டில் பதிவு செய்தேன் 
தினம் தவறாமல் கேட்டேன். 
அந்த சுப்ரபாத புத்தகம் கிடைத்தால்
 நன்றாக இருக்கும் என்று அந்த 
குருவாயூரப்பனையே  பிரார்த்தித்தேன். 

என்ன அதிசயம் 
பழையபுத்தக கடையில்  அந்த புத்தகத்தை
என் வருகைக்காக என் கண்ணில் படும்படி
குருவாயுரப்பன் வைத்திருந்தான் 

மகிழ்சியுடன் வாங்கி வந்தேன். 
மன நெகிழ்ச்சியுடன்   பாராயணம் செய்தேன்
செய்துவருகிறேன் 37 ஆண்டுகளாய் 

இருந்தாலும் நான் அன்று வணங்கிய 
அந்த என் அப்பனின்கையில் வெண்ணையோடு 
வடிவத்தை மனதில் நினைந்து 
மெடல் பாயிலில் அவன் உருவம் 
வரைந்தேன் படம் பிடித்தேன்

அதிசயம் பாருங்கள் 
படத்தில் அவன் தன் வாயில் வழியும் 
வெண்ணையோடு காட்சி தந்திருக்கிறான் 
அந்த மாய கண்ணன் .

 (இன்னும் தொடரும்)







How to find a GURU?






How to find a GURU?

QUESTION: For the realisation of self 
everybody says a GURU is important
without Gurus grace it is impossible 
to attain salvation
Is it true?

ANSWER::Yes without Gurus'grace and 
that too without SADGURU's grace 
who has actually a realised soul 
who is free from ego and worldly desires 
it is impossible to attain salvation. .

Question: But in this world there 
are thousands of people 
proclaimed themselves as GURUS 
and cheating people.
How to find the
real SADGURU in this world.?

Answer: We cannot find such a 
soul with our mind
immersed in worldly desires. 
We must sincerely pray to GOD 
to show a SADGURU 
by discarding all other desires. 
If we are sincere in our faith 
GOD will show you the GURU
to the sincere seekers. 


If your heart is sincerely 
longing for a GURU
to guide you
the GOD will send you 
undoubtedly. 

Don't visualise or compare 
with the past or existing GURUs  
how a GURU should  be 

It is the mind that 
makes comparison.
 
The GOD will decide 
who will be the guru.
who should be your guru  

You pray to GOD
 to show you a guru.

You discard all your other prayers and 
pray one  with one pointed mind.to GOD
to show your GURU 

Then you will get him.
I assure you. 

If you approach any guru with a  
preconditioned mind
you wont get any salvation.

Your mind will compare the present guru 
with other gurus and make you confuse 
which will take you from bad to worse. 

The real test to know your guru 
is very simple.If your heart is sincerely 
longing for a GURU
to guide you
the GOD will send you 
undoubtedly. 

Hence you have to 
decide your own guru. 
Don't seek guru 
from other opinions.
It wont solve the problem

So decide yourself. 
You have to 
go alone in this issue. 
Your Guru will be GURU for you only.
what he says to you is for you only. 

he may prescribe different solutions 
for different people. 

You cannot expect tailor made 
solutions. in this field


If you sit before him 
your mind will go off. 
and you will have 
no questions to ask.


Once you accept a soul as your  guru
you should have undisputed faith 
in his words. .you should not look
into the ways he behave towards others
Then only you will progress .

The choice is yours.

Pic.-google images 

surrender your soul to GOD

surrender your soul to GOD

Question:I pray to GOD ,I do pooja regularly,
I go to temples and participate in rituals,
I recite slokaas etc.I listen to discourses.
I go temples  all over the globe.I visit mutts meet gurujees 
But I still I have not gained anything in spirituality.
My mind is restless .At times I feel what is the use of these 
actions performed all those years. 

The answer is very simple. 
Your mind is outward only. 
All these years you are concentrated 
outward practices only.
 You have not done anything 
to your soul inside.
that is the main reason.
 The soul wont satisfy with 
these outward happenings.
 It feel immensely pleased 
if you go inward and 
clear the obstacle inside 
to attain salvation and 
peace of mind. 


For which you 
have to surrender
your soul to him

Then he will render all help 
without asking you. 

then you can enjoy bliss
 under any trying circumstances 

People are willing to surrender for anything 
and surrender to anybody for material gains 
except GOD 

If you surrender wholeheartedly
he will relieve you from pains 
by giving you unbearable pains
like a doctor who operates on a tumor 

unless you give power of attorney to him 
without any preconditions 
he won't enter your heart
which is full of desires and doubts.

He is waiting in your heart day and night 
that one day you will allow him to act on behalf.

But your mind is always doubting 
whether he will accept your prayer or not
and save you.

we people are always calculating 
and manipulating things.

we  lack  faith in him 

we are always attached to worldly things and 
the happenings around us 

our mind is always immersed in sorrow 
for the things we do not have 
and we never enjoy what GOD 
has given to us.

we assume and presume things.
and lament for the things we long for.

In such circumstances
it is very difficult to 
pass the examination. 

we are always interested 
in passing the buck on others.

யசோதையும் கண்ணனும்


யசோதையும் கண்ணனும்



யசோதையையும்  கண்ணனையும் 
வரைய நினைத்தேன். வரைந்தேன் 























கண்ணன் அவன் தாயோடு 
ஒட்டி நின்றுகொண்டு நம்மை 
பார்க்கும் அழகே அழகு. 

கற்பனை உதித்தது.
கட்டுரை  வந்தது. 

கண்ணன்:அம்மா எனக்கு வெண்ணை வேணும்

யசோதை:அதான் இப்போது கொடுத்தேனே

கண்ணன்:அதை நான் எப்போதோ
சாப்பிட்டுவிட்டேன்.

யசோதை:கொஞ்சம்பொறு.
இப்போதுதான் தயிர் கடைய
ஆரம்பித்துள்ளேன். தருகிறேன்.

கண்ணன்:முடியாது எனக்கு இப்பவே வேணும்.

யசோதை:  வெண்ணையை உறியில்
வைத்திருக்கிறேன்.
உன் அண்ணன் பலராமனை
எடுத்து தர சொல்லு.

கண்ணன்: பலராமன் அதை
அப்போதே சாப்பிட்டுவிட்டான்.

யசோதை:கொஞ்சம் பொறுடா கண்ணா
நீ நல்ல பிள்ளை அல்லவா .என் செல்லமே

கண்ணன்: சரிம்மா

யசோதை: யசோதை: அது சரி நீ ஏன்
வெண்ணையை மட்டும் விரும்பி உண்கிறாய்?
நான் கொடுப்பது போதாது  என்று
மற்றவர் வீட்டிலும் திருடி உண்கிறாய் ?


கண்ணன்:எனக்கு வெள்ளை உள்ளம்
உடையவர்களைதான் பிடிக்கும்.
அதை உணர்த்தும் வகையில்தான்
வெண்ணையை நான்
கையில் வைத்திருக்கிறேன்

யசோதை: போடா நீ சொல்வது
எனக்கு ஒன்றும் புரியவில்லை

கண்ணன்: உனக்கு மட்டும் அல்ல
இந்த உலகத்தில் யாருக்கும் புரியவில்லை.

Friday, February 22, 2013

இருப்பது ஒரே பரம்பொருள்

இருப்பது ஒரே 
பரம்பொருள்

உள்ளிருப்பது 
ஒரே அமிர்தம் 
அவ்வப்போது பாட்டிலின் 
லேபில்கள் 
மட்டும் மாற்றப்படும். 
அவ்வளவுதான். 

அதைபோல்தான் 
தெய்வங்களும்

பலர் நினைப்பதுபோல் 
பல தெய்வங்கள் இல்லை 

இருப்பது ஒரே பரம்பொருள் 

அதுதான் ஒவ்வொரு 
வடிவத்திலும் இருக்கிறது.

இந்த உண்மையை
மனித குலம் 
உணர்ந்துகொண்டால் 

சண்டை ஏது?
சச்சரவு எது?
பூசல் எது?


நான் வணங்கும்  
தெய்வம்தான் உயர்ந்தது

நீ வணங்கும் தெய்வம்
சக்தியற்றது என்ற 
கூச்சல்கள் அடங்கிபோகும். 

என்ன செய்ய ?
படித்த பண்டிதர்களே 
மறுக்கிறார்களே 
உண்மையை ஏற்றுக்கொள்ள 

படிக்காத பாமரனோ 
இறைவனை உண்மையாக
நம்புகிறான். ஆயர்பாடியில் 
இருந்த கோபிகைகளைபோல்

அவன் இந்த சிக்கல்களில் தன்னை
இணைத்துக்கொள்வதில்லை. 
வணங்கும் நேரம் 
சில நிமிடங்கலாயினும் 
அவன் பக்திக்கு 
இறைவன் கட்டுப்படுகிறான்.

ஆனால் பண்டிதர்கள் 
தாங்கள் கட்டுப்பாட்டில்தான் 
இறைவன் இருப்பதாக 
 மக்களை நம்ப வைத்து 
தங்களை சுற்றி ஒரு கூட்டத்தை 
சேர்த்து வைத்துக்கொண்டு பணம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 

இறைவனை அடைவது 
மிக எளிது

அவன் ஒரு அல்ப சந்தோஷி. 

கூடை கூடையாய் 
மலர்களை அணிவித்தாலும், 
விலையில்லா மாணிக்கம் 
கற்கள் நிறைந்த அணிகலன்கள் 
அணிவித்தாலும், 
பட்டு பீதாம்பரங்கள் சாத்தினாலும்
அல்லது ஒரே ஒரு மலரை
பக்தியுடன் அவன் பாதத்தில்
சமர்ப்பித்தாலும் அவன் 
வேறுபாடு பார்ப்பதில்லை 

எல்லாம் 
அவனுக்கு ஒன்றுதான் 

ஆற்றங்கரையில் இருக்கும் 
வினாயகபெருமான் 
ஆனந்தமாக இயற்கையோடு 
இயற்கையாய் இருந்துகொண்டு 
அருள் பாலிக்கிறான்
அவனுக்கு பாதுகாப்பு தேவையில்லை
அவன் வணங்கும் 
அனைவருக்கும்
 பாதுகாப்பு அளிக்கிறான் 

கோயில் தங்க கவசம் சாற்றப்பட்ட
கடவுளுளை பாதுகாக்க 
பூட்டு தேவைப்படுகிறது.

என்னே அறியாமை ?

கடவுளின் சக்திதான் 
நம்மை காப்பற்றுமே அல்லாது 
அது தாங்கியுள்ள வடிவமல்ல 
என்பதை உணரமறுக்கிறது 
நம்பிக்கையற்ற வழிபாடுகளில் 
மூழ்கியுள்ள மனித மனம் 

நம்பிக்கையில்லாமையால்தான் 
கோயில் சிலைகளும் நகைகளும் 
கொள்ளை போகின்றன

மனிதன் நம்பிக்கையுடன் 
கோயிலில் உள்ள சிலையையும்,
நகைகளையும் பூட்டு போடாமல் 
திறந்து போடட்டும்.
அங்கு தெய்வம் வாசம் செய்யும். 
திருடனே திருடுவதற்கு பயப்படுவான் 

ஆனால் அது சாத்தியமில்லை. 
ஏனென்றால் கடவுளைவிட அவன் மேல் சாற்றப்பட்டிருக்கும் வெள்ளி கவசத்திர்க்கும்,
தங்க வைர,வைடூரிய நகைகளுக்குதான்  
இந்த உலகில் மதிப்பு அதிகம். 

கடவுளால் உண்டாக்கப்பட்ட 
மூல பொருட்களை கொண்டு மனிதர்களால் படைக்கப்பட்டவடிவங்கள் ஒருநாள் அழிந்துபோகும். அல்லது  அழிக்கப்படும். 
இதுதான் உலக இயற்க்கை

ஆனால் இதயத்தில் நிலையாய் 
உள்ள இறைவனை உணர்ந்துகொண்டு 
அந்த நினைவை  நிலை நிறுத்திவிட்டால் 
அது என்றும் அழியாது. 
நின்று நம்மை நிழல்போல் 
தொடர்ந்து காக்கும் 

Thursday, February 21, 2013

மகாபாரத கதையின் தத்துவம் என்ன?





மகாபாரத கதையின் 
தத்துவம் என்ன?

நான் சொல்ல வந்தது வேறு
ஆனால் இங்கே சொல்லுவது வேறு
அதுதான் இறைவன் சித்தம் போலும். 

எத்தனை யுகங்களுக்கு கதையை படிப்பது,
அவரவர் கற்பனைக் கேற்ப கதை விடுவது.

கதை பாமரனுக்கு இருக்கட்டும் 
ஆன்மீகத்தில் ஓரளவு முன்னேறிய நிலையில் இருப்பவர்களும்.பிரவசனம் செய்பவர்களுக்கு கைதட்டி தலையை ஆட்டி கொண்டிருந்தால் என்ன பயன்?

தத்துவம் எங்குண்டோ
தத்துவனும் அங்குண்டு 
என்றார் திருமூலர். 

தாயிற் சிறந்த தயாவான 
அந்த தத்துவனை 
அறிந்து கொள்ளவேண்டாமோ?

தத்துவங்களை பற்றி பேசியே 
பொருள் தேடி,உண்டு, விலங்குகளை
போல் விதவிதமாக உறவு கொண்டு 
உறங்கி,கழிந்து ஆயுள் முழுவதும் 
செய்ததையே தினமும் செய்து
பேசியதையே பேசி,
பார்த்ததையே பார்த்து 
கழிப்பதற்க்கா 
இந்த மனித பிறவி. 

மறலி ஒவ்வொரு கணமும் நம்மை விரட்டிகொண்டிருக்கிறான். 

பிறவி பெற்றதன் பயனை நாடாது 
இந்த ஆன்மாவை சிறிது காலம் தாங்கி அழிந்து போகக்கூடிய உடலையும் கணத்திற்கு  கணம் மாறி கொண்டிருக்கும் மனதையும் நம்பி 
மோசம் போகலாமா? 

விழித்துகொண்டால் 
பிழைத்துகொள்ளலாம்

ஏற்கெனவே காலம் என்னும் பாம்பு 
ஒரு தவளையை கவ்வி பிடித்து விட்டது 
அது சிறிது சிறிதாக அதை விழுங்கிகொண்டிருக்கிறது 
ஆனால் அந்த தவளையோ அதை உணராமால் அதன் முன்னே நின்றுகொண்டிருக்கும் பூச்சிகளை பிடித்து தின்பதில் மும்முரமாய் இருக்கிறது. 

பாம்பின் நிலையும் அதுதான் 
அதை பிடிக்க ராஜனாகமும், கழுகும் 
வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கின்றன. 

ஆறறிவு உள்ள மனிதர்களும்  
அப்படிதான் இருக்கிறார்கள். 

உலக இன்பங்கள் மனிதர்களை 
களைத்து போக செய்கின்றன.

உடலை உளுத்துப்போக 
செய்கின்றன 

உளுத்துப்போன உடல் 
நோய் வாய்ப்ப்படுகிறது

உடல் சக்தி இழந்தால் 
உள்ளம் சக்தி இழக்கிறது. 

மனமோ கடந்த கால நினைவுகளை மூழ்கி
நிகழ் காலத்தை நிர்மூலமாக்கிறது

அதுமட்டுமல்லாது கற்பனையான பயங்களை உண்டுபண்ணி மனிதர்களின் செயல்திறனை குறைக்கின்றன அல்லது முழுவதுமாக செயலிழக்க செய்கின்றன. 

மகாபாரதம் கூறும் 
பாடம் என்ன? 

ஜெயித்தாலும் தோற்றாலும்
இவ்வுலகில் எதுவும் நமக்கு
சொந்தம் கிடையாது.

அரசன் ஆண்டியாவான். 
ஆண்டியும் அரசனாவான் 

ஆனால் எந்நிலையிலும் 
இறைவனை மறவாது இருப்பவர்கள். 
அவனருளால் துன்பங்களை தாங்கும் 
ஆற்றலையும் அவன் அருளையும் 
பெறுவார்கள். என்பதை உணர்த்துவதை 
புரிந்துகொண்டு. இறைநினைவோடு 
கூடிய வாழ்க்கையை வாழவேண்டும். 

 படம்-நன்றி-google-images

Wednesday, February 20, 2013

முருகா நீ என் மன வீட்டினில் குடி கொள்வது எப்போது ?


Inline image 1
முருகா நீ என் மன வீட்டினில் 
குடி கொள்வது எப்போது ?

மலை மேல்
சிலையாய் நின்றவனே 
என் மனதில்நீ  
நிலையாய் நிற்பது எப்போது? 

காட்டிலும் மேட்டிலும் 
உறைவோனே
என் மன வீட்டினில்
நீ குடி கொள்ளுவது எப்போது?

அருணகிரியாரின் திருப்புகழை
பாட நான்  அறிகிலேன்
எனினும் உன் புகழை பாட 
அனுதினமும் நான் மறந்திலேன் 

அக்ஞானத்தில்
உழன்ற அருணகிரியை 
அருணையில் ஆட்கொண்ட
அமரர் தலைவா
இந்த அப்பாவி 
அடியேனுக்கு மட்டும் 
அருள் செய்ய 
என்ன தயக்கம் ?

பழனி பதிக்கு நான் வந்ததில்லை
பாரோர் போற்றி வணங்கும்
உன்  திருவடியை நான் கண்டதில்லை 

புறங்கூறி திரியும்  நான்
பரங்குன்றில் உறையும் 
உன்னை தரிசித்ததில்லை

அகத்தியன் மூலம்
 தமிழ் வளர்த்தாய் 
அருணகிரி மூலம் 
சந்தங்கள் தந்தாய்
இந்த அடியவனுக்கு 
மட்டும் என்ன தந்தாய்? 
மாளா பிறவியில் 
உழல்வதை தவிர 

அனைத்தும் அறிந்த 
உன் தந்தைக்கு 
நீ உபதேசம் செய்கின்றாய் 
சுவாமிநாதனாக

ஒன்றும் அறியாது 
உன்னைமட்டும் என் சிந்தையில்
வைத்து வணங்கும் 
எனக்கு உபதேசம் செய்யும்
நாள் எந்நாளோ?

நறுமணம் கொண்ட
மலர்கள் பூத்து குலுங்கும் 
மருத மலையில் வீற்றிருப்போனே 
வள்ளி தெய்வயானையுடன் 
காட்சி தந்து வணங்குபவர்களுக்கு 
வரங்களை அள்ளி தருவோனே 

தங்க கவசம் சாற்றி நின்று 
அழகே உருவாய் 
நின்ற உன் வடிவத்தை 
தணிகை மலையில்  தரிசித்தேன் 
என் இதய தாபம் தீர 

உன் மீது பல்லாயிரம்
பாடல்கள் பாடிய 
பாம்பன் சுவாமிக்கு 
அருளியவா 

இந்த பாமரன் பாடிய 
இந்த ஒரு பாடலை 
மட்டும் ஏற்று அருள் 
செய்ய வாராய் 
என் அன்பு தெய்வமே 

நின் அருள் பெற 
இயலாமையினால்
பிதற்றினேன் 
சில வார்த்தைகள் 

சினம் கொள்ளாதே 
சிங்கார வடிவேலா 

சீரலைவாய் செந்தூரில்
உறைவோனே 
என் மன மாயை அகற்றி 
மனஇருள் நீக்கி
உன் அருளை தந்து 
என்னை ஆட்கொள்ளுவாயே 

 தி.ரா.பட்டாபிராமன்