Friday, February 7, 2014

அபிராமி அந்தாதி (9) ((ஸ்ரீ பெரியவா விளக்கவுரை ) அபிராமியும் காமாட்சியும் )

அபிராமி அந்தாதி (9)

அபிராமி அந்தாதி (9)

(ஸ்ரீ பெரியவா விளக்கவுரை )
அபிராமியும் காமாட்சியும் 

அபிராமி அந்தாதியை பற்றி தொடர்ந்து சிந்தித்து வரும் நாம் அது தொடர்பாக் வந்த ஒரு தகவலை வலையன்பர்களுக்கு சமர்பிக்கிறேன். 

அபிராமி அந்தாதியும் -காமகோட்டமும்
-------------------------------------------------------------
மேலுள்ள தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள் . அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது. நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள் " அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா ?", என்றார் . நான் " இல்லையே ! அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார் " என்றேன். ஸ்ரீ பெரியவர்கள் , "அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான் பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும் . "எப்படின்னு தெரியுமா? என்று சொல்லியபின் , அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டை சொன்னார்கள் . 

" துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. "

இந்தப் பாட்டில் சொல்லியிருக்கும் ஆயுதங்கள் எல்லாம் திருகடையூர் அபிராமி அம்பாளின் கையில் இல்லை . இந்த ஆயுதங்கள் கூடிய திரிபுர சுந்தரியின் கருஞ்சிலா மூர்த்தி காஞ்சியில் உள்ள காமாக்ஷியைத் தவிர வேறு எங்குமில்லை. " பிறகு பெரியவர்கள் " காமாக்ஷி எந்த ஆசனம் போட்டு உட்கார்ந்திருகிறாள்?" என்று கேட்டபோது , நான் "பத்மாசனம் " என்றேன். அதற்கு பெரியவர்கள் " இல்லை "யோகாசனம்" என்று கூறி தானே யோகாசனம் போட்டு காட்டினார்கள் . பிறகு "இந்த யோகாசனத்தில் இருபாதங்களும் ஒன்றாக இணையும் . சுக்ஷும்னா நாடி தானாக மேலே கிளம்பும். அம்பாள் கோவிலில் காமாக்ஷி , அசார்யாள் , துர்வாசர் ஆகிய மூன்று மூர்த்திகளுமே யோகாசனத்தில் தான் இருகின்றன" என்று சொல்லி பெரியவர்கள் என்னை அழைத்து போய் காட்டினார்கள் .
WITH PRANAMS
N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan(SRI KARYAM)                   

1 comment:

  1. அறியாத சிறப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete