Wednesday, February 26, 2014

பிருகு மகரிஷி (2)

பிருகு மகரிஷி (2)


 பிருகு மகரிஷி (2)

பல யுகங்களுக்கு முன்னால் 
சரஸ்வதி நதிக்கரையில் 
ஒரு பெரிய யாகம் 
ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்க பெருமை வாய்ந்த 
பல  முனிவர்களும் 
வேத பண்டிதர்களும் அங்கு கூடினர். 
அப்போது பிருகு மகரிஷியும் 
அங்கு வந்திருந்தார் 

அப்போது அவர்களிடையே இந்த 
மகா யாகத்தின் முதற்ப்பலனை 
மும்மூர்த்திகளில் யாருக்கு தருவது 
என்று சிந்தித்தபோது 
ஒரு முடிவும் எட்ட  முடியவில்லை. 

ஏனென்றால்   புராணங்களில் தெய்வங்களும் 
காம க்ரொதாதி குணங்களுக்கு ஆட்பட்டு நடந்துகொண்டதாக 
சம்பவங்கள் வருவதால் இந்த உயர்ந்த யாகத்தின் பலனை சத்வம்,ரஜோ,மற்றும் தமோ குணங்களை வென்ற 
ஒருவருக்குதான் பலனை அளிக்க வேண்டும் என்று 
அவர்கள் முடிவு செய்தனர். மனிதர்களை சோதிக்கும் தெய்வங்களையே
சோதிக்க எண்ணி. அந்த வேலையை 
செய்ய பிருகு   மகரிஷியிடம் ஒப்படைத்தனர்.


பிருகு மகரிஷியும் முதலின் பிரம்மாவை 
சோதிக்க சத்ய   லோகத்திற்கு புறப்பட்டார். அங்கு சென்றதும் பிரம்மாவைக் கண்டதும் 
அவரை வணங்காமல் அவருக்கு சினமூட்டும் 
வகையில் நடந்துகொண்டார். 
உடனே பிரம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது. உடனே அவர் மகரிஷியை தண்டிக்க எழுந்தார். 
ஆனால் சரஸ்வதியோ பிரம்மாவை 
சாந்தப்படுத்தி அவரை காப்பாற்றினார்.  

இருந்தும் அவரின் அடாத செயலைக் கண்டித்து 
பிருகு மகரிஷி பிரம்மாவிற்கு கலியுகத்தில் 
யாரும் பிரம்மாவை வணங்கமாட்டார்கள் அ
வருக்கு ஆலயங்கள் இல்லாமல் 
போகட்டும் என்று சாபமிட்டார். 

அதனால்தான் அவருக்கு இவ்வுலகத்தில் 
புஷ்கர் என்ற இடத்தில மட்டும்தான் கோயில் உள்ளது 
மற்ற இடங்களில் கிடையாது. அடுத்து அவர் சிவன் உறையும்
கைலாச மலைக்கு சென்றார்.
அங்கு சென்றவுடன் அவரை .
சிவனும் பார்வதியும் தனித்து உள்ளார்கள்
எனவே தற்போது அவரை பார்க்க முடியாது
என்று நந்திதேவர் தடுத்தார் .உடனே கோபமுற்ற பிருகு மகரிஷி
இனி சிவனுக்கு  லிங்க உருவில்தான் வழிபாடு .
உருவ வழிபாடு இல்லாமல் போகட்டும் என்று சாபம் இட்டார்.
ஆனால் காசியில் மட்டும் மகாம்ரித்துன்ஜய
ஆலயத்தில் மட்டும்  சிலா வடிவம் உள்ளது

அடுத்து அவரின் பயணம்
விஷ்ணு பகவான் உறையும் வைகுண்டம்
நோக்கி தொடங்கியது .
அவரின்  அனுமதியின்றி உள்ளே நுழைந்தார் .அப்போது விஷ்ணு கண் மூடி
 நித்திரையில் படுத்திருந்தார்.


உள்ளே சென்ற மகரிஷி அவரை
உறக்கத்திலிருந்து எழுப்பினார்.ஆனால் அவர் உறக்கத்திலிருந்து   எழவில்லை .

உடனே கோபம் கொண்ட மகரிஷி
அவரின் மார்பில் எட்டி உதைத்தார்.அவர் எட்டி உதைத்த போது அவர் மார்பில்
காலடிச் சுவடு ஏற்பட்டது .அந்த வடுதான்
ஸ்ரீவத்சம்  எனப்படுகிறது .உடனே மகாவிஷ்ணு
உறக்கத்திலிருந்து விழித்தார்.
தன் மார்பில் மகரிஷி காலால் எட்டி
உதைத்ததை கண்டு சிறிதும் பதட்டப்படாமல்மகரிஷியே தங்கள் காலில்
ஒரு காயமும்  படவில்லையே
என்று அன்போடு வினவினார்.மேலும் மகரிஷியே என் மார்பு   மிக உறுதியானது.
ஆனால் உங்களின் கால் அந்த அளவு
உறுதியானது  அல்லவே என்றார்.


அவர் மகாவிஷ்ணுவின்
பெருந்தன்மையான குணத்தைக் கண்டு
அவர்தான் மும்மூர்த்திகளில் உயர்ந்தவர்
என்றும் மகா யாகத்தின் முதற் பலனை
பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர் என்று
முடிவு செய்து அதை மற்ற முனிவர்களுக்கு அறிவித்தார்.


பகவான் கீதையில் கண்ணபிரான் அனைத்து உயிர்களிலும்   தான் தான் ஆன்மாவாக உறைகின்றேன்  என்று . அறுதியிட்டுக் கூறியுள்ளான் .அந்த நோக்கில் அவன் பிருகு மகரிஷியை வேறு மனிதராகக் கருதாமல் தன்னில் ஒரு பகுதியாகக் கருதியதால்தான் முனிவர் தன்னை அவமதிப்பதாகக்  கருதவில்லை  என்பதே
நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய  பாடம்..

இந்த உண்மையை உணர்ந்தவர்களே
பிரம்ம ஞானிகளாக விளங்க முடியும்.
சர்வம் பிரம்ம மயம்  என்று சொல்லும் தகுதி
அவர்களுக்கு மட்டுமே உண்டு.

இன்னும் வரும்

படங்கள்-நன்றி-கூகிள் 

4 comments:

 1. /// தன்னில் ஒரு பகுதியாகக் கருதியதால் தான் ///

  மற்றவர்களிடம் தன்னை காண்பது தான் உண்மையான ஆன்மிகம் என்பதை சொல்லும் விளக்கம் ஐயா...நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தங்களின் கருத்துரைக்காக :

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.html

  ReplyDelete
 3. பிரம்மா, சிவன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனை நாராயணனுக்கு முன்னரே தெரிந்து விட்டதோ...! :)))

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 4. பிறரில் த்ன்னைக் காணுதல்
  அற்புதம் ஐயா
  நன்றி

  ReplyDelete