Thursday, February 6, 2014

குறை ஒன்று (ம் ) இல்லை மறை மூர்த்தி கண்ணா !(part-3)


குறை ஒன்று (ம் ) இல்லை

மறை மூர்த்தி கண்ணா !(part-3)






    குறை ஒன்று (ம் ) இல்லை 
மறை மூர்த்தி கண்ணா ! (பகுதி-3)






இந்த உலகில் பிறவி எடுப்பதே
ஒவ்வொரு ஜீவனும்
முற்பிறவிகளில் செய்த
நல்வினை தீவினைகளுக்கான
இன்பம் துன்பம் ,துக்கம், துயரம்,
போன்ற சம்பவங்களை
அனுபவிதது தீர்த்து மனம் அமைதி அடைந்து
இனி வரும் பிறவிகளில்
நல்லதொரு ஜீவனாக வாழ்ந்து
பிறப்பு இறப்பு என்னும் சுழலிலிருந்து 
விடுபட்டு நீங்கா ஆனந்தம் பெற்று 
வாழவேண்டும் என்பது விதி.

இன்பங்களும் துன்பங்களும் வருவது
எதனால்என்பதை  உணர்ந்து கொண்ட
ஞானிகள் அதை அமைதியாக
ஆர்பாட்டமின்றி அனுபவித்து தீர்க்கிறார்கள் .

இந்தஅறிவற்றவர்கள் தனக்கு வரும்
துன்பங்களை அனுபவிக்க மறுப்பதுடன்
அவைகளை போக்கி கொள்ள ஏதாவது வழிகள் உண்டா
என்று தேடி மேலும் பல துன்பங்களை
வரவழைத்துக் கொள்கின்றனர்

அதுபோதாதுஎன்றுதன்னுடையதுன்பங்களுக்கு இயலாமைக்கு  முயற்சியின்மைக்கு மற்றவர்களை
குறை கூறுவதும், யாரும் அகப்படாவிட்டால்,
கடவுளின் மீது குறை கூறுவதும்,
கோள்களை காரணம் காட்டுவதும்,
போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் இந்த உலகில் ஒருவன்
பிறவி எடுத்துவிட்டால்
அது கடவுள் அவதாரமாகட்டும்
தன்னை   உணர்ந்த ஞானிகளாகட்டும்
மெத்தப் படித்தவனாகட்டும் ,பாமரனாகட்டும்
வினைகளின் பயன்களிலிருந்து
தப்புவது இயலாத காரியம்

ஆனால் அவைகளை எதிர்கொள்ளும்
ஆற்றல்தான்  மனிதருக்கு
மனிதர் வேறுபடுகிறது

சிலர் எதற்கும் 
வாயேதிறப்பதில்லை

சிலர் புலம்பித் தீர்க்கிறார்கள் 
அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் 
புலம்ப வைத்துவிடுகிறார்கள் 

சிலர் எதையும் கண்டுகொள்வதே இல்லை 
அவர்கள் பாட்டிற்கு அவர்கள்
வேலைகளைப் பார்த்து கொண்டு 
போய்க்கொண்டிருக்கிறார்கள் 


சிலர் பிரச்சினைகளைக் 
கண்டு ஓடி ஒளிகிறார்கள் 
சிலர் எதிர்த்துச் சமாளிக்கிறார்கள் 

சிலர் அதை பெரிதாக எடுத்துக் 
கொள்வதேயில்லை 

சரி வந்துவிட்டது என்று முடங்காமல், 
அடுத்து என்ன செய்யலாம் என்று
சிந்திக்கத் தொடங்குகிறார்கள். 

பலர் துன்பங்கள் விலகிவிட்டாலும்
அது விட்டு சென்ற வடுக்களை 
நெஞ்சில் சுமந்து கொண்டு
அதையே மீண்டும் மீண்டும்
நினைத்து சோகத்தில் ஆழ்கிறார்கள்.

அவைகளை மனதை விட்டு 
வெளியேற்ற முயற்சி  எடுப்பதில்லை

அதனால்அந்த நினைவுகள் அவர்களின் மனத்தில் 
நிரந்தரமாக தங்கி அவர்களின்
எதிர்காலத்தையே அழித்துவிடுகிறது.

இன்பங்களும் துன்பங்களும் வாழ்வில்
அடிக்கடி வந்து போகும் ஒரு 
அங்கம் அனுதினமும் வந்து போகும்
பகலும் இரவும் போல்
என்று நினைப்பவர்கள் 
அதில் சிக்கிக் கொள்வதில்லை.

அவர்களின் வாழ்க்கைபயணம்
ஓடத் தொடங்கி விடுகிறது.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
அது ஓடிக்கொண்டே இருக்கிறது

நாமும் அதனுடன் ஓடினால்தான்வாழ்வில்
நிலைத்து நிற்கமுடியும்.

இல்லாவிடிலஉயிருள்ளநமக்கும்
உயிரற்ற   சடலத்திற்கும் 
வேறுபாடில்லாமல் போய்விடும்.



சரி ராஜாஜிஅவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து
நிகழ்ந்த சில சம்பவங்களைக் காண்போம்.

அப்போதுதான் அவர் சந்தித்த சோகங்களும்
துயரங்களையும் நாம் உணர முடியும்.

பொதுவாக அவருடைய வாழ்க்கையைப் பார்த்தால்
அது மகிழ்சிகரமான வாழ்க்கை என்று  கருத இயலாது.

காலன் தன்னுடைய வேலையைக்
காட்ட அவர் குடும்பத்தை தத்து
எடுத்துகொண்டான் போலும்.

அவரின் 37 வது வயதில் அவரின் மனைவி
அலர்மேல்மங்கா மறைந்தார்.

அவள் மறைந்தபோது அவரின்
குழந்தை லக்ஷ்மிக்கு 
3 வயதுதான் ஆகியிருந்தது
.
ஒரு புறம் மனைவியை இழந்த சோகம்.
மறுபுறம் தாயில்லா இந்த சிறு குழந்தையை
எப்படி வளர்ப்பது  என்ற கவலை ஒரு புறம்.

அடுத்து விழுந்தது ஒரு இடி.
அவர் மருமகன் வரதாச்சாரி இறந்தார்
தன்னுடைய 26 வயது  மகள் 
நாமகிரியை விதவையாக்கிவிட்டு.

மீண்டும் ஒரு சோகம்
அவரைத் தாக்கியது

அவரின் அடுத்த மருமகன்  தேவதாஸ்காந்தி
(மகாத்மா காந்தியின் மகன்)  மரணத்தை தழுவினார்
அவருடைய இளைய மகள் லக்ஷ்மியை
45 ஆவது வயதில் தவிக்கவிட்டு.  

தொடர்ந்து ராஜாஜி வாழ்வில் ஏற்பட்ட துயரங்களைக்
கண்டமகாத்மா காந்தி அவருக்கு ஒரு தந்தி அனுப்பினார்"

இறைவனைத்தான் நீங்கள் மலை போல்
துணையாகக் கொள்ள வேண்டும் "என்று.

தன்னுடன் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்த
திரு வெங்கடராமனிடம் , ராஜாஜி கூறினார். 

இவ்வளவு முதிய வயதில் துன்பங்களை
தாங்கிக்கொள்வது ஒரு பெரிய விஷயமில்லை
என்றும் நாம் அடுத்த தலைமுறையினரின்
துன்பங்களையும் தாங்கிக்கொண்டு
அவர்கள் வெற்றிகரமாக நல்ல  வாழ்க்கை 
வாழ வழி  வகுப்பதைப்  பற்றி சிந்திக்க வேண்டும் 
என்று கூறினாராம்.



ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். 

A politician will think about his stay in power
whereas a Statesmen think about the next generation என்று

மலை என்றவுடன் வைணவரான அவருக்கு ஏழுமலை என்று அழைக்கப்படும் திரு வேங்கடமலையும்   அதன் மேல் யுகம் யுகமாக நின்றுகொண்டு அனைவரையும் காப்பாற்றும் கண்ணனின் நினைவு வந்தது போலும்!

அந்த உணர்வில்தான் பிறந்தது "குறை ஒன்றும் இல்லை என்ற பாடல் "

இன்னும் வரும். 

No comments:

Post a Comment