மனம் படுத்தும் பாடு (2)
மனம் என்று ஒன்று
இல்லாவிட்டால் என்ன ஆகும்?
மனதை ஒழித்துவிடு அல்லது
அழித்துவிடு அல்லது
மனம் என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடு என்று
சில மகான்கள் சொல்லுகிறார்கள்.
அதன் உண்மைப் பொருள்
என்னவாக இருக்க முடியும்?
மனம் என்ற ஒன்று
இல்லாமல் இருக்க முடியுமா ?
இந்த உலகில் இயங்க முடியுமா
என்ற கேள்வி பலருக்கு எழும்
மனம் என்றால் என்ன?
அது எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?
அது எவ்வாறு செயல்படுகிறது ?
அதை செயல்பட வைப்பது எது ?
மனதை முழுவதுமாக அழிக்க முடியாது
அது ஒரு மாபெரும் சக்தி
அது உளதை இலதாக்கும்
இலதை உளதாக்கும்
எனவே அதை நெறிப்படுத்தி நம் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்து நமக்கு நன்மை தரும் வகையில்
பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
சில மகான்கள் மனதிற்கு உபதேசம் செய்கிறார்கள்
மனமே நீ அங்குமிங்கும் அலையாமல் ஒருமையுடன் நின்று
எனக்கு நான் நினைத்ததை அடைய உதவி செய்வாயாக என்று .
மனதை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி நம் புத்திக்கு இருக்கிறது.
அதற்கு நமக்கு நல்ல புத்தி இருக்க வேண்டும்
தீய புத்தி இருக்ககூடாது
ஏனென்றால் மனம் என்பது கூரான கத்தி போன்றது
அது அதை பயன்படுபவர்களின் சக்தியையும் நோக்கத்தையும்
பொறுத்து அது நமக்கு நன்மையையோ தீமையையோ விளைவிக்கும்.
நமக்கு நல்ல புத்தியை தருவது அந்த இறைவன்தான்
அதற்கு நாம் இறைவனை நம் புத்தியில் வைத்து
போற்றி தொழ வேண்டும். என்று திருமூல தேவர்
திருமந்திரத்தில் கூறுகின்றார்.
அவர் கூறும் இந்த முக்கியமான அருளுரையை ஏற்போம்
உண்மைப் பொருளை உணர்ந்திட உரிய வழி வகைகளை
ஆராய்ந்து தெளிவோம். .