Tuesday, February 5, 2013

ஆழி சூழ் உலகை படைத்த கண்ணா







ஆழி சூழ் உலகை படைத்த கண்ணா 

ஆழிமழை கண்ணா என்று ஆடிபாடி 
ஆண்டாள் உன்னை அடைந்தாள் கண்ணா

உன் அழகில் ஆழ்ந்து ஈடுபட்டு ஆழ்வார்கள் 
பாடி பரவிய பிரபந்த கான கண்ணா

உன் வடிவை காண்பதற்கோ
கண்டு மகிழ்வதற்கோ அன்றி
வேறு எதற்கு இந்த கண்கள் 

காணும் பொருளனைத்தும் நீயல்லவோ 
தின்னும் சோறும்,பருகு நீரும்,
உண்ணும் வெற்றிலையும் 

வெள்ளை உள்ளத்தை
பறை சாற்றும் வெண்ணையை கையிலேந்தி
உண்டு,லீலைகள் செய்த மாயவா
மதுசூதனா,அனைவரையும் மயக்கும் 
மனமோஹனா,உன் புகழ் விளம்புதர்க்கு எளிதோ

ஞானப்பாலை போர்களத்தில் அளித்தாய் 
வாழ்வு என்னும் போர்க்களத்தில் அன்றாடும்
போரிடும் எங்களுக்கு தெளிவு பெற 

குறைகள் நிறைந்த மனிதர்களை சரணடைவதை
விட்டுவிட்டு குறையொன்று மில்லாத உன்
பாதங்களை சரணடைந்தால் போதும் 
எங்கள் கலி தீர. 

முகுந்தா, முராரி, கோவிந்தா
 உன் திருவடிகளில் பக்தியை தருவாய்
அதற்க்கு  வேண்டிய சக்தியை தருவாய் 
வாழ்வின் முடிவில் முக்தியை தருவாய்.

அரும் பொருளென்று அமரர் கணம் 
உன்னை தொழுது ஏற்றுகிறது

நாங்களோ வெறும் பொருளை 
உன்னிடம் யாசிக்கிறோம்
உன்னை விட அவைகளைத்தான் 
அதிகம் நேசிக்கிறோம்.

உன் வடிவங்களை பூசிக்கிறோம். 
ஆனால் உன் வடிவங்களை உலகில் 
வலம் வரும் உயிர்களை ஹிம்சிக்கிறோம் 

என்னே பேதைமை. ?

ஆரா அமுதா உண்மை ஞானத்தை எங்களுக்கு தா

உதட்டளவில் உச்சரிப்போம் மந்திரங்களை
சுயனலதிர்க்காக செய்வோம் பல தந்திரங்களை
எந்திரங்களை வைத்து 

எங்கள் உயிர் தங்கிய இந்த உடல் 
என்னும் இயந்திரத்தை 
நீ இயக்குவதை உணராமல்.


2 comments:


  1. //ஆழி சூழ் உலகை படைத்த கண்ணா//

    இந்த படைப்பிற்கு ஏதாவது காரணம் உண்டா?


    //உன் வடிவை காண்பதற்கோ
    கண்டு மகிழ்வதற்கோ அன்றி
    வேறு எதற்கு இந்த கண்கள் //

    நான் இவரை பார்த்ததாக ஞாபகம் இல்லை. என் கண்களை இப்பொழுது என்ன பண்ணலாம்?

    //ஆழி சூழ் உலகை படைத்த கண்ணா// + //காணும் பொருளனைத்தும் நீயல்லவோ// கண்ணா உலகத்தை படைத்தாரா, அல்லது தன்னை பொருளாக மாற்றிக்கொண்டாரா?

    regards from

    kannan- abu dhabi.
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. முதலில் நாம் ஏன் இந்த உலகத்தில் பிறந்தோம் என்று ஆராய்ச்சி செய்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்

      Delete