Sunday, February 16, 2014

அபிராமி அந்தாதி (14) (பாடல்(7)

அபிராமி அந்தாதி (14) (பாடல்(7)

அபிராமி அந்தாதி (14)

அபிராமி அந்தாதி (14)

பாடல்.7.





பாடல்:7.

7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவிதளர்வு இலது ஓர் 
கதியுறுவண்ணம் கருது கண்டாய் -கமலாலயனும், 
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும் 
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.

இந்த பாடலை கீழ்கண்டவாறு வரிசைப்படுத்துவோம் 

ததியுறு மத்தின் சுழலும்
என் ஆவிதளர்வு இலது ஓர் 
கதியுறுவண்ணம் கருது கண்டாய்
கமலாலயனும், 
மதியுறுவேணி மகிழ்நனும்
மாலும்வணங்கி
என்றும் துதியுறு சேவடியாய்.

நமது உள்ளம் பால் போல்
வெள்ளையாக இருக்கவேண்டும்

பரம்பொருள்   ஒளி மயமானது 
அது பரமாத்மா எனப்படுகிறது



அதிலிருந்து  ஒளிச் சுடர்கள்
தெறித்து விழுகின்றன

அவ்வாறு தெறித்து விழுந்த
கோடிக்கணக்கான துகள்கள்தான் 
அண்டங்களாகவும்,பஞ்ச பூதங்களாகவும்
ஜீவாத்மாக்களாகவும் ஆகின 

ஒளி  மயமான ஆன்ம துகள்கள்
ஒவ்வொன்றும் பஞ்ச பூதங்களில் கூட்டுறவில்
உண்டான உடலில்  என்று  புகுந்ததோ
அப்போதே அது தன்னை அதனுடன்
இணைத்துக்கொண்டு தான் யார்
என்பதை மறந்து போனது

இறைவனை விறகில் மறைந்து கிடக்கும் தீ என்கிறார் ,
கண்ணிற்குத் தெரியாமல் பாலினுள் நிற்கும் நெய்
என்கிறார் இறைவனை உணர்ந்த அடியார்.ஒருவர்

அப்படி பாலினுள்  இருக்கின்ற
நெய்யினை எப்படி பிரிப்பது?

அதில் புரை ஊற்றி தயிராக்கி கடைந்தால்
அதிலிருந்து  வெண்ணையை உருக்கினால்
நெய் தனியே  .பிரிந்து வரும்.

மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என
ஐம்புலன்களுடன் கலந்துவிட்ட உயிர் தன்னுள்ளே
 உறையும் ஆன்மாவை அறிவதெவ்வாறு ?

இது போதாதென்று எண்ணிலடங்கா
எண்ணங்களை தன்னுள் வைத்துக் கொண்டு
உள்ளும் புறமும் கனவும் விழிப்புமாக ,
மயக்கமாக வந்து போய்க்கொண்டிருக்கும்
அதனுடன் சேர்ந்துகொண்டால்
விடிவுகாலம்தான் ஏது ?

இப்படிப்பட்ட தயிர் உள்ள பாத்திரத்தில்
நெய்யைப் பிரிக்க மத்தைப் போட்டு கடைகிறார்கள்.

 மத்து அதுவாகச்  சுழல்வதில்லை
அதைக் கயிர் கொண்டு சுற்றி
மாறி மாறி  இழுக்கிறார்கள்..

அதுபோல்தான் உயிர்  இந்த உடல்
என்னும் .பாத்திரத்தில் புலன்களுடனும்
எண்ணங்களுடனும் சிக்கிகொண்டது.

நன்மை தீமை, விருப்பு வெறுப்பு,
இன்பம் மற்றும் துன்பம், பாவம் புண்ணியம் என
சேர்த்து முறுக்கிவிடப்பட்ட கயிற்றினால்
முன்னும் . பின்னும் இழுக்கப்படுகிறது.



அதைப்போல்தான் என்னுடைய
உயிர் தயிர் பாத்திரத்தில் கடையும் மத்துக்கட்டைபோல்
சிக்கிக்கொண்டு கடையப்படுவதை போல்
பரிதவிக்கிறேன் என்று அபிராமி பட்டார்  கூறுகிறார்.

அது எப்படி  ஓய்வு இல்லாது
நானும் இந்த பிறவியை எடுத்து அல்லபடுகின்றேன்.
 மனமும் உடலும் தளர்ந்து போய்விட்டேன்.

இன்பம் என்றும் துன்பம் என்றும்,
 நன்மை என்றும் தீமை என்றும், நல்வினை என்றும் தீவினை என்றும்,
 காமம் ,சினம் முதலிய உணர்ச்சிகளாலும்  அலைகழிக்கப்படும் உயிர் படும் துன்பம் சொல்ல தரமன்று.

இந்த துன்பத்திலேயே உழன்று மீண்டும் பிறந்து இறந்து அல்லல்படவேண்டியுள்ளது

ஒரு கடுகு அளவு இன்பத்திற்காக
மலையளவு துன்பத்தை அனுவிக்க வேண்டியுள்ளது.

இப்படி நான் படும் துன்பத்தையெல்லாம் நீ பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய்.

பாற்கடலில் பள்ளி கொண்ட நாராணனின்



வயிற்றில் தோன்றிய தாமரையில் உதித்த பிரம்மனும்,
அவன் துணைவியாக விளங்கும் கலைமகளும்


காக்கும் கடவுளாம் திருமாலும் போற்றி வணங்கும் சிவந்த திருவடிகளையுடைய அபிராமியே உன்னை
மறவாமல் எப்போதும்  துதிக்கின்றேன்.

நீதான் என் மீது கருணை கொண்டு
இந்த துன்பத்தினின்றும் விடுவித்து காத்து
அருள்வாயாக என்று பட்டர் அபிராமி
அன்னையை வேண்டுகின்றார்.

நாமும் மனமுருகி நம் துன்பங்கள்
தீர பிரார்த்தனை செய்வோம். 

படங்கள்-நன்றி-கூகிள் 





1 comment:

  1. அன்னை அனைவருக்கும் அருள் புரியட்டும் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete