Wednesday, February 27, 2013

யசோதையும் கண்ணனும் (பகுதி-2)


யசோதையும் 
கண்ணனும் (பகுதி-2)
























யசோதை: கண்ணா !
நம் வீட்டில்தான் ஏராளமான 
வெண்ணை இருக்கிறது
நானும் நீ கேட்ட 
பொழுதெல்லாம்  தருகிறேன், 
போதாக்குறைக்கு நீ வேறு 
எடுத்து உண்கிறாய் 
அப்படி இருந்தும் நீ ஏன் மற்ற 
ஆய்ச்சியர்களின் வீடுகளில் 
வெண்ணையை திருடி உண்கிறாய்? 

கண்ணன்: என் வயிறு மிகவும் பெரியது. 
அதற்குள்தான் அண்ட சராசரங்களும் உள்ளன. 
அவைகளில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் நான் உணவளிக்கவேண்டாமா?

நீ தரும் வெண்ணை எனக்கு போதாது.
மற்றவர்களை வெண்ணை தா 
என்று கேட்டால்.
ஒரு நாள் தருவார்கள்.
மறுநாள் விரட்டுவார்கள். 
அதனால்தான் நானே 
சென்று எடுத்துகொள்கிறேன். 
அதை அவர்கள் திருட்டு. என்கிறார்கள். 
உன்னிடம் புகார் செய்கிறார்கள்.

யசோதை : என்னடா 
ஏதேதோ சொல்கிறாய்.
ஒன்றும் புரியவில்லை 

நீ செய்யும்திருட்டுத்தனத்தை 
நியாயபடுத்த பெரிய 
வியாக்கியானம் வேறு செய்கிறாயே?

கண்ணன்: உனக்கு தெரியுமா.
ஒவ்வொரு ஆய்ச்சியும் 
இந்த கண்ணன் தன் வீட்டிற்கு வரமாட்டானா,
வந்து வெண்ணையை திருடி செல்லமாட்டானா 
அப்போது அவன் திருமுகத்தை பார்க்கமாட்டோமா 
என்று ஏங்குவது உனக்கு எப்படி தெரியும்?

யசோதை: ஏண்டா குறும்பு செய்கிறாய் 
என்று நான் கேட்டால் இப்படித்தான் 
ஏதாவது சொல்லி என்னை குழப்பி விட்டு விடுகிறாய்.

கண்ணன்: அம்மா குழப்பத்தை 
தெளிய வைக்கத்தான் 
நான் இவ்வுலகத்திற்கு வந்திருக்கிறேன். 
அந்த வேலையை 
நான் இன்னும் தொடங்கவே இல்லை.

பின்னாளில் மகாபாரதபோர் 
துவங்குவதற்கு முன்  பெருங்குழப்பத்தில் 
ஆழபோகும் அர்ஜுனனுக்கு
பகவத் கீதையை உபதேசிக்க போகிறேன்.

அதை வைத்துக்கொண்டு 
எதிர்காலத்தில் பலர் அதன் உண்மையை 
புரிந்துகொள்ளாது இன்னும்
மக்களை குழப்பப் போகிரார்கள். 

யசோதை: போதுமடா. 
உன் வியாக்யானங்கள்  
ஏதோ தெரியாமல் கேட்டுவிட்டேன். 
 நீ என்னவேண்டுமானாலும் செய்துகொள். 
உன்னை நான்ஒன்றும். கேட்கமாட்டேன். 

கண்ணன்: இப்போதுதான் நீ நல்ல அம்மா.
 நீ என்னை மட்டும் நினைத்துகொண்டிரு .
அதுவே போதும் நான் உன்னை
என் கண்ணின் மணி போல் 
வைத்து   காப்பாற்றுவேன்.

நான் செய்யும் செயல்களை
தன்னை எல்லாம் அறிந்தவர்கள் என்று 
நினைத்துக்கொண்டு கர்வத்துடன் அலையும் 
பண்டிதர்கள்போல் ஆராய்ச்சி செய்யாதே.
குழப்பம்தான் மிஞ்சும்.

ஆய்ச்சியர்கள்போல் அனைத்தையும் 
என்னிடம் விட்டுவிடு .
அவர்களை காப்பாற்றுவதுபோல் 
உன்னையும் காப்பேன் என்றான் 
அந்த மாயகண்ணன் 

யசோதை: சரிடா என் செல்லமே. 
என். கண்ணே என் உயிரே. என் ஆனந்தமே.
என் தெய்வமே 
நீ சொன்னால் எல்லாம் 
சரியாகத்தான் இருக்கும். . 


2 comments:

  1. தெய்வகுழந்தை கண்ணின் குறும்பு ரசிக்க மட்டுமல்ல
    அவன் அழகை கண்களால் பருகுவதற்க்காகவும்தான்
    படம் வரைந்தேன்

    ReplyDelete