Thursday, February 14, 2013

உங்களை நீங்களே ஏமாற்றிகொள்ளாதீர்கள் . விழித்துக்கொள்ளுங்கள்


உங்களை நீங்களே ஏமாற்றிகொள்ளாதீர்கள் .
விழித்துக்கொள்ளுங்கள் 

ஒரு சிறு கதையை படித்தேன் 
அதன் விளைவாக எழுந்தது இந்த கட்டுரை.

சிறுகதை .link to short story)https://docs.google.com/viewer?a=v&pid=gmail&attid=0.1&thid=13cd913e034cded7&mt=application/vnd.openxmlformats-officedocument.wordprocessingml.document&url=https://mail.google.com/mail/?ui%3D2%26ik%3Da0fc22a639%26view%3Datt%26th%3D13cd913e034cded7%26attid%3D0.1%26disp%3Dsafe%26zw&sig=AHIEtbQ0y-QkBCFPWIDXwjFd6EMmuDC8Cg

நண்பர் திருப்புகழ் புகழ் வி எஸ் .கிருஷ்ணன்
அவர்களின் கதையை படித்ததால்
தோன்றியது இன்றைய கட்டுரை. 

உங்களை நீங்களே ஏமாற்றிகொள்ளாதீர்கள் .
விழித்துக்கொள்ளுங்கள் 

அக்கால வாழ்க்கை முறையையும் இக்கால 
வாழ்க்கைமுறையையும்ஒத்திட்டு இக்காலத்தில் 
மக்கள் நிம்மதியின்றி வாழ்கிறார்கள் 
என்றும் பொருட்களை தேடி அலைகின்றார்கள்.
மனித உணர்வுகள் சுருங்கிவிட்டன என்றும் அதிலிருந்து 
விடுபட ஆதி சங்கரரின் அறிவுரைகளை 
கலந்து கொடுத்திருக்கிறீர்கள். நன்றாக உள்ளது. 

உங்களுக்கு ஒன்று தெரியுமா? 

ஆதி சங்கரர் துவக்கத்தில் பிரம்மமே சத்தியம்
நாம் காணுகின்ற இந்த உலகம் ஒரு மாயத்தோற்றம் என்றார்.
ஆனால் அது யாருக்கும் புரியவில்லை. 
எல்லாம் கண்முன் தெரிகிறது.தொடுகிறோம்,
உணர்கிறோம் எப்படி காண்பது எல்லாம் மாயம் ஆகும்.
என்று சாதாரண மனிதர்களுக்கு எப்படி புரியும்?
படித்தவர்களுக்கே புரியவில்லை. 

ஏனெனில் ஆதி சங்கரரே முடிவில் 
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் 
என்று  ஜபம் செய்யுங்கள்

நீ படித்தவைகள் எதுவும் உனக்கு உதவாது
என்று சொல்லிவிட்டதை புரிந்துகொண்டவர்கள்
விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே.

நம்முடைய பக்திஎல்லாம் கணவனை பார்த்ததும் 
தாலியை தொட்டு பார்த்துக்கொள்ளும் 
சில பெண்களைப்போல் உள்ளது. 
மசான வைராக்கியம் போல் உள்ளது
இவைகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது.

நம்முடைய பக்திஎல்லாம் 
கணவனை பார்த்ததும் தாலியை 
தொட்டு பார்த்துக்கொள்ளும் 
சில பெண்களைப்போல் உள்ளது.

மசான வைராக்கியம் போல் உள்ளது 
இவைகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது.
என்பதை என்பதை உணரவேண்டும் 

கணக்கற்ற பிறவிகள் எடுத்து
விலங்குகள்போல் வாழ்ந்துவிட்டோம்.

இந்த பிறவியிலாவது  நாம் இந்த அற்புத வாய்ப்பை
பயன்படுத்திக்கொண்டு, இந்த சேற்றிலிருந்து 
வெளிவர முயற்சி செய்ய வேண்டும்

அயற்சியில்லாமல் முயற்சி செய்யவேண்டும்
நாவை இறைநாமத்தை சொல்லுவதற்கு 
பயிற்சி அளிக்க வேண்டும்.
எல்லாம் அதிர்வுகள்தான்.

ஒரு மின்விசிறி மிக வேகமாக சுற்றும்போது
அது சுற்றாமல் நிற்ப்பதுபோல் தோற்றமளிக்கும்

அதுபோல்தான் இறைநாமத்தை 
மிக தீவிரமாக உச்சரிக்கும்போது.
நிற்ப்பதுபோல் தோற்றமளிக்கும் .
நம் மனம் இறைவனிடம் ஒன்றிவிடும் 
இவ்வுலகில் அது வேகமாக உழன்றாலும் கூட. 
.
அப்புறம் அதை ராமானுஜர் விளக்கினார்
எல்லாம் உண்டு.எல்லாம் உண்மை. 
மாயை நீங்கும் வரை .

அதற்க்கு ஸ்ரீமான் நாராயணனை சரணடையவேண்டும் 
அவன் யார். எங்கிருக்கிறான்? எப்படி இருக்கிறான்.?
எப்படி இருப்பான்? எப்படி அவனை சரணடைவது?
அதற்க்கு வழிமுறைகள் என்ன என்று
தானே வாழ்ந்து காட்டினார்? 

சிலர் அவரின் கருத்துக்களை ஏற்று கொண்டார்கள் 
ஆனால் புரிந்துகொண்டவர்கள். மிக சிலரே

மத்வர் அவதரித்தார். 
அவர் இன்னும் ஒரு படி கீழே இறங்கி வந்தார்
மக்களுக்கு புரியவைக்க. இறைவன் இறைவன்தான். 
நம் அவனுக்கு பக்தியுடன் தொண்டு புரிவதுதான்
நாம்உய்வடையும் வழி என்றார். 

அவரவருக்கு உகந்த வழியை தேர்ந்தெடுத்து
பலனடைந்தோர் பலர். 
பலர். எண்ணற்ற மக்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். 
அவர்களை பகவான் அவனுக்கே உகந்த முறையில் அவர்களை வழி நடத்திக்கொண்டிருக்கிறான்.

பொருள் ,பொன், மண், பெண், மீது பற்றுகொண்டவர்கள். 
இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டுஉண்டு 
என்பதை புராண இதிகாசங்களை படித்தவர்களுக்கு 
நிச்சயம் தெரிந்திருக்கும்.

அனைவரும் சாத்திரங்களை படிக்க முடியாது
படித்தவர்களும் அதன் உண்மை பொருளை அறிய முடியாது. 
அறிந்தாலும் அதை வாழ்வில் கடைபிடிக்க முடியாது. 
உலகில் எங்கு சென்றாலும் நம் மனம் நம்முடன்தான் இருக்கும். 
அதை காலி செய்து அதில் இறைவனை
நிரப்பினால்தான் விடிவுகாலம். 

ஆனால் அது முடியுமா? மிக கடினம் 
அதனால்தான் எல்லாவற்றையும் மகரிஷிகள் 
ஆராய்ந்து நமக்கு கொடுத்த பொக்கிஷம்தான் 
இறை நாமத்தை சதா சர்வ காலமும் 
சொல்லிக்கொண்டே இருப்பது 

நீ எந்த வேலை செய்தாலும்.
ஒரு கால கட்டத்தில் உன் மனம்  உன்னை அறியாமல்  
அவன் நாமத்தால் நிரம்பிவிடும்.
அப்போது அவன் உன்னை ஆட்கொண்டுவிடுவான் என்று.

ஆனால் யார் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். 
அவரவர் அவரவர் படித்த சாத்திரங்களை கொண்டு 
எந்த முயற்சிகளையும் செய்யாமல் விவாதங்களிலே
காலத்தை கழித்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் என்ன செய்ய? 
எல்லாவற்றிற்கும் ஒரு காலம் நேரம் வர வேண்டாமா? 
ஆனால் அந்த காலம் வரவேண்டுமென்றால் 
நாம் நாம் எந்த பணி செய்து கொண்டிருந்தாலும்  
இடை இடையே இறைவனின் நாமங்களை
சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்.

இல்லாவிடில் காலன்தான் நம்மை யறியாமல் வந்து
நம் உயிரை கவர்ந்து சென்றுவிடுவான் என்பதை 
எப்போதும் நினைவில் இருக்கவேண்டும்.


நான் மாட்டேன் என்றால் மீண்டும் மீண்டும் 
தாயின் கர்ப்பத்தில் பத்து மாதம் மூத்திரத்திலும்
மலத்திலும் அழுந்திகிடந்து வயிற்றில் எழும் 
வெப்பத்தினால் வெதும்பி இவ்வுலகத்திற்கு
வந்து இன்பங்கள், துன்பங்கள், துயரங்கள்
ஏமாற்றங்கள்.  இழப்புகள், போன்றவற்றை 
சந்தித்துதான் ஆகவேண்டும்? 

எது வேண்டும் என்பதை 
நீங்களே முடிவு 
செய்து கொள்ளுங்கள் . 

Pic.Courtesy-google 

2 comments:

 1. விளக்கங்கள் அசத்தல்... நன்றி ஐயா...

  ReplyDelete
  Replies
  1. மின்னல்போல் முதலில் வந்து
   கருத்தினை வெளிப்படுத்தியமைக்கு நன்றி

   Delete