Saturday, February 15, 2014

அபிராமி அந்தாதி (13) (பாடல்(6)அபிராமி அந்தாதி (13) (பாடல்(6)

அபிராமி அந்தாதி (13)

அபிராமி அந்தாதி (13)

பாடல்.6.

6: சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே 
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.- 
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே 
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
இந்த பாடலை இப்படி வரிசைப்படுத்துவோம் 
சிந்துர வண்ணப் பெண்ணே.- 
.சென்னியதுஉன் பொன் திருவடித் தாமரை.
மன்னியதுஉன் திரு மந்திரம்,- 
முன்னியநின் அடியாருடன் கூடிமுறை முறையே 
பன்னியது,என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

எல்லா உயிர்களும் வணங்கவேண்டியது
இறைவன் திருவடிகளைத்தான் 

அதுதான் 
அனைத்தையும் தாங்குகிறது

அதில்தான் 
அனைத்தும் தங்குகிறது 

அதிலிருந்துதான் பாவங்களைப் போக்கும் 
கங்கை ஊற்றெடுத்தது 

ஸ்ரீராமனின் திருவடிகளைத் தாங்கிய
பாதுகைகளுக்குத்தான் 
ராமாயணத்தில் பரதன் முடி சூட்டினான்ஸ்ரீராமனின் சார்பாக 
14 ஆண்டுகள் நாட்டை ஆண்டான்.

நாராயணனின் திருவடிதான்
மூவுலகையும் அளந்தது நாராயணனின் திருவடிதான் 
தேவர்களை துன்புறுத்திய மாஹபலியை 
பாதாள  உலகிற்கு அனுப்பியது. காலத்தை கடந்து வாழும் ஈசனின் திருவடிகளைப் பற்றிய 
மார்க்கண்டேயனை பற்ற வந்த காலதேவனை 
உதைத்து காப்பாற்றியது  ஈசனின் பாதியாய் 
இருந்த அன்னையின் திருவடியே இறைவனின் வடிவாக விளங்கும்
சத்குருவின் பாதுகைகள் தான் 
குருவின் சக்தி முழுவதையும் தாங்கி 
அடியார்களுக்கு  அருள் செய்கிறது.உடலில் உள்ள அனைத்து நரம்புகளின் தொகுதிகளும் பாதத்தில்தான்  இணைந்துள்ளன என்று  யோக சாத்திரம் கூறுகிறது 

ஞானிகளின் திருவடிகளை வணங்குவதன் மூலம் ஆன்மீக சக்தி 
,அருள் சக்தி வணங்குபவர்களுக்கு பாய்கிறது. அது அவர்களுக்கு, நம்பிக்கையையும்,நன்மையையும், மனதிற்கு நிம்மதியையும் அளிக்கிறது.

தன்னுள்ளே இறைவனை உணர்ந்தவர்கள் திருவடிகள் 
சக்தியுடையவை. அனைத்தையும் அளிக்கக்கூடியவை. 
ஆதனால்தான் திருவடி தாமரைகள் என்று அழைக்கிறோம்.

அதை வணங்குபவர்கள் உள்ளம் ஆதவனைக் கண்ட
தாமரை  மலர் போல் மலரும். 

பெற்றோர்களின் திருவடிகளை வணங்குபவன் 
வாழ்வு சிறக்கும். இறைவனின் பாதுகைகளின் மகிமையை விளக்கி ஒரே இரவில் 1000 ஸ்லோகங்களை ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் அருளிச் செய்துள்ளார்   

அப்படிபட்ட திருவடி தாமரைகளை உடைய அபிராமியின் பொற்பாதங்கள்  தன் தலையில் எப்போதும் 
இருந்து அருள் செய்யட்டும் என்கிறார் அபிராமி பட்டர் 

மனிதர்களின் உள்ளம்  எப்போதும்
யானையின் துதிக்கை போல் ஆடிக்கொண்டே இருக்கும்.

கடலில் அலைகள் வருவதும் போவதுமாய் மனதில் எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.

உறங்கும் வரை  மனம் உள்ளும் புறமும் 
வந்து போய்க்கொண்டே இருக்கும். 

அதன் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் 
யானையின் துதிக்கையில்  ஒரு சங்கிலியைக் கொடுத்துவிட்டால் அது அதை ஆட்டிக்கொண்டே இருக்கும். தலையில் மண்ணை அள்ளிப்போடும் செயலை  விட்டுவிடும் 

அதுபோல் மனதிற்கும் அபிராமியின் நாமத்தை 
உச்சரிக்க செய்துவிட்டால் அது வேறு எதையும்  நாடாது.

நெற்றியில் ஒளிவீசும் சிந்தூர நிறத்தில் காட்சி தரும் அன்னையின் வடிவத்தை உள்ளத்தில் நிலை நிறுத்தி அவள் நாமத்தை மனது 
சிந்தித்துக்கொண்டிருக்கும்.நான் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டேன் என்கிறார் பட்டர் 

இந்த உலகில் கடைத்தேற வேண்டுமென்றால்
நல்லோர் கூட்டுறவு வேண்டும் .

பத்து நல்லவரோடு ஒரு தீயவன் சேர்ந்தால்  அவன் நல்லவனாகிவிடுவான். 

அதேபோல் 10 தீயவனோடு சேர்ந்தால் 
ஒரு  நல்லவன் சேர்ந்தால் அவன் தீயவனாகிவிடுவான் 

.எனவே இதை உணர்ந்துதான் அபிராமியின் அடியார்களோடு தன்னை எப்போதும் இணைத்துக்கொண்டுவிட்டேன்  என்று பட்டர் கூறுகிறார்.

மனம் உலக விஷயங்களில் நாடாவிடாது அன்னையின் வழிபாட்டு முறைகளில் கவனம்  செலுத்தினால் நம்முடைய வாழ்வு நன்மை பயக்கும் மகிழ்வான வாழ்வாக அமையும்.

நாமும் பட்டரின் பாதையைப் பின்பற்றுவோம்.
நம்முடைய கடமைகளை அவளின் 
அருளோடு நிறைவு செய்வோம்.  
     
படங்கள்-கூகிள்-நன்றி 

2 comments:

  1. யோக சாத்திரம் சொல்வது உண்மை தான் ஐயா... பட்டர் தகவல்கள் உட்பட அனைத்தும் சிறப்பு... நாராயணனின் திருவடி படம் மிகவும் அருமை...

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete